வெள்ளைப் பூண்டு வைத்தியம்

வெள்ளைப் பூண்டு ஆண்டு முழுவதும் வளரும் செடி. குறுகிய அகலம் உள்ள. தட்டையான இலைகளும், வெள்ளைப் பூக்களும், குமிழ் மொட்டுக்களும் கொண்டது. வெள்ளை நிற காகிதம் போன்ற உறையால் மூட்டப்பட்டிருக்கும் வெங்காயத்தை விட வெள்ளைப் பூண்டின் மணம் அழுத்தமாக இருக்கும்.

வெள்ளைப் பூண்டு ஆண்டு முழுவதும் வளரும் செடி. குறுகிய அகலம் உள்ள. தட்டையான இலைகளும், வெள்ளைப் பூக்களும், குமிழ் மொட்டுக்களும் கொண்டது. வெள்ளை நிற காகிதம் போன்ற உறையால் மூட்டப்பட்டிருக்கும் வெங்காயத்தை விட வெள்ளைப் பூண்டின் மணம் அழுத்தமாக இருக்கும்.

வெளிநாடுகளில் பூண்டு கிருமி நாசினியாகவும், உடல் சருமத்தில் ஏற்படும் அழுகிய நிலையையும் குணமாக்கும் மருந்தாகவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ் முறைகளில் பூண்டு பலவிதமான ஜீரணக் கோளாறுகளை அகற்றும் முக்கியமான மருத்துவ மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

 வெள்ளைப் பூண்டு பயன்களும் மருத்துவ குணங்களும்:-

பூண்டில் அமைந்திருக்கும் கால்சியம் உடலின் எலும்புகளை வலிமைப்படுத்த உதவும். குறிப்பாக பற்களின் உறுதிக்கு இது பேருதவி புரியும். சமையலில் சேர்க்கும் போது மிளகாய், புளி போன்ற பண்டங்களை மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். மிளகாய், புளி போன்றவை பூண்டின் மருத்துவ ஆற்றலை வெகுவாகக் குறைத்துவிடும்.

பூண்டை சமைத்து உண்டாலோ நல்ல பலன் கிடைக்கும் என்றாலும், பச்சையாக உண்டால் பூண்டினால் ஏற்படும் பலன் மிகச் சிறப்பாக அமையும். குழந்தைகளுக்கு மாந்தம் - கபக் கோளாறுகள் இருந்தால், வசம்பு, பூண்டு, திப்பிலி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, வெந்நீரில் கலந்து புகட்டினால் நல்ல பலன் கிடைக்கும். ஈஸ்னோ பிலியா நோயாளிகளுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகச் சொல்லப் படுகிறது.

உடலுக்குத் தேவையான முக்கிய சக்தியாக கருதப்படும் கார்போஹைடிரேட் என்னும் சத்துப்பொருள் பூண்டில் அமைந்துள்ளது. புரதச் சத்து பூண்டில் நிறைய உள்ளது. உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளில் குறிப்பிடத் தக்கது வைட்டமின் 'சி' சத்தாகும்.

Also Read : அருகம்புல் பயன்கள் அதன் மருத்துவ குறிப்புகள்!!!

பசும்பாலில் பூண்டை வேகவைத்து, பூண்டைச் சாப்பிட்டு விட்டு, பாலைக் குடித்தால் சாயுக் கோளாறுகள் உடனே அகலும். மூச்சுத் திணறல் இருந்தால் உடனே நல்ல குணம் தெரியும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. அன்றாடம் உணவோடு சேர்த்தால் எந்த ஒரு பிணிகள் எளிதாக பற்றாது. ஜீரணக் கோளாறுகளுக்கு பூண்டை விட நல்ல மருந்தே கிடையாது. மூலநோய் தொந்தரவுகளை விலக்கவும் இது துணை புரிகிறது.

