பொருத்தமாகப் பொட்டு வைப்பது பற்றிய குறிப்புகள்:

பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் பொருத்தமாக அவள் நெற்றியில் பொட்டு வைப்பதில் தான் முழு அழகும் உள்ளது. முக வசீகரமும் முழமை பெறுகிறது. உடைகளுக்குத் தக்கபடி பொட்டு வைத்துக் கொண்டால் அழகு மேலும் கூடுகிறது.

பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் பொருத்தமாக அவள் நெற்றியில் பொட்டு வைப்பதில் தான் முழு அழகும் உள்ளது. முக வசீகரமும் முழமை பெறுகிறது. உடைகளுக்குத் தக்கபடி பொட்டு வைத்துக் கொண்டால் அழகு மேலும் கூடுகிறது.

இந்தியக் கலாச்சாரத்தில் முதலிடம் பெற்று நிற்கும் இந்தப் பொட்டு புராதன காலம் முதலே வழக்கத்தில் இருந்து வருகிறது. வட இந்தியாவில் பொட்டை "பிந்தி" என்கிறார்கள். தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் பொட்டு என்ற பெயரே நிலைக்கிறது. இலக்கியத் தரத்தோடு இதனை திலகம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

தமிழர்களைப் பொருத்தவரையில் பொட்டு பெரும் அந்தஸ்தைப் பெறுகிறது. நம் குடும்பங்களில் வீடுகளுக்கு சுமங்கலிப் பெண் யாரேனும் வந்தால், அவளுக்கு குங்குமம், கொடுக்கும் வழக்கம் உண்டு. விசேஷ தினங்- களில் குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கொடுக்கும் பழக்கம் இப்போதும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கால கட்டத்தில் பொட்டு ஓர் அழகுப் பொருளாக மாறிவிட்டது. கூடவே அது நாகரிகத்தின் சின்னமாகவும் அறியப்படுகிறது. குங்குமம், சாந்துப் பொட்டுக்கள் இப்போது குறைந்த அளவே பயன் படுத்தப்படுகின்றன. அதற்குப் பதிலாக "பேஸ்ட் பொட்டுகள்”,"ஸ்டிக்கர் பொட்டுக்கள்" பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

1970 ஆம் ஆண்டு வாக்கில் எங்கு பார்த்தாலும் பேஸ்ட் பொட்டுகளாகக் காண முடிந்தது. பின்பு அதை விட சௌகரியமான ஸ்டிக்கர் பொட்டுக்கள் தற்போது விற்பனைக்கு வந்து விட்டன.

குங்குமம், சாந்துப் பொட்டுக்கள் மழை, வெயில், வியர்வை காலங்களுக்கு அதிகளவு சௌகரியமாக இருப்பதில்லை. அவற்றை நெற்றியில் பொருத்தமாக வைக்கின்ற வேலையும் ஓரளவு சிரமமாக இருக்கும். அந்தச் சிரமங்களை எல்லாம் ஸ்டிக்கர் பொட்டுக்கள் தீர்த்து வைக்கின்றன. 

அவசர அவசரமாக புறப்படும் பெண்கள் கண்ணாடி கூடப் பார்க்காமல் ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டி விடலாம். மேலும் உடை அலங்காரத்துக்கு பொருத்தமாக பல வண்ணங்களிலும், பல வகைகளிலும் ஸ்டிக்கர் பொட்டுக்கள் கிடைக்கின்றன. வெளி இடங்களுக்குச் செல்லும் போது ஸ்டிக்கர் பொட்டுக்களை கைப்பைக்குள் எளிதாக வைத்து எடுத்துச் செல்லவும் முடிகிறது.

தற்போது நட்சத்திரம், பிறை, நிலா போன்ற பல வடிவங்களிலும் பொட்டுக்கள் தயாரிக்கப் படுகின்றன. 3 மி.மீ அளவும் அதை விட சிறிய பெரிய அளவுகளிலும் பொட்டுக்கள் தயாராகின்றன.

பெண்கள் எந்த இடத்தில் பொட்டு வைப்பது?

