காய்கறியின் பயன்கள்

தாவரங்களும் தாவரத்தின் பாகங்களும் நமது பிரதான உணவில் ஒரு பகுதியாக இடம் பெறும். வெப்பம் அல்லது சமையல் காரணமாக காய்கறிகளின் சத்துமதிப்பு குறைந்து போகும். தாவரத்தின் இலைகளும், தண்டுகளும் வைட்டமின் மற்றும் தாதுக்களை உயர் அளவில் கொண்டிருக்கும். அவற்றை பச்சையாகவே (சாறுவடிவில்) உண்ணும்போது உடம்புக்கு தகுதியையும், நலனையும் அளிக்கும்.

1. பீட்ரூட், 2. முட்டைக்கோசு, 3. கேரட், 4. வெள்ளரிக்காய், 5. முருங்கைக்காய், 6. வெந்தயம், 7. வெங்காயம், 8. உருளைக் கிழங்கு, 9. முள்ளங்கி, 10. தக்காளி, 11.கத்தரிக்காய், 12. கருணைக்கிழங்கு, 13. கொத்தவரை, 14. வெண்டைக்காய், 15. மணித்தக்காளி,

தாவரங்களும் தாவரத்தின் பாகங்களும் நமது பிரதான உணவில் ஒரு பகுதியாக இடம் பெறும். வெப்பம் அல்லது சமையல் காரணமாக காய்கறிகளின் சத்துமதிப்பு குறைந்து போகும். தாவரத்தின் இலைகளும், தண்டுகளும் வைட்டமின் மற்றும் தாதுக்களை உயர் அளவில் கொண்டிருக்கும். அவற்றை பச்சையாகவே (சாறுவடிவில்) உண்ணும்போது உடம்புக்கு தகுதியையும், நலனையும் அளிக்கும்.

காயோ பழமோ பச்சையாக சாப்பிடுகிறபோது நிறைய சத்துக்களைப் பெறமுடியும். பழங்களும் காய்கறிகளும் அவற்றில் உள்ள சத்துக்களில் பெரும்பகுதி அழிந்துவிடும். காய்கறிகளில் உள்ள அயன்ச்சத்தும் (Iron) கால்ஸியமும் இப்படித்தான் காணாமல் போய்விடுகின்றன.

Also Read : வெள்ளைப் பூண்டு அதன் மருத்துவ பயன்கள்!!!

"காரட், பசலை, சர்க்கரைவள்ளி போன்ற மஞ்சள் நிறக் காய்கறிகளையும் கோஸ் போன்ற இலைக் காய்கறிகளையும் பச்சையாக உண்டால் வைட்டமின் ஏ, ரைபோஃப்ளேவின் மற்றும் அயச்சத்தை அதிக அளவு பெற முடியும்."

நோய்க்கான காரணங்களும் பரிகாரங்களும் :-

நோய்கள் பெரும்பாலும் இரண்டு காரணங்களில் வரும். ஒன்று மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய குளிர்ச்சி. வெப்பம் அதிகமானால் கொப்புளம், கட்டி, தலைவலி, வாந்தி, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, ஒவ்வாமை, வயிற்றுப் போக்கு வரும்.

வெள்ளரி, எலுமிச்சை, பூண்டு, வெங்காயம், தக்காளி, வாழைக்காய், பப்பாளி இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும். குளிர்காலத்தில் பல்வலி, ஈறுவலி, காதுவலி, இருமல், ஜலதோஷம், மார்ச்சளி, ஆஸ்துமா, தாழ் இரத்த அழுத்தம் போன்ற உபாதை நீக்கலாம்.

வெப்பம் தரக்கூடிய காரட், பீட்ரூட், முந்திரி, வேர்க் கடலை, பட்டாணி மற்றும் பருப்பு வகைகளைப் பயன்படுத்தி உபாதை நீக்கலாம்.

1. பீட்ரூட் மருத்துவ பயன்கள் (Beta vulgaris subsp, vulgaris Conditiva Group)

பீட்ரூட் கிழங்கில் இருந்து ஊறுகாய், சட்னி, ஸாலட் (Salad) தயாரிக்கலாம். உருளையைப் போன்று அவித்தும் உண்ணலாம். பித்தம் காரணமாக உண்டாகும் உமட்டல். வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு பீட்ரூட் சாறு (Juice) நல்லது.