வைட்டமின் சத்து போதிய அளவுக்கு இல்லாவிட்டால், உடலில் தோன்றும் புண்கள் எளிதில் ஆறமாட்டா, எலும்புகள் பலவீனமடையும். குறிப்பாக பல் ஈறுகளில் பல்வேறு விதமான நோய்கள் உண்டாகும். சருமத்தில் சொறி, சிரங்கு, பாதிப்புகள் வரும்.

கை, கால்களில் சுளுக்கு ஏற்பட்டால் பூண்டுச் சாற்றைத் தடவி நன்றாக நீவி விட்டால் சுளுக்கு துரிதமாகச் சரியாகும். பூண்டு சாற்றிலிருந்து தைலம், தயார் செய்து காதுவலி, நெஞ்சு வலி ஆகியவற்றுக்கும் பயன்படுத்துகிறார்கள். ஒற்றைத் தலைவலிக்கு பூண்டு சாற்றுடன், தைலச் சாற்றைக் கலந்து நெற்றியில் தடவி வந்தால் ஒற்றைத் தலைவலி உடனே குணமாகும்.

உஷ்ணத்தை உண்டாக்கி வாயுவை முற்றிலுமாக அகற்றுகிறது. இது நோய் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் உடையது. பூண்டை அன்றாடம் ஏதோ ஒரு வகையில் பக்குவம் செய்து உணவோடு உட்கொண்டால் இதயத் துடிப்பை இயல்பாகச் செய்யும். இரத்த அழுத்தத்தை சமப்படுத்தவும்,

நுரையீரல் தொடர்பான பிணிகளைக் குணமாக்கவும் பூண்டு உதவுகிறது. பூண்டை நம் உணவில் நாள்தோறும் சரியான அளவில் சேர்த்துக் கொண்டால் நமக்குத் தேவையான வைட்டமின் 'சி' சத்து கிடைக்கப்பெறும்.

மலட்டுத் தன்மை நீங்க :-

வெள்ளைப் பூண்டு, திப்பிலி, மிளகு, வெள்ளை குன்றில் வேர், வெள்ளைச் சாரணைவேர், கண்டங்கத்திரி வேர் ஆகியவை வகைக்கு பத்து கிராம் எடுத்து துளசி சாற்றில் அரைத்து நீரில் கலக்கி வீட்டு விலக்கான மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் கர்ப்பப்பையில் உள்ள குறைகள் நீங்கி கர்ப்பம் உண்டாகும். இப்படி மூன்று மாதம் தூரமான நாட்களில் சாப்பிட்டு வர வேண்டும்.

இரத்த அழுத்த நோய்க்கு :-

ஏழு நாட்கள் மட்டும் காலை வெறும் வயிற்றில் மூன்று புதிய கம்மாறு வெற்றிலையுடன் மூன்று பூண்டின் பருப்பை வைத்து நன்றாக மென்று சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர இரத்த அழுத்த நோய் குறையும்.

ஆனந்த வாயுவுக்கு :-

வெள்ளைப் பூண்டு 100 கிராம் எடுத்து, தோல் உரித்து சுத்தம் செய்த பின், பதினாறு வெள்ளைப் பூண்டை சேர்த்து அரைத்து விழுதாக ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என்று மூன்று நாட்கள் சாப்பிட ஆனந்தவாயு நீங்கும்.

குடல் வாதத்திற்கு :-

வேளை வேர், கழற்சிப் பருப்பு வெள்ளைப் பூண்டு, முருங்கைப்பட்டை, சுக்கு ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் இடித்து ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் நீர் வைத்து அதில் மருந்து பொடிகளைப் போட்டு கொதிக்க வைத்து, நன்றாக நீர்கண்டி 200 மி.லி. ஆன பிறகு அதை கொடுக்கவும். பிறகு தழுதாழைச் சாறு 200 மி.லி. விளக்கெண்ணெய் 100 மி.லி. ஆகிய இரண்டையும் கலந்து கொடுக்க குடல்வாத நோய் தீரும்.

