அழகை பராமரிக்க உதவும் உணவு வகைகள்:

அழகு என்பது உடுத்தும் உடை, வைக்கின்ற பொட்டு, போடுகின்ற "மேக்-அப்”களால் மட்டும் முழுமை பெறுவது இல்லை. அழகுக்கு அடிப்படையாக அமைவது உடல்வாகு. அந்த உடலை காக்க சரியான முறையில் சத்துணவுகள் அவசியமாகின்றன.

அழகு என்பது உடுத்தும் உடை, வைக்கின்ற பொட்டு, போடுகின்ற "மேக்-அப்”களால் மட்டும் முழுமை பெறுவது இல்லை.

எல்லா பெண்களும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர அதற்கேற்ற உணவு வகைகளை கடைபிடிப்பதில்லை. கிடைத்த உணவை எல்லாம் வயிறு புடைக்க உண்டால் உடல் குண்டாகும். அழகு போய்விடும்.

எனவே உடலை அழகாக பராமரிக்க எந்த உணவை எந்த முறையில் - எந்த அளவில் உண்ண வேண்டும் என்பதைத் தெரிந்து உண்ண வேண்டும். காய்கறிகளும், பழவகைகளும் உடல் அழகுக்குப் பொருத்தமானவை. கீரை வகைகள், முருங்கை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றில் உடல் அழகுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. 

இவற்றின் விலையும் மலிவு. ஆனால் பலர் இவற்றை எல்லாம் விரும்பி உண்ணாமல் இவற்றிற்குப் பதிலாக வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதுண்டு.

மாத்திரைகளை அடிக்கடி விழுங்குவதை விட இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை சாப்பிடுவதே நலம். அழகிய முகத் தோற்றம் பெற்றிருந்தாலும், சிலருக்கு தோல் வறண்டு காணப்படும். இதற்கு காரணம் வைட்டமின் "ஏ" குறைபாடு தான். இவ்வாறானவர்கள் பால், முட்டை, மீன் ஆகிய உணவுப் பொருள்களை உண்ண வேண்டும்.

கொய்யாப்பழம், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம், தக்காளி, முட்டைக்கோஸ், காரட் போன்றவற்றில் வைட்டமின் "சி" உள்ளது. வைட்டமின் "சி" சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

சிலருக்கு விரைவாக சருமத்தில் சுருக்கம் விழும். அதைத் தடுக்க "பீட்டா கரோட்டின்" என்ற சத்து தேவைப் படுகிறது. இதய நோயைத் தடுக்கவும், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் இந்த "பீட்டா கரோட்டின்" துணை புரிகிறது. காரட், இனிப்பு கிழங்கு வகைகள், தர்பூசணி, தக்காளி, செர்ரி, பிளம்ஸ் பழம் போன்றவற்றில் பீட்டா கரோட்டின் அடங்கியுள்ளது.

Previous Post Next Post