கீரைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் :

1. அரைக்கீரை
2. அகத்திக்கீரை
3. இலச்சங்கொட்டை கீரை
4. மணத்தக்காளி கீரை
5. சிறு கீரை

1. அரைக்கீரை மருத்துவ பயன்கள் (Amaranthus dubius)

அரைக்கீரையின் பயன்கள் :-

பெயருக்குத்தான் இது அரைக் கீரையே தவிர இக்கீரை எல்லா சத்துக்களும் கொண்ட முழுக்கீரே ஆகும். எல்லா மக்களுக்கும் ஏற்ற கீரை இது.

பெயருக்குத்தான் இது அரைக் கீரையே தவிர இக்கீரை எல்லா சத்துக்களும் கொண்ட முழுக்கீரே ஆகும். எல்லா மக்களுக்கும் ஏற்ற கீரை இது.

வாயு நீங்க :- இக்கீரையுடன் வெள்ளைப்பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து, தினசரி உண்பவர்க்கு வாயுத் தொந்தரவுகள் நீங்கிவிடும்.

சளி இருமல் குணமாக :-

கீரையுடன் அதிக அளவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கடைந்து, தினசரி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் மட்டுப்படும்.

பசி எடுக்க :-

பலருக்கு பசியே எடுக்காது. மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்திற்காக ஏதோ சாப்பிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் கடைந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பசியெடுக்கும், கடைந்த கீரையை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடுவது நல்லது.

பிரசவித்த பெண்களுக்குப் பலம்பெற :-

பிரசவித்த பெண்கள் பலமிழந்து காணப்படுவது இயற்கை. நெய்விட்டு, கீரையை வதக்கியோ. கடைந்தோ சாப்பிட்டு வந்தால் தேகத்தில்பலம் ஏறும். குழந்தைக்குத் தேவையான பாலும் சுரக்கும். 

மலச்சிக்கல் தீர :- 

அரைக்கீரையை சிறிய வெங்காயத்துடன் வதக்கி தினசரி சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் வரவே வராது.

ஆண்மையை இழந்தவர்க்கு :-

எதிலும் அளவு வேண்டும் என்பார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இன்றைய நவநாகரிக யுகத்தில் திருமணமாகாத இளைஞர்களும் சரி, திருமணமானவர்களும் சரி... அளவுக்கு மீறிய உடல் தொடர்பு' கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட 'சக்தி'யினை இழக்கும் ஆபத்திற்கு ஆளாகின்றனர்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

மலச்சிக்கல் தீரும் - வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போகும் - ஜலதோஷம் போகும் - நரம்புத் தளர்ச்சி நீங்கும் - ஆண்மைக் குறைவு நீங்கும் - உடல்வலி தீரும் - உடல் பலவீனம் போகும். குளிர்காய்ச்சல் நீங்கும் - பிடரிவலி, நரம்புவலி ஆகியன நீங்கும். பிரசவித்த பெண்கள் இழந்த பலத்தை மீட்டுத்தரும்.

2. அகத்திக்கீரை மருத்துவ பயன்கள் (Vegetable hummingbird Spinach)

அற்புதமான மருத்துவகுணம் கொண்டது இக்கீரை. அகத்தி என்றாலே, 'முக்கியத்துவம் வாய்ந்தது' என்று பொருள் படும். அகத்திக்கீரையை அகம் + தீ - என்று பார்த்தால் நமது அகத்தின் உள்ளே இருக்கும் உஷ்ணத்தை (தீயை) தணிக்கும் கீரை' என்று பொருளாகிறது.

அற்புதமான மருத்துவகுணம் கொண்டது இக்கீரை. அகத்தி என்றாலே, 'முக்கியத்துவம் வாய்ந்தது' என்று பொருள் படும். அகத்திக்கீரையை அகம் + தீ - என்று பார்த்தால் நமது அகத்தின் உள்ளே இருக்கும் உஷ்ணத்தை (தீயை) தணிக்கும் கீரை' என்று பொருளாகிறது.

இருதய படபடப்பு நீங்க :-

அகத்திப் பூவை, பாசிப் பருப்போடு சேர்த்து, கூட்டு வைத்து மதிய வேளையில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் படபடப்பு நீங்கி சமானமாகும்.

மூளைக்கோளாறுகள் நீங்க :-

மூளைப் பகுதியில் சிறு கோளாறு ஏற்பட்டால், சோம்பல், புத்திமந்தம், புத்தி தடுமாற்றம், நினைவாற்றல் குறைவு போன்ற நோய்கள் ஏற்படும். இந்தக் கோளாறுகளை நீக்க அடிக்கடி அகத்திக் கீரையை, வெள்ளைப் பூண்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் போதும், மேற்கண்ட கோளாறுகள் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க :-

சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும். குழந்தை பாலுக்காக அழும். அகத்திக் கீரையுடன் வெள்ளைப்பூண்டு, பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு வைத்து, அடிக்கடி தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

குடல் சுத்தமாக :-

அகத்திக்கீரையை வேக வைக்கும் போது மிகுதியாகும் அகத்திநீரை குடித்து வந்தால், குடல் சுத்தமாகும்.

அகத்தியால் தீரும் வியாதிகள் :-

சொறி, சிரங்கு. அரிப்பு நோய்கள் - பித்தம் - உடல் உஷ்ணம் - சளி, இருமல் ஜலதோஷம் - அடிபட்ட வீக்கம் - எலும்பு மெலிவு (அ) தேய்வு - குடல்புண் - பால் சுரப் பின்மை - சிறுநீர் நோய் - மூளைக் கோளாறுகள் - மலச் சிக்கல் - மார்புவலி - இரத்தக் கொதிப்பு - தொண்டைவலி, தொண்டைப்புண் - காய்ச்சல் - பெரியம்மை நோய் (வைசூரி) - உடல் மெலிவு (சக்தியின்மை) - தலைவலி இடுமந்தை (வசியம்) முறிக்கும் சக்தி கொண்டது.

