கீரை வகைகள் 

1. குப்பைமேனிக் கீரை 2. முருங்கைக் கீரை 3. வல்லாரைக் கீரை 4. புளிச்ச கீரை 5. வெந்தயக் கீரை 6. பொன்னாங்கண்ணிக் கீரை 7. கொத்தமல்லிக் கீரை 8. கருவேப்பிலை 9. தண்டுக்கீரை (அ) கீரைத்தண்டு 10. புதினா கீரை 11. கரிசலாங்கண்ணிக் கீரை 12. காசினிக் கீரை

1. குப்பைமேனிக் கீரை மருத்துவ பயன்கள் (Acalypha Indica)

குப்பை மேட்டிலும், வழியோரங்களிலும், தோட்டங்களிலும் மானாவாரியாக வளர்ந்திருப்பதை காணலாம். பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுவதில்லை, கலவைக்கீரையில் சிறிதளவு இக்கீரையை சேர்ப்பார்கள்.

குப்பை மேட்டிலும், வழியோரங்களிலும், தோட்டங்களிலும் மானாவாரியாக வளர்ந்திருப்பதை காணலாம். பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுவதில்லை, கலவைக்கீரையில் சிறிதளவு இக்கீரையை சேர்ப்பார்கள்.

சரும வியாதிகள் நீங்க :-

பலருக்கு தோலில் சொறி, சிரங்கு, புண் போன்றவைகளால் வடுவடுவாய்.... கறுத்து... தேகம் அழகற்று காணப்படும். இப்படிப்பட்டவர்கள் விலையுயர்ந்த 'லோஷன்'களை போட்டும் தோல் பழைய நிலைக்கு வருவதில்லை.

குப்பைமேனிக் கீரையை தேவையான அளவு எடுத்து அதனோடு மஞ்சள், உப்பு சேர்த்து மைபோல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்து வரவேண்டும். ஒரு மாதத்திற்கு விடாமல் இப்படி செய்து வந்தால், தோல் நோயால் பாதிக்கப்பட்ட தோல் சுத்தமாகி, அழகு பெற்றதாக மாறிவிடும்.

Also Read : வெள்ளைப் பூண்டு அதன் மருத்துவ பயன்கள்!!!

மலக்கட்டு நீங்க :-

பலர் 'டாய்லெட்டில் (கழிப்பறையில்) மலம்கழிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இவர்கள் குப்பைமேனி இலையை குடிநீரில் போட்டு ஆறியபின் அந்த நீரில் ஒரு டம்ளர் எடுத்து சிறிதளவு உப்பு கலந்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பருகிவந்தால் மலம் இளகி கழியும். சிரமப்பட வேண்டாம். இரவு சாப்பிட்டபின் இந்த நீரைப் பருகவும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

குடற்புழுக்களை அழிக்கும் கட்டிகள், வீக்கங்கள் சரியாகும் தீப்பட்ட புண்ணுக்கு இவ்விலைச்சாறு நல்ல மருந்து வயிற்றுவலியைப் போக்கும் - இரைப்பு நோய் தீரும்.

2. முருங்கைக் கீரை மருத்துவ பயன்கள் (Moringa oleifera)

இம்மரத்தின் வேர், பட்டை, காய்கள், பூக்கள், கீரை யாவும் மனித உடலுக்கு தேவையானவைகளாகத் திகழ்கின்றன. அருமையான சுவையை கொண்டது இக்கீரை. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நல்ல வலுவையும் ஆயுட் காலம் வரை பெறலாம்.

இம்மரத்தின் வேர், பட்டை, காய்கள், பூக்கள், கீரை யாவும் மனித உடலுக்கு தேவையானவைகளாகத் திகழ்கின்றன.