இடுப்பு வலிக்கு :-

வெள்ளைப் பூண்டு, நல்ல வெல்லம் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து தினசரி சாப்பிட்டு வர இடுப்பு நோயானது தீரும். நோய் தீர்ந்த பின்பு பேதிக்குச் சாப்பிட சுகம் ஏற்படும்.

முதுகுத்தண்டு வாதத்திற்கு :-

வெள்ளைப்பூண்டு, கருந்துளசி இவைகளை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து 5 மி.லி. சாறுடன் ஒரு சிட்டிகை வெங்காரப்பொடி கலந்து உள்ளுக்கு சாப்பிட்டு, முதுகுத்தண்டில் தேய்த்து வந்தால் குணம் ஏற்படும்.

சௌமிய சுரம் நீங்க :-

நல்லெண்ணெய் 2 லிட்டர், எருக்கண் பழுப்புச்சாறு, சுக்கு, இந்துப்பு, அதிமதுரம், திப்பிலி மூலம், வெள்ளைப் பூண்டு ஆகிய இவைகளை வகைக்கு 150 கிராம் எடுத்து இடித்து சலித்து அந்தத்தூளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். பிறகு தினமும் அந்தத் தைலத்தை தடவி சிறிதுநேரம் கழித்து குளித்துவர நோய் தீரும். படிப்படியாக சுரம் நீங்கும். 

குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் போது ஏற்படும் வயிற்றுப்போக்கு நீங்க :-

குழந்தைக்கு பல் முளைக்கும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டியாகவும், சில சமயம் நீராகவும் அடிக்கடி போகும். ஆகாரம் சாப்பிட்டவுடன் மலம் கழிந்தால், தின்ற ஆகாரம் அப்படியே நீருடன் கலந்து வெளியாகும். இதற்கு மருந்து தயார் செய்து கொடுக்கலாம்.

வெள்ளைப்பூண்டு, தை வேளை இலை, வசம்பு ஆகியவைகளை வகைக்கு பதினைந்துகிராம் எடுத்து, நைய நசுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நூற்று ஐம்பது கிராம் நீர்விட்டு அடுப்பில் ஏற்றி காய்ச்ச வேண்டும். நன்றாக சுண்டி வந்த பிறகு வடிகட்டி சீசாவில் நிரப்பி மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை இரண்டு வேளை தினமும் காலை, மாலை என்று இரண்டு தேக்கரண்டி அளவு கொடுக்க குணமாகும்.

Also Read : காய்கறி வகைகள் அதன் மருத்துவ பயன்கள்!!!

வயிற்று உப்புசம் :-

சிறுநீர் இறங்காமல் அடிவயிறு உப்பி வாயுவினால் வேதனைப்படும் நிலை ஏற்பட்டால் வெள்ளைப் பூண்டை நசுக்கி, நன்றாக அரைத்து தொப்புள் மீது வைத்துக் கட்ட சிறுநீர் இறங்கி வயிற்று உப்புசம் தணிந்து வேதனை நீங்கும்.

அலகுப் பூட்டுக்கு :-

முருங்கைப்பட்டை, வசம்பு. வெள்ளைப் பூண்டு, பெருங்காயம் இவைகளை தைவேளைச் சாறு விட்டு இடித்து துணியில் முடிந்து மூக்கில் நசியமிட நோய் தீரும்.

முகப்பரு சிலந்திக் கட்டிகளுக்கு :-

வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து நசுக்கி முகப்பரு மது தடவி வந்தால் முகப்பருக்கள் குணமாகும். உடையாத சிலந்தி, தொடை வாழை. உடம்பில் ஏற்படும் உஷ்ணக்கட்டி ஆகியவற்றுக்கும் பூண்டை சிறிது நீர்விட்டு குழம்பாக அரைத்து கட்டிகள் மீது பற்றுபோட்டு வந்தால் அவை பழுத்து உடைந்து கீழும், துர்நீரும் வெளிப்பட்டு விடும்.