3. இலச்சக்கொட்டைக் கீரை மருத்துவ பயன்கள் (Pisonia)

வாத சம்பந்தமான நோய்களை மிக விரைவில் குணமாக்கும் அற்புதமான கீரை இது. இலச்சக்கொட்டை மரத்தின் இலையைத்தான் கீரை என்பார்கள் மக்கள். மரத்தின் இலை வெற்றிலையை விட சற்று அகலமாய், பச்சை நிறத்தில் இருக்கும்.

வாத சம்பந்தமான நோய்களை மிக விரைவில் குணமாக்கும் அற்புதமான கீரை இது. இலச்சக்கொட்டை மரத்தின் இலையைத்தான் கீரை என்பார்கள் மக்கள். மரத்தின் இலை வெற்றிலையை விட சற்று அகலமாய், பச்சை நிறத்தில் இருக்கும்.

இக்கீரையின் மருத்துவப் பயன்கள் :-

வாயு சம்பந்தமான நோய்களைக் கொண்டவர்கள் இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், வாயுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

இக்கீரையுடன் சுக்கு, மிளகு, பூண்டு, பெருங்காயம், வெந்தயம் கலந்து கூட்டுவைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாளடைவில் வீக்கம் வற்றி, நோய் குணமாகிவிடும் இக்கீரையை உண்பதால் கால்முட்டிகள் வீக்கம் மட்டுமில்லாமல், கணுக்கால், குதிகால் வீக்கம், இடுப்பு வலி நரம்புத்துடிப்புகளால் ஏற்படும் வலிகள் யாவும் குணமாகும்.

நகர்ப்புற மக்கள் இம்மரத்தின் இலைகளின் அழகுக்காக பெயர் தெரியாமல், மருத்துவ குணத்தை அறியாமல் வளர்ப்பார்கள். இனிமேலாவது இக்கீரையை உண்டு வாத நோய் வராமல் காத்துக் கொள்ளுங்கள்.

4. மணத்தக்காளிக் கீரை மருத்துவ பயன்கள் (Black nightshade)

இந்தக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. ஆம், இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவ- தில்லை. நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர்.

இந்தக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. ஆம், இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவ- தில்லை. நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர்.

வாய்ப்புண் ஆற :-

இக்கீரையினை சாறெடுத்து வாயிலிட்டு சிறிதுநேரம், தொண்டையில் வைத்து, கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.

வயிற்றுப்புண் ஆற :-

தீராத வயிற்றுப்புண் ஆற எவ்வளவோ மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டும் ஆறவில்லையா? மணத்தக்காளிக் கீரையின் சாறை எடுத்து. அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது பருக வேண்டும்.

இவ்வையத்தின்போது உப்பு, புளி, காரத்தை முக்கால் பாகம் குறைக்க வேண்டும். மணத்தக்காளிக் காய்களை குழம்பு செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப்புண். குடற்புண்... இவைகள் ஆறும்.

காயின் குணங்கள் :-

உடல் வலி தீரும் - களைப்பை அகற்றும் உடலிலுள்ள நச்சுநீரை வெளியேற்றும் வாந்தியைப் போக்கும் இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம்.

பழம் தரும் பயன்கள் :-

காது வலியைப் போக்கும் - வயிற்றுப் பொருமலை தணிக்கும் - காய்ச்சலைப் போக்கும் - கருப்பப்பைக்கு வலிமை தரும் பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.

5. சிறுகீரை மருத்துவ பயன்கள் (Amaranthus campestris)

பெயர்தான் 'சிறு' கீரையே தவிர, மருத்துவப் பயன்கள் அதிகம் கொண்ட 'பெருங்'கீரையாகும் இது. இக்கீரையை தினசரி சாப்பிட்டு வந்தாலும் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இரும்புச் சத்தும், புது இரத்தமும் உடம்பில் சேரும். இதில் கால்சியச்சத்து அடங்கியிருப்பதால், எலும்பை பலப்படுத்துகிற ஆற்றல் இதற்கு உண்டு.

பெயர்தான் 'சிறு' கீரையே தவிர, மருத்துவப் பயன்கள் அதிகம் கொண்ட 'பெருங்'கீரையாகும் இது. இக்கீரையை தினசரி சாப்பிட்டு வந்தாலும் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது.

ஞாபக் மறதிக்காரர்களுக்கு இக்கீரையை :-

பருப்போடு சமைத்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி நோய் போகும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளின் உணவில் சேர்த்து வந்தால், படிப்பில் கவனம் செலுத்தி, நல்ல அறிவு பெற்றவர்களாகத் திகழ்வார்கள்.

நல்ல உடற்கட்டுடன் திகழ சிறுகீரையோடு துவரம்பருப்பு, நிறைய சிறிய வெங்காயமும் போட்டு, நெய்யை வேண்டிய அளவு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிறர் பிரமிக்கும் அளவுக்கு ஆண்மைப் பெருக்குடன், நல்ல உடற்கட்டுடன் திகழலாம்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது நீர் எரிச்சல் தணியும் உடலுக்கு அழகு கொடுக்கும் காசநோயை தணிக்கும் கண்நோய்களைப் போக்கும் பித்தத்தைப் போக்கும் - மூலநோயை கட்டுப்படுத்தும் பெண்களுக்கு - ஏற்படும் வெள்ளை நோயை தீர்க்கும் - வாயுவை அகற்றும் வாத நோயை அகற்றும் மாலைக்கண், வெள்ளெழுத்து - போன்ற நோய்களை நீக்கும்.

Previous Post Next Post