பொட்டு நெற்றியில் தான் வைக்கப்படுகிறது சரியாகச் சொன்னால் இரண்டு புருவங்களுக்கும் இடையில் பொட்டு வைக்க வேண்டும். அந்த நெற்றிப் பொட்டு பகுதி ஒரு மர்மஸ்தானம் ஆகும். நினைவு, அறிவு சக்தியின் உறைவிடமாக நெற்றிப் பொட்டு கணிக்கப்படுகிறது.

ஆறாம் புலனாகக் கருதப்படும் அந்த இடத்தைப் பொட்டு வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் சந்தனம், குங்குமம் இடுவது மருத்துவ முறையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாக இருக்கிறது.

இப்போது நெற்றியில் எந்தப் பகுதியில் பொட்டு வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடே இல்லை. அழகுக்கும், பேஷனுக்கும் தக்கபடி நெற்றியில் எங்கு வேண்டுமானாலும் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். சிலரோ நெற்றியில் வரி வரியாக நிறைய பொட்டுகளை வைத்துக் கொள்கிறார்கள். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்த விஷயமாகும்.

பெண்கள் பொட்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள், பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல் அழகாகத் தெரியும். நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்- களுக்கும் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாகத் தெரியும். சதுரமான முக வடிவம், வட்டமான முக வடிவம் கொண்டவர்கள், சற்று பெரிய, வட்ட வடிவமான பொட்டுக்களை வைக்க வேண்டும்.

'ஜீன்ஸ்', 'டாப்ஸ்', 'ஸ்கர்ட்', 'மிடி' போன்றவற்றை அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகு தான். பொட்டு வைப்பதில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்தவர்கள் அல்லர். இப்போதெல்லாம் பெண்கள் அழகுக்காக தினுசு தினுசாகப் பொட்டு வைக்கிறார்கள் என்றால், ஆண்களோ அழகைப் பற்றி கவலைப்படாமல் குங்குமமும், சந்தனமும் முறையாக வைத்துத் திலக- மாக்கிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு என்ற பெயரில் கறுப்புப் பொட்டு வைக்கும் பழக்கமும் உண்டு.

பொட்டுகளை வைக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை சாலை ஓரங்களில் விற்கப்படும் விலை குறைந்த பொட்டுக்களை வாங்குவதை விட சற்று விலை கூடுதலானாலும் தரமான பொட்டுகளைப் பார்த்து வாங்க வேண்டும்.

எப்போதும் நெற்றியில் ஒரே இடத்தில் பொட்டு வைத்தால் அந்த இடத்தில் தோலின் நிறம் மாற்றம் ஏற்படும். அதனால் பொட்டுக்களை சற்று அங்கும் இங்குமாக மாற்றி வைக்க வேண்டும். பொட்டுகளில் மணத்திற்காகவும், கவர்ச்சிக்காகவும் பல வகை டைகளும், கெமிக்கலும் கலக்கப் படுகின்றன. இவ்வகை பொட்டுக்களை வைப்பதால் தோலுக்கு பாகத்தை ஏற்படுத்தும்.

கண்மை, சாந்து போன்றப் பொட்டுகளை பொதுவாக வீட்டில் தயார் செய்து கொள்வதே சிறந்தது. பொட்டுக்களில் கலக்கப் படும் கலப்பட பொருட்களால் சிலருக்கு தலைவலி, அலர்ஜி, தோல் நோய் போன்றவை ஏற்படும்.

பொதுவாக சாந்துப் பொட்டுக்களை தேர்ந்தெடுக்கும் போது கையில் வைத்துப் பார்த்து காய்ந்ததும் அது தோலை சுருக்கி இறுக்கமாக பிடிக்காமல் இல்லாத- வாறு பார்த்து வாங்க வேண்டும்.

கண்மைகளில் உள்ள கலப்படத்தால் கண்கள் சிவந்து கண்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே கண் மைகளை எடுத்து லேசாக கண்களில் தடவி அரை மணி நேரம் வரையில் எந்த உருத்தலும், எரிச்சலும் இல்லாமல் உள்ளதா? என பார்த்து வாங்க வேண்டும்.

Previous Post Next Post