பீட்ரூட் கிழங்கில் இருந்து ஊறுகாய், சட்னி, ஸாலட் (Salad) தயாரிக்கலாம். உருளையைப் போன்று அவித்தும் உண்ணலாம். பித்தம் காரணமாக உண்டாகும் உமட்டல். வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு பீட்ரூட் சாறு (Juice) நல்லது.

இக் கிழங்கினால் மலமிளகி மலச்சிக்கல் நீங்கும். இச்சாற்றுடன் எலும்மிச்சம் பழச்சாறும் கலந்து பருக அனைத்து குடற்கோளாறுகளும் சரியாகும். ஈரல் கோளாறு, இரத்தத்துடன் கூடிய வயிற்றுக்கடுப்பு இவற்றை குறிப்பாக சொல்லலாம்.

படுக்கைக்குச் செல்லும்போது அரை முதல் ஒரு டம்ளர் கஷாயம் வரை பருகலாம். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட சிறுநீர் பிரியும். காலையில் உணவுக்கு முன் சாப்பிடலாம்.

பீட்ரூட் கஷாயத்துடன் சிறிதளவு வினிகர் கலந்து தேய்க்க தலையில் உள்ள பொடுகு தலையெடுக்காமல் போகும். பீட்ரூட் கிழங்கை சமைத்து உண்ண நரம்புகள் வலுப்படும். இரத்த அழுத்தத்தை சீர்செய்யும் பீட்ரூட் சாறுடன் சமஅளவு காடி கலந்து தடவிவர ஆறாத புண்ணும் ஆறும்.

2. முட்டைக்கோசு மருத்துவ பயன்கள் (Brassica oleracea var, capitata)

முட்டைக்கோசை பச்சையாக ஸாலட் (Salad) தயாரித்து உண்ணலாம். அவித்தும் சமைத்தும் உண்ணலாம். ஆனால் பச்சையாக உண்ணும்போது அனைத்து சத்துக் களையும் குறையாமல், கெடாமல் பெறமுடியும்.

முட்டைக்கோசை பச்சையாக ஸாலட் (Salad) தயாரித்து உண்ணலாம். அவித்தும் சமைத்தும் உண்ணலாம்.

பச்சையாக உண்ணும்போது எளிதில் சீரணமாகும். அதிகநேரம் சமைத்தது சீரணத்துக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். குடல் இயக்கத்தைத் தூண்டி முறையாக மலம் கழிக்க உதவும் பொருள் ஒன்று முட்டைக்கோசில் உண்டு.

விரும்பத்தகாத விளைவுகள் எதுவும் இன்றி உடனடியாக செயல்படுத்துவது சமைக்கப்படாத முட்டைக்கோசு ஆகும். இதனுடன் சிறிதளவு உப்பு, கருமிளகு, எலுமிச்சைசாறு சேர்த்து உண்ண வேண்டும். இந்தத் தயாரிப்பில் முட்டை கோசை துண்டுகளாய் அரிந்து கொள்ள வேண்டும்.

சாற்றின் ருசியை மேம்படுத்திக் கொள்ள அத்துடன் அன்னாசி அல்லது தக்காளி அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இந்த சாற்றினை குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்து குடித்தால் மணமாக இருக்கும்.

முட்டைக்கோசில் உள்ள டார்ட்க்ரானிக் அமிலம் நம் உடம்பில் சேரும் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்பாக மாற்றப்படுவதைத் தடுக்கும். உடல்வாகு அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வித உபத்திரவமுமின்றி மெலிவதற்கு ஏற்ற வழி முட்டைக்கோசு ஸாலட் (Salad) உண்பது தான்.

Also Read : 12 வகையான கீரைகள் அதன் மருத்துவ பயன்கள்!!!