டான்ஸில்ஸ் என்னும் உள்நாக்கு வளர்ச்சி காரணாகத் தொந்தரவு இருந்தால் பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து விரலால் தொட்டு தொடர்ந்து தடவி வந்தால் உள்நாக்கு சுருங்கி குணமாகும்.

கைக் குழந்தைகளின் வாந்தி நிற்க :-

வெள்ளைப்பூண்டு 7 கிராம், வசம்பு 7 கிராம். எலிப்பாடாணம் 7 கிராம் ஆகியவை களை அரைத்து துணியில் பரப்பி அதை திரியாக்கி, அத்திரியை வேப்பெண்ணெயில் நனைத்து சுடர் தைலம் இறக்கி உடலெங்கும் தடவி வர நீங்கும்.

வசம்பு, வெள்ளைப்பூண்டு, கடுக்காய், சாராணை வேர், பூநாகம் இவைகளை சமஅளவாக எடுத்து வேப்பெண்ணெயில் காய்ச்சிக் கொஞ்சம் உள்ளுக்குக் கொடுத்து உடம்பிலும் தடவினால் வாந்தி நிற்கும்.

அஜீரணம் நீங்க :-

பத்து மிளகுடன் இரண்டு பல் வெள்ளைப் பூண்டு பற்கள் சிட்டிகை உப்பு அரைத்து சிறிது நீருடன் கலந்து அருந்தினால் அஜீரணம் குணமாகும். 

பொன்னுக்கு வீங்கி சுகமடைய :-

வெள்ளைப் பூண்டு பற்கள் 100 கிராம் எடுத்து நசித்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500 மில்லி நீர்விட்டு அடுப்பிலேற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு இறக்கி ஆறவிட்டு வாய் கொப்பளித்து வருவது தொற்று நீங்க உதவும். வீக்கத்துக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

மூல முளை அபானக் கடுப்புக்கு :-

வெள்ளைப்பூண்டு எழுபது கிராம் எடுத்து நைய அரைத்து அதை ஆறு உருண்டைகள் செய்து ஒரு வேளைக்கு ஒன்றாக மூன்று நாட்களுக்கு ஓர் உருண்டையாக புளியம்பட்டை. தணலில் போட்டு ஆசனத்தில் புகைபிடிக்க வேண்டும்.

கட்டிகள் :-

சிலருக்கு உடலில் அங்கங்கே கட்டிகள் தோன்றக்கூடும். இக்கட்டிகள் உடைவதற்கு பின்வரும் மருந்தைச் செய்து பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருட்கள் வெள்ளைப்பூண்டும், பாலும் மட்டுமே.

சிறிதளவு பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் வெள்ளைப்பூண்டைப் போட்டு அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். பூண்டு நன்றாக வெந்த பிறகு, பூண்டைத் தனியாக எடுத்து அம்மியில் வைத்து மைய அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை எங்கெங்கே கட்டிகள் உள்ளனவோ அங்கே போடவும். உடையாத கட்டிகளும் உடைந்துவிடும். உடலில் உள்ள சிரங்குகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். வெகு விரைவில் சிரங்குகள் ஆறிவிடும். தொடர்ந்து மூன்று முறை பற்றுப்போட்டு வந்தால், சிரங்கு முதலானவை குணமாகும். 

சன்னி வாதத்திற்கு ஒத்தடம் :-

கொப்பரைத் தேங்காய் 5. வெள்ளைப்பூண்டு 70 கிராம், வேப்பமுத்து ஒரு லிட்டர் ஆகிய இவைகளை ஒன்றாகச் சேர்த்து இடித்து, வெள்ளைத்துணியில் மூட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும். வேப்பெண்ணையை கொதிக்க வைத்து அந்த எண்ணெயில் மருந்து மூட்டையை நனைத்து, இளஞ்சூட்டுடன் உடலெங்கும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

Also Read : 12 வகையான கீரைகள் அதன் மருத்துவ பயன்கள்!!!

