உடலை அழகாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கடை பிடிக்க வேண்டியவை:

அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது மனதை கவலையில்லாமல் அமைதியாகவும் சந்தோஷ- மாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தாலே அழகு தானாக கூடி விடும். உலகத்திலுள்ள எல்லா ஜீவன்களுக்கும் கவலையும் அதனால் ஏற்படுகின்ற துக்கமும், மன நெருக்கடியும் இருந்து கொண்டே தான் இருக்கும். எல்லோருடைய மனப் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் சொல்லும் மனோதத்துவ நிபுணர்களுக்குக் கூட மன நெருக்கடி இல்லாமல் இல்லை. 

அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது மனதை கவலையில்லாமல் அமைதியாகவும் சந்தோஷ- மாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அதற்கு தீர்வு கண்டு மனத்திலிருந்து அவற்றை தூக்கி வீசுவதில் தான் அவரவர் தன்னம்பிக்- கையைக் காட்டுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் உண்டு. பலர் கடுகளவு கஷ்டம் வந்தாலே கலங்கி விடுவார்கள். சிலர் மலையளவு வந்தால் தான் மனங்கலங்குவார்கள். இன்னும் சிலர் ஒன்றுமில்லாத அற்ப விஷயத்திற்கு கூட மனங்கலங்குவார்கள்.

பலவீனமான மனது லென்ஸ் போன்றது. சிறு பிரச்சனையைக் கூட அது மிகப் பெரியதாகக் காட்டும். எப்போதும் தன் மீது தனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அதாவது தன்னம்பிக்கையும் திடமும் நிறைந்து இருக்க வேண்டும். 

நான் பலசாலி, திறமைசாலி, புத்திசாலி எதற்கும் கவலை கொள்ள மாட்டேன் என்ற எண்ணத்தை மனம் முழுக்க நிரப்பி வையுங்கள். சில தடவை உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி விட்டால் பின்பு மனதில் பலவீனம் தோன்றாது.

கொஞ்சம் துணிச்சலாகச் சிந்தித்து உறுதியாய்ப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தால் "முடியும்" இல்லாவிட்டால் “முடியாது” என்று டக் என்று அடித்துப் பேசுங்கள். பேசிவிட்டு அதையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அடுத்த வேலைக்குச் சென்று விடுங்கள்.

தவிர்க்க முடியாதக் காரணத்தால் சிலரிடம் மட்டும் நாசுக்காக இப்போது செய்ய முடியாது. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எப்படியும் விரைவில் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் அப்போது என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பக்குவமாகப் பேசுங்கள்.

எதையும் புன்னகையோடு எதிர்கொள்ளும் சுபாவம் பெண்களுக்கு மிக அவசியம். அப்படி ஒரு தன்மை உங்களிடம் இருந்தால் பெருமளவு மனநெருக்கடி இதன் மூலம் குறைக்கப்பட்டு விடும். ஆகவே சிரிக்கவும், மற்றவர்களை சிரிக்க வைக்கவும் முயற்சி செய்யுங்கள். 

உங்கள் உடை அம்மாவுக்குப் பிடிக்காமல் போய் இதென்ன உடை? அலங்கோலமாக இருக்கிறது என்று கோபமாய் சொன்னால் கூட நீங்கள் சிரித்துக் கொண்டே அம்மா நீங்கள் கோபப்பட்டு பேசும் போது கூட எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் தெரியுமா? என்று சொல்லிய படியே நழுவி விடலாம்.

சோர்ந்த முகம், பொலிவில்லாத கண்கள், புன்னகை இல்லாத உதடுகள், பேச்சில் உற்சாகமின்மை... இப்படியாக ஒரு பெண் இருந்தால் அவள் கடுமையான மன நெருக்கடியில் இருக்கிறாள் என்பதை தெரிந்து விடலாம். சிலர் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டு மன நெருக்கடியோடு ஓடி ஓடி வேலைப் பார்ப்பார்கள். சிலர் தலையை அடிக்கடி சொறிவார்கள். 