வயிற்றுப்புண், கொப்புளம் (Eruption) சுட்டபுண் (Blister) தொற்றுரணம் இவற்றுக்கு முட்டைக்கோசு இலையைக் கொண்டு கட்டுப்போடலாம். இலைகளில் உள்ள அழுத்தமான நரம்புப் பகுதிகளை நீக்கிவிட்டால் சுருட்டிக் கட்டுப்போட வசதியாக இருக்கும்.

முட்டைக்கோசு இருதயத்தை பலப்படுத்தும். பித்த மயக்கம், காய்ச்சல், சிறுநீரக்கோளாறுகள், மூலநோய் ஆகியவற்றிற்கு நல்லது. இலைச்சாற்றுடன் சர்க்கரை கலந்து பருகினால் காசநோய் வருவதை தடுக்கும்.

3. கேரட் மருத்துவ பயன்கள் (Daucus carota subsp)

கேரட்டை தோல் சீவக்கூடாது. தோலுக்கு நெருக்கமாகத் தான் தாதுக்கள் உள்ளன. பச்சையாகவோ. சமைத்தோ உண்ணக்கூடிய கிழங்கு இது. அல்வா போன்ற இனிப்பு செய்யவும், குழம்பு, பொரியலை செய்யவும் கேரட் பயன்படும்.

கேரட்டை தோல் சீவக்கூடாது. தோலுக்கு நெருக்கமாகத் தான் தாதுக்கள் உள்ளன. பச்சையாகவோ. சமைத்தோ உண்ணக்கூடிய கிழங்கு இது. அல்வா போன்ற இனிப்பு செய்யவும், குழம்பு, பொரியலை செய்யவும் கேரட் பயன்படும்.

கேரட் சாறு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கிற பானம். கண்களுக்கு வலிமையைத் தரும். பெண்களுக்கு கேரட் விதைகளை தங்களுடைய கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பப்பையின் சுவர்களில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு காரணமாகும்.

சாப்பாட்டிற்கு பிறகு ஒரு கேரட்டை மென்று தின்றால் கெடுதல் விளைவிக்கக்கூடிய கிருமிகள் அழிந்துவிடும். பற்களைச் சுத்தமாக்கும். ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கும். பற்சிதைவுயுந்தான்.

கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் ஒரு இயற்கை நிவாரணி, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும்.

கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையும், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பெருகும். கேரட் விதை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கோப்பை பசும்பாலில் வேகவைத்து பருகினால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் பெருகும். மாதவிடாய் சீராகும். வெள்ளைப்படுவது நிற்கும்.

புற்றுநோய், எலும்புருக்கி, சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட் சாறுடன் பாலும் தேனும் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.

4. வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள் (Cucumis sativus)

வெள்ளரி ஸாலட் தயாரிப்பிலும், சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. ஊறுகாய் தயாரிக்கலாம். சமைத்தும் உண்ணலாம். பச்சையாக உண்ணலாம். கோடையில் உண்ண குளுமை அடையும். பித்தத்தைக் குறைக்கும் சீரணத்துக்கு உதவும். தாகத்தைத் தணிவிக்கும். ஒவ்வாமையைத் தடுக்கும்.

வெள்ளரி ஸாலட் தயாரிப்பிலும், சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. ஊறுகாய் தயாரிக்கலாம். சமைத்தும் உண்ணலாம். பச்சையாக உண்ணலாம். கோடையில் உண்ண குளுமை அடையும். பித்தத்தைக் குறைக்கும் சீரணத்துக்கு உதவும். தாகத்தைத் தணிவிக்கும். ஒவ்வாமையைத் தடுக்கும்.

மற்ற காய்கறி. தானியங்கள். கொட்டைகளுடன் வெள்ளரியை சேர்த்து உண்ண அவற்றின் சத்துக்கள் மேம்படும். வழக்கமாக தக்காளி, முள்ளங்கி, லெட்டூஸ், பீட், கேரட்டுடன் ஸாலட் செய்வதில் பயன்படும். ஸாலட் வகையுடன் தயிர் சேர்த்து உண்ண அது ஊட்டச்சத்து மிக்க சுவையான உணவாகிவிடும்.

தினமும் இரண்டு வெள்ளரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது ஒரு நம்பகமான மலமிளக்கி.