உடல் பலம் பெற :-

தினமும் முருங்கைக் கீரையை வாங்கி, அதனை சுத்தம் செய்து, இதனுடன் வேர்க்கடலையை பொடித்துப் போட்டு, நெய்யை தேவையான அளவு ஊற்றி. சமைத்து சாப்பிட்டு வாருங்கள் போதும். ஒரு மாதத்தில் உங்கள் உடலின் மாற்றத்தைக் காணலாம். இச்சமையலின் போது நாட்டுக் கோழி முட்டையையும் சேர்க்கலாம்.

உடல் அசதி தீர வேண்டுமா? :- 

கீரையை உருவி விட்ட பின் நாம் தேவையற்றது என உதறும் காம்புகளை, இளம் காம்புகளை நறுக்கி, மிளகுரசம் வைத்து தினம் மதியம் ஒரு அவுன்ஸ் (அரை டம்ளர்) பருகி வந்தாலும் சரி, சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் சரி, நாளடைவில் கைகால், உடல் அசதி யாவும் நீங்கி, தேகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும்.

தாது கெட்டியாக :-

முருங்கைக்கீரையோடு வேகவைத்த வேர்க்கடலையையும் கலந்து சமைத்து சாப்பிட்டு வர, விலை உயர்ந்த பருப்புகளின் உள்ள சத்துக்களை விட பலமடங்கு சத்துக்களைப் பெறலாம்.

முருங்கைகாய்க்கு நமது உடலை என்றும் இளமையாக வைத்திருக்கும் சக்தி உண்டு. அதனால் அடிக்கடி காயையும் சாப்பிட்டு வாருங்கள்.

மலத்திலுள்ள பூச்சிகள் வெளியேற :-

முருங்கைக் கீரைச் சாறு பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிறுவர்களுக்கு அடிக்கடி மலக்குடலில் பூச்சிகள் உண்டாகும். முருங்கைக்கீரையை நன்கு நசித்து சாற்றெடுத்து அதனோடு தேன் கலந்து, இரவில் படுப்பதற்கு முன் இரு டீஸ்பூன் கொடுத்து வந்தால், மலப்பூச்சிகள் சில நாட்களில் வெளியேறிவிடும்.

இதயம் வலிமை பெற :- 

முருங் கைப்பூக்களை சேகரித்து, சுத்தப்படுத்தி, அதை எண்ணெய் கலந்து பொரிக்காமல் வறுக்காமல், அவித்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெறும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

பித்தமயக்கம் வராது இருமல், குரல்கம்மல் நீங்கும் இடுப்புவலி தீரும் -ஆஸ்துமா கட்டுப்படும் - கண்ணோய்கள் நீங்கும் சொறி சிரங்கு நீங்கும் - காதுவலி நீங்கும் கொழுப்பைக் கரைக்கும் - இரத்தக் கொதிப்பை அடக்கும் காமாலையை கட்டுப்படுத்தும் - நீர்க்கட்டு உடையும் - பற்கள் உறுதிப்படும்.

3. வல்லாரைக் கீரை மருத்துவ பயன்கள் (Centella asiatica)

ஞாபக சக்தியை கொடுக்க. இதற்கு இணையாக ஒரு கீரை உலக அளவிலேயே கிடையாது என்று கூறலாம். வல்லாரை ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளர்ந்து காணப்படும். வல்லாரையை சமையலுக்கு பயன்படுத்தும் போது புளியை சேர்க்க வேண்டாம். புளி வல்லாரையின் சக்தியைக் கெடுத்துவிடும். உப்பையும் பாதியாய் போட்டுதான் சமைக்க வேண்டும்.

ஞாபக சக்தியை கொடுக்க. இதற்கு இணையாக ஒரு கீரை உலக அளவிலேயே கிடையாது என்று கூறலாம்.

குழந்தைகளுக்கு வல்லாரையை நெய்யால் வதக்கி, சிறிதளவு இஞ்சி, இரண்டு பூண்டு கீற்றுகள், சேர்த்து துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால். குழந்தை -களுக்கு ஏற்படும் தோல் வியாதிகள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியவைகள் எல்லாம் குணமாகும்.