சிலர் தலை முடியை விரல்களால் சுற்றிக் கொண்டிருப்பார்கள் இவ்வாறானவர்கள் மன நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து விடலாம். நகத்தைக் கடிப்பது, கையைப் பிசைந்து கொண்டிருப்பது, நெற்றியைச் சுருக்கி சிந்திப்பது போன்றவையும் மன நெருக்கடியின் வெளிப் பாடுகள் தான்.

நல்ல தோழிகள் கிடைத்தால் பாதியளவு மன நெருக்கடி தீர்ந்தே போகும். மனதுக்கு வருத்தமும், துக்கமும் ஏற்படும் போது அதைப் பகிர்ந்து கொள்ள, தலை சாய்த்து மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள, ஒரு நல்ல தோழியின் தோள், தன்னம்பிக்கை தர சிரிப்பு இதெல்லாம் நட்பின் மூலம் கிடைக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய கஷ்டம் வந்த பொழுதும் அந்த நேரத்தில் ஆறுதலாகப் பேசுபவர்களையே நல்ல தோழி- யாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக திடீரென ஒரு கஷ்டம் உங்களுக்கு வந்து அதை நீங்கள் உங்கள் தோழியிடம் கூறும் போது, "அய்யய்யோ அப்படியா நடந்து போச்சு? இனி என்னடீ பண்ணப் போறே?" என்று உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டதைப் போல உங்களை மேலும் டென்சன் ஆக்குபவர்களின் நட்பை விட்டு விடுங்கள். மாறாக சரி அதை விடுடீ... "இதெல்லாம் பெரிய விஷயமா? நாளைக்கே இதுக்கு வேற ஏற்பாடு பண்ணிடலாம்" என்று உங்களை ஆறுதல் படுத்தி நம்பிக்கை ஊட்டுபவர்களை உங்களுக்கு உற்ற தோழியாக தேர்ந்தெடுங்கள்.

பெண்களே ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஜனனம் முதல் மரணம் வரை வாழ்க்கை என்பது பிரச்சனைகளும், போராட்டங்களும் நிறைந்தது தான். படிப்பு, இண்டர்வியூ, வேலை, காதல் தோல்வி, திருமணம், குழந்தை, நோய்....இப்படி பல சோதனைகள் தோன்றும் போதும் சளைக்காமல் தாண்ட முயற்சி செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் சின்னச் சின்னப் பிரச்சனை- களுக்குக் கூட மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்வதும் சின்ன விஷயங்களுக்கு கோபத்தையும், மன நெருக்கடி- யையும் வரவழைத்துக் கொள்வதும் உடல் ஆரோக்கியத்திற்குப் பெருங்கேடு.

எரிகின்றதை பிடுங்கி விட்டால் கொதிப்பது அடங்கி விடும். அது போல மனம் குழம்பிக் கொண்டிருக்கும் போது சாந்தத்தை ஏற்படுத்த பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். கோபம், தாபம், தோல்விகளைக் கடவுளின் காதுகளில் போட்டு விட்டு அமைதியாகிக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரத்தை யோகாசனம், தியானம் போன்றவற்றைச் செலவிடுங்கள்.

மனநெருக்கடியைத் தீர்க்க உடற்பயிற்சியும் பலன் தரும். மன நெருக்கடி ஏற்படும் போது அப்படியே ஒரு நிமிடம் கண்களை அடைத்து வேகமாக மூச்சை இழுத்து விடுங்கள். அதோடு எந்தப் பிரச்சனையும் நான் தைரியமாக எதிர்கொள்வேன். என்று மனசுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

இப்படிச் சொல்லி விட்டு கண்களைத் திறந்தால் மனத்தில் ஒரு தன்னம்பிக்கை ஒளி கிடைத்தது போல் இருக்கும். ஆதலால் பெண்களே! தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு என்றும் அழகுடனும், பிறர் கண்டு வியக்கும் வண்ணம் கட்டுடலுடனும் திகழ்வீர்களாக.

Previous Post Next Post