கீழ் வாதத்தில் அவதிப்படும் நோயாளிகளுக்கு வெள்ளரிச் சாற்றுடன் கேரட், பீட்ரூட் சாறும் கலந்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிப்பழ சாற்றுடன் உப்பு அல்லது சர்க்கரையைக் கலந்து பருகிட தாகம் தணிந்து புத்துணர்ச்சி உண்டாகும். வெள்ளரி விதைகளை வெய்யிலில் உலர்த்தி தோலைப் பிரித்தெடுத்தால் உள்ளிருக்கும் பருப்பை மருந்தாக பயன்படுத்தமுடியும். காய்ச்சிய பாலில் வாதுமைப்பருப்பையும் வெள்ளரி விதைகளையும் ஊறவைத்து தேன் கலந்து பருக உடம்புக்கு வலிமை கிடைக்கும்.

5. முருங்கைக்காய் மருத்துவ பயன்கள் (Moringa oleifera)

முருங்கை இலைப்பகுதியில் இருந்து சாறெடுத்து வடிகட்டி பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இச்சாறு சுத்தி செய்யும், எலும்புகளை வலுப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்புச்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறு களுக்கு முருங்கை இலை சூப் நல்ல பலனை அளிக்கும். தொண்டை, மார்பு மற்றும் சரும உபாதைகளுக்கு முருங்கை இலை, பூவில் தயாரிக்கப்பட்ட சூப் குணமளிக்கும்.

முருங்கைப்பூவைக் கொண்டு (பால் சேர்த்து) தயாரிக்கப் படுகிற சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண். பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும்.

Also Read : கீரை வகைகள் மற்றும் மருத்துவ பயன்கள்!!!

முருங்கை இலையை வாணலியில் வதக்கி அடிபட்ட காயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். முருங்கை இலைச் சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

முருங்கைக்காய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன் இருதய நோய்களைப் போக்கி இரத்தவிருத்தி, தாதுவிருத்தி செய்யும். மேனி அழகை மேம்படுத்தும். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய் கீல்வாயு, முதுகுவலி குணப்படும்.

6. வெந்தயம் மருத்துவ பயன்கள் (Trigonella foenum-graecum)

தினமும் வெந்தயக்கீரையை அரைத்து மூகத்தில் பூசிக் கொண்டால் (படுக்கப்போகும் போது) பருக்கள் வராது. முகத்தின் வறட்சி, சுருக்கம் மறையும். கரும்புள்ளிகள் நீங்கும். நிறத்தை மேம்படுத்தும். இளமையாய் தோன்றச் செய்யும்.

வெந்தயக்கீரையை கடைந்து தேன்விட்டு உண்ண குடல் புண் குணமாகும். வெந்தயக்கீரை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டுவர தலைவலி தலைசுற்றல். உறக்கமின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

7. வெங்காயம் மருத்துவ பயன்கள் (Allium cepa)

வெங்காயம் சிறுநீரைப் பெருக்கும், கபம் நீக்கும், சரும நிறத்தை சிவப்பாக்கும். சிவ்ப்பு வெங்காயத்தைவிட வெள்ளை வெங்காயம் மருத்துவகுணம் மிக்கது வதக்கிய சமைத்த வெங்காயம் சீரணிக்க நேரமாகும். பச்சை வெங்காயம் எளிதில் சீரணமாகும்.

வெங்காய விதை விந்து உற்பத்தியை அதிகரிக்கும். சிறுநீர் சம்பந்தமான நோய்களிலிருந்து விடுவிக்கும். வெங்காயத்தால் வைட்டமின் ஏ, தயமின், ஆஸ்கார்பிக், அமிலத்தின் மூலமாக இருக்கும்.

தினமும் 100 கிராம் வெங்காயத்தை உட்கொண்டு வந்தால் இருதய நோய் மட்டுமல்ல உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இரத்த கொலஸ்ட்ரால் கட்டுப்படும். வெங்காயம் காலராவுக்கு சிறந்த பரிகாரம். 30 கிராம் வெங்காயத்துடன் ஏழு கருமிளகும் வைத்து குழவியால் (Pestle) தூளாக்கி காலரா நோயாளிக்கு தர வேண்டும்.