மஞ்சள் பற்கள் பளீரென வெண்மையாக :-

பற்களில் பலருக்கு வண்ணம் படிந்து 'சிரித்தால்' பார்ப்பவர் முகஞ்சுளிப்பார்கள். மஞ்சளைப் போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரைக் கீரையைப் பற்களின் மீது வைத்துத் தேய்ப்பதினால் மஞ்சள் போடுவதோடு, பற்கள் வெண்மையாக பளீரிடும்.

அளவோடு உண்ணுதல் :-

வல்லாரையை அளவோடு குறைந்த அளவுதான் சாப்பிட வேண்டும். அளவு மீறினால் மயக்கம் வரும். தலைசுற்றல் ஏற்படும். உடம்பை பிழிவதைப் போல் வலி ஏற்படும். எனவே இக்கீரையை அடிக்கடி உண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதே நல்லது.

Also Read : காய்கறி வகைகள் அதன் மருத்துவ பயன்கள்!!!

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

ஆயுளைப் பெருக்கும் - குறிப்பாக இரத்தத்தை சுத்தப்படுத்தும் மூளை பலப்படும் - மாலைக்கண் நோயை நிவர்த்தியாகும் கை, கால் வலிப்புநோய்களை கட்டுப்படுத்தும் - வயிற்றுக் கடுப்பு நீங்கும் காய்ச்சலைப் போக்கும் முகத்திற்கு அழகைத் தரும் - மாரடைப்பு வருவதை தடுக்கும் - யானைக் கால் நோயை ஆரம்பத்திலேயே வராமல் தடுக்கும் பெண்களின் மாதாந்திரப் பிரச்சனைகளை தீர்க்கும்.

4. புளிச்ச கீரை மருத்துவ பயன்கள் (Gongura)

உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடிய இக்கீரையை அடிக்கடி பயன்படுத்தலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும். இரும்புச் சத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளன. இதன் பூக்களையும் சேகரித்து சமைத்து உண்கிறார்கள்.

உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடிய இக்கீரையை அடிக்கடி பயன்படுத்தலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும். இரும்புச் சத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளன. இதன் பூக்களையும் சேகரித்து சமைத்து உண்கிறார்கள்.

மலச்சிக்கல் போக :-

மலச்சிக்கல் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள், இக்கீரையை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே ஏற்படாது.

தாது விருத்திக்கு :- 

எதுவாக இருப்பினும் புளிச்ச கீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். இந்திரியத்தை கெட்டிப்படுத்தும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

சொறி சிரங்குகளை போக்குகிறது - குடற்புண்ணை ஆற்றும் உடலிலுள்ள புண்களை ஆற்றுகிறது பசி மந்தத்தை போக்குகிறது வயிற்று வலியை போக்கும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஜீரணக் கோளாறுகளை சரிப்படுத்தும் - இதய நோய் வராமல் பாதுகாக்கும் - சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்தும்.

5. வெந்தயக் கீரை மருத்துவ பயன்கள் (Fabaceae)

இக்கீரை பெரும் மருத்துவப் பயன்கள் கொண்டது. பல நோய்களைத் தீர்க்கும் இக்கீரையின் மாறுபட்ட சுவையால் கசப்புத் தன்மையால் அதிகம் பேர் இதை பயன்படுத்துவதில்லை.

இக்கீரை பெரும் மருத்துவப் பயன்கள் கொண்டது. பல நோய்களைத் தீர்க்கும் இக்கீரையின் மாறுபட்ட சுவையால் கசப்புத் தன்மையால் அதிகம் பேர் இதை பயன்படுத்துவதில்லை.

மாதவிடாய் கோளாறா :-

இக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் கோளாறுகளை அற்புதமாய் நீக்கிவிடும்.