காசநோய் :-

அதிக காய்ச்சல், அம்மை நோய் போன்றவற்றால் வேதனைபடும் நிலை, இருந்தால் வெள்ளைப் பூண்டை நசுக்கி நன்றாக அரைத்து உள்ளங்காலில் கட்டினால் வேதனை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும்.

நெஞ்சுக்குத்து, விலாக்குத்து :-

நூற்று ஐம்பது கிராம் இஞ்சியைத் தட்டி சாறு பிழிந்து சாற்றை சுட வைத்து, ஐம்பது கிராம் பூண்டை இடித்துச்சாறு பிழிந்து, இஞ்சி சாற்றோடு சேர்த்து கலந்து சாப்பிடவும். இதை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.

கடுகு, வெள்ளைப்பூண்டு இவைகளை வகைக்கு எழுபது கிராம் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு பழம் புளி சேர்த்து கரைத்து கூட்டி, ரசம் வைத்து 400 மி.லி. அளவு மூன்று நாள் தொடர்ந்து ஒரு வேளை சாப்பிட்டுவர குணமாகும்.

ஜன்னி குணமாக :-

வெள்ளைப்பூண்டு, இஞ்சி, முருங்கைப் பட்டை இவைகளை பஞ்சு போல் இடித்து காலின் இருபெரு விரல்களிலும் கட்டிவிட்டால் 45 நிமிடத்தில் ஜன்னி குணமாகும்.

மூல வாயு விலக :-

எருமைத் தயிரை துணியில் முடிந்து தொங்கவிட, அதிலிருந்து வடியும் நீருடன் வெள்ளைப் பூண்டு பற்களை சேர்த்து அரைத்து ஒரு வேளைக்கு கொட்டைப் பாக்கு அளவு, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர மூல வாயு விலகும். காய்ச்சிய பசும்பாலில் வெள்ளைப்பூண்டு பற்களை சேர்த்து வேகவிட்டு சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.

குழந்தைகளுக்கு வாந்தி நிற்க :-

வெள்ளைப்பூண்டு சாற்றையூம், மஞ்சளையும் அம்மியில் வைத்து அரைத்து விழுதுபோல் எடுத்து ஒரு துணியில் முடிச்சுக்கட்டி அளவில் காட்டி சாறு பிழியவும். இந்தச் சாற்றை ஒரு பாலாடையில் தேனில் குழைத்துக் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளை கொடுக்கவும்.

நல்ல குணம் தெரியும். மருந்து உள்ளுக்குச் சென்று வேலை செய்த உடனே வாந்தி நின்று விடும். சில சமயம் இரண்டொரு வேளை மருந்திலேயே வாந்தி நிற்பதும் உண்டு.

பேன் தொல்லை நீங்க :-

வெள்ளைப்பூண்டு பற்களை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதில் எலுமிச்சம் பழச் சாற்றைக் கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்தால் பேன் ஒழியும்.

சித்தாதி எண்ணெய் :-

சித்த மருத்துவத்தில் சித்தாதி எண்ணெய் தயார் செய்வதற்கு வெள்ளைப்பூண்டும். கடுக்காயும் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. சித்தாதி எண்ணெயினால், சிரங்கு, அழலை, விக்கல், வாந்தி, புண், வலி, காதடைப்பு, பூச்சி வெட்டு, சூதக வெட்டை, பவுத்திரம், பொருமல் இவைகளைக் குணப்படுத்த பூண்டே தலைமை வகிக்கிறது.

அண்டவாதத்திற்கு :-

ஒரு பிடி முருங்கை இலை, வெந்தயம், வெள்ளைப்பூண்டு, சுழற்சிப் பருப்பு ஆகியவை வகைக்கு 200 கிராம் எடை எடுத்துக் கொண்டு இவைகளை யெல்லாம் சேர்த்து மை போல் அரைத்து காய்ச்சி தினமும் காலை, மாலை இரண்டு வேளை கொட்டைப் பாக்கு அளவு கொடுக்க நோய் தீரும்.