வேப்பங்கொழுந்து ஒரு கைப்பிடியுடன் இரண்டு வெங்காயம். இரண்டு மிளகு சேர்த்து நன்கு அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட குடற்புண் ஆறும் குடற்புழுக்கள் வெளியேறும்.

பச்சை வெங்காயத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட இரத்த வாந்தி, வயிற்றுப்புண்ணில் ஏற்படும் வீக்கம் குணமாகும். வெங்காயத்துடன் மோர் (உப்பு) சேர்த்து பருக வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிகரெட் புகையால் உண்டாகும் நச்சுத்தன்மையை வெங்காயம் முறிக்கும். தினமும் நான்கைந்து சிறிய வெங்காயத்தை துண்டுகளாக்கி மென்று தின்ன வேண்டும்.

8. உருளைக் கிழங்கு மருத்துவ பயன்கள் (solanum tuberosum)

உருளை அதிக அளவு ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இதனை வேகவைத்தோ, சுட்டோ, சமைத்தோ உண்ணலாம். சிறு சிறு சீவல்களாக்கி வறுத்தும் உண்ணலாம், கூட்டு பொரியல், குழம்பு என்று சமைக்கலாம்.

காய்கறிச்சத்துப் பற்றாக்குறையில் ஏற்படும் சொறி கரப்பான் வியாதிகளுக்கு உருளை ஒரு சிகிச்சை முறை உருளையின் தோலை நன்றாகக் கழுவிவிட்டு சிலநிமிடம் கொதிக்க விட்டு கஷாயம் தயாரிக்கலாம். இதனை வடிகட்டி தினமும் மூன்று, நான்கு வேளை பருகிவரலாம்.

பச்சையான உருளைக்கிழங்கின் சதைப்பகுதியை துண்டுகளாக்கி சருமத்தில் தேய்க்க சுருக்கங்களும் முதுமையில் தோன்றக்கூடிய மற்ற குறைபாடுகளும் நீங்கும்.

உருளையை அதிகம் உண்டால் வாயுத் தொல்லை ஏற்படும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் இதனை ஒதுக்கி விடலாம்.

9. முள்ளங்கி மருத்துவ பயன்கள் (Raphanus sativus)

முள்ளங்கியை சாம்பார், பொரியல் செய்து உண்ணலாம். முற்றாத கிழங்குகள் தாம் உண்பதற்கு ஏற்றவை. முற்றியவை நார் மிகுந்தது, சுவையற்றதாகும்.

சிறுநீர் கழிக்கையில் உண்டாகும் எரிச்சலை தீர்க்கும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கல் இவற்றுக்கு முள்ளங்கிச் சாற்றை தினமும் ஒரு வேளையாக பதினைந்து நாட்கள் கொடுத்துவர உபாதை நீங்கும்.

ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச்சாற்றுடன் சம அளவு தேனும், கல்லுப்பு சிறிதளவும் கலந்து கொடுக்க வறட்டு இருமல், மார்புச்சளி கரகரப்பு குணமாகும். தினமும் மூன்று வேளை கொடுத்துவர வேண்டும். 

முள்ளங்கி இலைகளை மஞ்சல்காமாலைக்குப் பயன்படுத்தலாம். இலைகளை நசுக்கி சாறெடுத்து வடிகட்டவும். ருசிக்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். தினமும் முள்ளங்கி சாற்றை அரைக்கிலோ அளவு கொடுத்துவர வேண்டும். இதில் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Also Read : அழகை பராமரிக்க உதவும் உணவு வகைகளை பயன்படுத்துவது எப்படி?

வெள்ளை நிற முள்ளங்கி சிவப்புநிற முள்ளங்கியை விட மருத்துவ குணத்தில் சிறந்தது. முள்ளங்கிக்கிழங்கு மூலநோய், விக்கல், வயிற்றுப்புண், காலரா நோய்களுக்கான சிகிச்சையில் உதவும். முள்ளங்கிச் சாற்றுடன் கேரட்சாறும் சேர்த்துப் பருகினால் அது உடம்பில் உள்ள சளிப்படலத்தை சுத்தம் செய்யும்.