இடுப்பு வலியா :-

இக்கீரையோடு தேங்காய்ப்பால். நாட்டுக்கோழி முட்டை (நீரிழிவு உள்ளவர்கள் மஞ்சள் கருவை நீக்கவும்) கசகசா, சீரகம், மிளகுத்தூள், பூண்டு இவைகளோடு நெய்யையும் சேர்த்து சமைத்து, சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்துபோகும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

கபம், சளியை அகற்றுகிறது மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது, உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது. கண் பார்வையைத் தெளிவாக்குகிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளை வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மார்பு வலியிலிருந்து காக்கிறது, தலைசுற்றலை நிறுத்துகிறது, உடல் சூட்டை தணிக்கிறது.

6. பொன்னாங்கண்ணிக் கீரை மருத்துவ பயன்கள் (Alternanthera Sessilis)

கண்ணுக்கு ஒளியை, தெளிவான பார்வையை இதற்கு இணையாகத் தரக்கூடிய கீரை வேறொன்றும் இல்லை எனலாம். இது கண்ணை மட்டும் தெளிவாக்குவதில்லை, நமது உடம்பையும் 'பொன்னாக' மாற்றும் சக்தி இதற்குண்டு.

கண்ணுக்கு ஒளியை, தெளிவான பார்வையை இதற்கு இணையாகத் தரக்கூடிய கீரை வேறொன்றும் இல்லை எனலாம். இது கண்ணை மட்டும் தெளிவாக்குவதில்லை, நமது உடம்பையும் 'பொன்னாக' மாற்றும் சக்தி இதற்குண்டு.

மூலநோய் நீங்க :-

இக்கீரையை பூண்டு சேர்த்து, பக்குவமாக வதக்கி, சீரகம் கலந்து காரத்தோடு ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயை அறுவை சிகிச்சையின்றி குணமாக்கலாம்.

கண்சூடு நீங்க :-

சிலர் தெருத் தெருவாய், ஊர்ஊராய் சுற்றி தொழில் செய்யும் நிலையில் இருப்பார்கள். இப்படி சுற்றுவதால், தலைசூபாகி கண்கள் சிவப்பேறி, பார்க்க குடிகாரனைப் போல தெரியும்.

உடல் அழகு பெற :-

இக்கீரையை நெய்விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் அழகு பெறும். பொன்னாங்கண்ணியில் தயாரிக்கப்பட்ட தைலத்தை தலைக்குத் தடவி வாரம் இருமுறை குளித்து வந்தாலே போதும். கண் எரிச்சல், தலைச்சூடு, கண் மங்கல் போன்ற கோளாறுகள் நீங்கும். அதாவது கண்சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்:-

பூண்டுடன் இக்கீரையை சமைத்து சாப்பிட மூலநோய்கள் குணமாகும். பச்சையாக சாப்பிட தொண்டைப்புண், உணவுக் குழாய்ப்புண் இவைகள் நீங்கும். வாய் துர்நாற்றம் போகும். ஈரல் நோய் போகும். வயிற்றெரிச்சல் குணமாகும். மேனியை பளபளக்கச் செய்யும், இதயமும் மூளையும் பலம் பெறும்.

7. கொத்தமல்லிக் கீரை மருத்துவ பயன்கள் (Coriander greens)

இக்கீரையை துவையலாகவோ, வேறு எந்த வகையிலோ தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல பலம் ஏற்படும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, பல நோய்களை வேரோடு கிள்ளி எறிந்துவிடும்.

இக்கீரையை துவையலாகவோ, வேறு எந்த வகையிலோ தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல பலம் ஏற்படும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, பல நோய்களை வேரோடு கிள்ளி எறிந்துவிடும்.

உடல் பலம் பெற :-

கொத்தமல்லியை, நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து காலை, மதியம் இருவேளைகள் சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பலம்பெற்றுத் திகழும்.

ஆயுள் முழுக்க கண்பார்வை தெரிய :-

குழந்தைக் காலம் முதலே கொத்தமல்லிக் கீரையைச் சாப்பிட்டு வந்தால். என்றும் கண்பார்வை மங்காது.