குடல் புண்ணுக்கு :-

ஒரு பாத்திரத்தில் வேடுகட்டி இருபது வெள்ளைப்பூண்டு பற்களை வைத்து வேக வைக்கிறது. அதோடு தேங்காய்ப் பூ சேர்த்து அரைத்து, மூன்று நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வயிற்றுப் புண்கள் குணமாகும்.

வயிற்றுப் போக்கு குணமாக :-

வெள்ளைப்பூண்டு. வெந்தயம். பெருங்காயம் இவைகளை வகைக்கு 20 கிராம் அளவும், முருங்கை ஈர்க்கு 100 கிராம் அளவும் எடுத்துத் தட்டி கொண்டு எல்லாவற்றையும், சிவக்க வறுத்த அதில் இரண்டு டம்ளர் நீர்விட்டு பாதியாக சுண்டுமளவு கஷாயமாக்கி ஒரு வேளை குடிக்க எல்லாவகை வயிற்றுப்போக்கும் நீங்கும்.

பூண்டுத் தைலம் ஒரு எளிய முறையிலான வெள்ளைப் பூண்டு தைலம் செய்யலாம். வெள்ளைப் பூண்டு 100 கிராம் எடுத்து உரலில் போட்டு, ஐம்பது மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய்விட்டு, அடுப்பில் வைத்து பூண்டு சிவக்கும்படி காய்ச்சி இறக்கி ஆறியபின் வடிகட்டி கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தலைவலி. கழுத்துவலி, சுளுக்கு, வாதவலி இவைகளுக்குத் தடவிவர குணம் ஏற்படும்.

இத்தைலத்தையே சொறி, சிரங்கு, புண்களை சுத்தம் செய்து தடவி வந்தால் அவை நீங்கிவிடும்.

விரை வாயுத் தொல்லை :-

மிளகு 50 கிராம், வெள்ளை பூண்டு பற்கள் 50 கிராம், களர்ச்சி வேர் நூறுகிராம். ஆகியவைகளை சுத்தம் செய்து . நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை மை 50 போல கிராம் சிற்றாமணக்கு எண்ணெயில் போட்டு கிளறி, நன்றாக வேகவிட வேண்டும்.

பிறகு ஆற வைத்து இந்த லேகியத்தை மூன்று பாகமாகப் பிரித்து மூன்று நாட்கள் காலை வேளையில் சாப்பிட விரை வாயுத் தொல்லை நீங்கிவிடும்.

படை நீங்க :-

வெள்ளைப் பூண்டையும், நவசாரத்தையும் சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நீர்விட்டு மைபோல அரைத்து படை இருக்கும் இடத்தில் தடவி வர படை நீங்கும்.

சிலோத்தும் மூலநோய் முற்றிலும் அகல : எருக்கம் பட்டை, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை வகைக்கு ஒன்பது கிராம் எடுத்து மை போல அரைத்து அரைமணி நேரத்திற்கு ஒரு முறை பாக்களவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு முறை சாப்பிட்டு வர மூலநோய் அடியோடு மறையும்.

வாயு ரோகம் அகல சுக்கு, பெருங்காயம், :- வெள்ளைப் பூண்டு, சத்திச் சாரணை வேர், கழற்சிக் கொழுந்து ஆகிய பொருட்களை சமஅளவாக எடுத்து நன்றாக மை போல அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை என்று இரண்டு வேளை மூன்று நாட்களுக்குச் சாப்பிட்டு வர வாயு ரோகம் நீங்கும்.

Also Read : கீரை வகைகள் மற்றும் மருத்துவ பயன்கள்!!!

Previous Post Next Post