10. தக்காளி மருத்துவ பயன்கள் (Solanaceae) (nightshade)

தக்காளி புத்துணர்ச்சி அளிக்கும். எளிதில் சீரணமாகும். வயிற்றுக் கோளாறுகளிலும், ஈரல் கோளாறுகளிலும் நல்ல குணமளிக்கும். தக்காளியை சமைத்துண்டாலும், சூப் தயாரித்து உண்டாலும் சரீரம் வலுப்படும். தக்காளி சாற்றுடன், உப்பு, மிளகுப்பொடி சேர்த்துக் கொடுத்தால் கர்ப்பிணிகள் ஆரம்பகால வாந்தி நிற்கும்.

தக்காளி சாற்றுடன் தேன் கலந்து பருக இரத்தம் சுத்தப்படும். பழத்தை வேகவைத்துக் கட்டி வர புண் விரைவில் குணமாகும். வயிற்றுக்கடுப்பு நோய்க்கு பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றுடன் உட்கொள்ள வேண்டும். தக்காளியை அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம்.

அதனுடைய கூழ்பகுதியை முகத்தில் தாராளமாகப் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடலாம். மாலைக்குருடு, கிட்டப்பார்வை கோளாறு ஆகியவற்றை தடுக்க தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ சத்து உதவுகிறது. தினமும் காலையில் ஒரு தக்காளி தின்றுவர சிறுநீர்ப் பாதையில் கல் தோன்றாதவாறு தடுக்கலாம். தக்காளி சிறுநீரில் உள்ள அமில அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்றுக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

ஒரு டம்ளர் தக்காளி சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு, மிளகு சேர்த்து அதிகாலையிலேயே பருகுவது பித்தம், அசீரணம், ஈரல் மந்தம், குடலில் மிதமிஞ்சிய வாயு உற்பத்தி, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

ஒரு டம்ளர் தக்காளி சாற்றுடன் தேனும் ஒரு சிட்டிகை ஏலப்பொடியும் கலந்து பருக வேண்டும். சயம் மற்றும் நுரையீரல் கோளாறுகளில் நிவாரணம் பெற இது உதவும்.

11.கத்தரிக்காய் மருத்துவ பயன்கள் (Solanum melongena)

கூட்டு, பொரியல், சாம்பாரில் உபயோகிக்கலாம். பத்தியமுறை உணவில் பெயர் பெற்றது. வாத, பித்த, கபதோஷங்களில் வரும் தொந்தரவுகளைப் போக்கி ஆரோக்கியத்தை உண்டாக்கும்.

வெப்ப மிகுதியில் ஏற்படும் மலச்சிக்கலும் கத்தரி ஏற்றது. பிரசவித்த பெண்கள் பத்திய உணவாகக் கொள்ளலாம். நாட்பட்ட கோழைக்கட்டு எளிதில் குணமாக உதவும்.

கத்தரிக்காய் பசியைத் தூண்டும். இரத்தத்தை சுத்திகரிக்கும். சிறுநீர்கழிக்கும் போது கடுகடுப்பு இருந்தால் அதை மாற்றும். காசம், இருமலுக்கு நல்லது. இக்காயை மிகுதியாக உட்கொண்டால் உடம்பில் சொறி, சிரங்கு, அரிப்பு உண்டாகும்.

12. கருணைக்கிழங்கு மருத்துவ பயன்கள் (Amorphophallus paeoniifolius)

கருணை நமைச்சல் உள்ளது. எனவே இதனைத் துண்டுகளாக நறுக்கி சிறிது உலர்த்தி கழுநீரில் கழுவி சமையலுக்கு பயன்படுத்தலாம். சாம்பார் பொரியல், பொடிமாஸ், கூட்டு வறுவல் என்று பலவகைகளில் சமைத்து உண்ணலாம்.