வயிற்றுப்புண் ஆற :-

பூக்களை கஷாயமிட்டு வெறும் வயிற்றில் தினமும் காலையில் பருகிவந்தால் வயிற்றுப்புண் நாளடைவில் குணமாகி விடும்.

வயிற்றுப்புண் ஆறுவதற்கு கொத்தமல்லி விதையான தனியா, மிளகு, திப்பிலி, சுக்கு, பேராமுட்டி இவைகளை வகைக்கு 10 முதல் 20 கிராம் எடுத்துக் கொண்டு, லேசாக இடித்து, செம்பளவு நீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின், தினமும் மூன்று வேளைகள் அருந்தி வந்தால் சுரம் குணமாகும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

பித்தத்தைப் போக்கும். வாயுவைக் கண்டிக்கும். பல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும். கண் கோளாறுகளைப் போக்கும் குறிப்பாக மாலைக்கண் நோயை குணமாக்கும் இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

நரம்புத்தளர்ச்சியை போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் புண் என மூக்கு சம்பந்தமான நோய்களை நீக்கும். மனநோய் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளும். பித்த வாந்தியை கட்டுப்படுத்தும். மூச்சடைப்பு நலமாகும். இரத்தக் கொதிப்பை அடக்கும்.

8. கருவேப்பிலை மருத்துவ பயன்கள் (Curry tree)

நமது உணவிலிருந்து தூக்கி எறியப்படும் கருவேப்பிலையால், ஏகப்பட்ட சத்துக்களை நாம் இழக்கிறோம் என்பதை மறவாதீர்கள். இக்கறிவேப்பிலையால் வைட்டமின் ஏ, பி1, பி2. சி. போன்ற உயிர்ச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றோடு சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்துக்களும் கலந்துள்ளன.

நமது உணவிலிருந்து தூக்கி எறியப்படும் கருவேப்பிலையால், ஏகப்பட்ட சத்துக்களை நாம் இழக்கிறோம் என்பதை மறவாதீர்கள். இக்கறிவேப்பிலையால் வைட்டமின் ஏ, பி1, பி2. சி.

அறிவு தெளிவடைய :-

கறிவேப்பிலையை துவையலாக அரைத்து, அதனோடு எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு குழப்பிக் கொள்ள வேண்டும். குழம்பு வடிவத்திலிருக்கும் இதை சாதத்தோடு மதியம், இரவு இரண்டு வேளைகளும் சாப்பிட்டு வந்தால், அறிவில் தெளிவு ஏற்படும். குழப்பமான மனநிலை மாறும்.

வயிற்றுப்போக்கை நிறுத்த கறிவேப்பிலை ஒருபங்கு, கால்பங்கு சீரகம் இரண்டையும் மைபோல அரைத்து, வாயில்போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். குடலிலுள்ள கிருமிகளை அழிக்கும். கண்பார்வை தெளிவடையும். பசியைத் தூண்டிவிடும். தலைமுடி நரைக்காது. கை,கால் நடுக்கங்களை நீக்கும். உடல் என்றும் இளமையுடன் இருக்கும்.

போதையில் தள்ளாடி வருபவர்களுக்கு கறிவேப்பிலை சாரை குடிக்கக் கொடுங்கள் போதை தலையிலிருந்து கீழே இறங்கிவிடும்.

9. தண்டுக்கீரை (அ) கீரைத்தண்டு மருத்துவ பயன்கள் (Amaranthus tricolor)

தண்டுக்கீரையில் இருவகைகள் உண்டு.