புதுக்கிழங்கு தான் நாக்கை பதம் பார்ப்பது, பழைய கிழங்கை உபயோகித்தால் தொல்லையில்லை. சீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும். இரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கல், வயிற்றிரைச்சல், வயிற்று வலி, மூலம் முதலிய வியாதிகளுக்கு பரிகாரமாக அமையும்.

சொறி, சிரங்கு, சுரப்பான் போன்ற சரும உபாதைகளைக் குணப்படுத்தும். கருணைக்கிழங்கு லேகியம் மூல நோய்க்கு நிவாரணம் தரும்.

13. கொத்தவரை மருத்துவ பயன்கள் (Cyamopsis tetragonoloba)

கொத்தவரை கொத்து கொத்தாக காய்ப்பது. வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர் கொத்தவரை. சமைத்து சாப்பிட ருசியானது. நோய் தீர்க்கும் தன்மை குறைவு. பொரியல். சாம்பார் வைத்து சாப்பிடலாம். 

பத்திய மருந்து சாப்பிடுவோர் இந்தக் காயை சாப்பிட்டால் மருந்து முறிவாகும். வாத, பித்த, சிலேத்தும தேகிகள் இதனை சாப்பிட்டால் இது தோஷத்தை மிகைப்படுத்தும்.

எலும்பு, பல் உறுதிப்பட கொத்தவரை உதவும். பித்த மயக்கத்தைப் போக்கும். மாலைக்கண் நோயைக் குணப்படுத்த உதவியாக இருக்கும்.

14. வெண்டைக்காய் மருத்துவ பயன்கள் (Abelmoschus esculentus)

பாஸ்பரஸ் சத்து மிகுதியாக உண்டு. யாவரும் ருசித்து உண்பது. கூட்டு, பொரியல், சாம்பார் செய்து சாப்பிட உதவும். விதை முற்றாத வெண்டைப்பிஞ்சுகளை கற்கண்டு சேர்த்து நாளும் உண்டுவர வெள்ளைபடுதல் (பெண்களுக்கு). விந்து முந்துதல் கண்ணெரிவு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

ஆணோ, பெண்ணோ பாதிக்கப்பட்டவர் இதனை ஒரு சிகிச்சை முறையாகக் கருதி மூன்று வேளை உட்கொள்ள வேண்டும். தலையில் வரும் பொடுகு நீக்க ஷாம்பு தேவை இல்லை. பிஞ்சு வெண்டைக்காயை சிலவற்றை அரைத்து தலையில் தேய்த்தாலே போதும். சிறுநீர் தொடர்பான உபாதை களையும் வெண்டைக்காய் தீர்க்க வல்லது.

வெண்டைக்காய் இரத்த உற்பத்திக்கு அவசியமானது. உடல் வளர்ச்சிக்கான உயிர்ச்சத்துகள் அனைத்தும் கொண்ட இந்தக்காய் மூளை. இருதயம் மற்றும் சீரண உறுப்புகளை வெளிப்படுத்தும், ஞாபக சக்தியை மேம்படுத்தும். வெண்டைக் காய் சிறுகுழந்தைகளுக்கு பச்சையாகவே உண்ணக் கொடுக்கலாம்.

15. மணித்தக்காளி மருத்துவ பயன்கள் (Solanum nigrum)

மணித்தக்காளி கீரையை கூட்டுசெய்து உண்ண வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். மார்புச்சளி மறையும். கீரைக்குள்ள குணங்கள் பலவும் மணித்தக்காளி வற்றலுக்கும் உண்டு. இது மலத்தை இளக்கும். வற்றலை நெய்யில் பொரித்து சாப்பிட வாந்தி நிற்கும், கோழை வெளியேறும்.

மணித்தக்காளியில் இரண்டு வகை உண்டு. (பச்சை மணித்தக்காளி கருப்பு மணித்தக்காளி) உட்சுரம், கண்ணீரிவு, கபவாத தொல்லைகள் நீக்கும். மேனியை அழகுபடுத்தும்.  வெப்பத்தை தணிக்கும். பித்தாதிக்கத்தை கட்டுப்படுத்தும். சீரணக் கோளாறுகளை சரி செய்யும்.

Also Read : பெண்கள் உடலை அழகாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?

Previous Post Next Post