1. பச்சை நிற தண்டுக்கீரை
2. செந்நிற தண்டுக்கீரை

இரண்டுமே சமையலுக்கு ஏற்றவை, உடலுக்கும் ஏற்றவை. இக்கீரையின் சுபாவம் குளிர்ச்சி, சீதள தேகம் கொண்டவர்கள் அதிகமாய் பயன்படுத்தாமலிருப்பதுதான் நல்லது. இதில் இரும்புச் சத்துக்களும், சுண்ணாம்புச் சத்துக்களும் உள்ளன.

இரண்டுமே சமையலுக்கு ஏற்றவை, உடலுக்கும் ஏற்றவை. இக்கீரையின் சுபாவம் குளிர்ச்சி, சீதள தேகம் கொண்டவர்கள் அதிகமாய் பயன்படுத்தாமலிருப்பதுதான் நல்லது. இதில் இரும்புச் சத்துக்களும், சுண்ணாம்புச் சத்துக்களும் உள்ளன.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளித்த நாளில் கீரைத் தண்டை சாப்பிடுவது நல்லதல்ல. இரத்த பேதியை நிறுத்தும், உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் சிக்கலுக்கு நல்ல மருந்து. பித்தம் அகலும். கீரைத்தண்டை தனியே பொரியல், கடையல், வதக்கல் எம்முறையிலாவது செய்தாலும் தன் சத்துக்களை இழக்காமலிருக்கும்.

செங்கீரைத்தண்டு :-

கீரைத்தண்டைப் போலவே, இதையும் சமைத்து சாப்பிடலாம். இதுவும் பச்சைத்தண்டைப் போலவே குளிர்ச்சியானது தான் இக்கீரைத்தண்டு, பெண்களின் உடல் நலத்தை நன்கு பாதுகாக்கும் தன்மை கொண்டது.

பெண்களின் பெரும்பாடு' என்னும் நோயைப் போக்கும் அருமருந்து இது. இரத்தம் சதா வெளியே போனால் உடல் மெலியும். உடல் வெளுக்கும். பலம் குறையும். மருந்து சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் செங்கீரைத்தண்டை, அடிக்கடி பாசிப்பருப்புப் போட்டு கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் 'பெரும்பாடு நோய்' விரைவில் குணமாகும்.

10. புதினா கீரை மருத்துவ பயன்கள் (Mentha spicata)

வாந்தியும் வயிற்றுப்போக்கும் :-

சில சமயம் எதையாவது ஏடாகூடமாய் தின்றுவிட்டு, குழந்தைகள் வாந்தியும் வயிற்றுப்போக்குமாய் அவதிப்படுவார்கள். பெற்றவர் களையும் அவதிப்பட வைப்பார்கள். புதினாவை வாங்கி சுத்தப்படுத்தி, கஷாயம் தயாரித்து (சிறிதளவு சீரகம் சேர்க்க) காலை, மாலை, இரவு என ஒருநாள் கொடுத்தால் போதும் வாந்தியும் வயிற்றுப்போக்கும் உடனடியாக நிற்கும்.

சில சமயம் எதையாவது ஏடாகூடமாய் தின்றுவிட்டு, குழந்தைகள் வாந்தியும் வயிற்றுப்போக்குமாய் அவதிப்படுவார்கள். பெற்றவர் களையும் அவதிப்பட வைப்பார்கள்.

தொண்டைப்புண் ஆற :-

புதினாவை அரைத்து கழுத்தில் வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டால் புண் ஆறும். கூடவே புதினாவை மென்று அதன் சாறை விழுங்கி வந்தால் விரைவில் ஆறும். மூச்சுத் திணறல் இருந்தால், அதுவும் குணமாகும்.

மாதவிலக்குப் பிரச்சனைகள் தீர :-

மாதவிலக்குக் கோளாறுகள் கொண்ட பெண்கள் தினம் இக்கீரையை அரைத்து துவையலாக சாப்பிட்டு வந்தால் கோளாறுகள் தீரும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :-

புதினாவில் தயாரிக்கப்படும் பற்பொடி பற்களை நன்கு பாதுகாக்கிறது. வாய்துர்நாற்றத்தைப் போக்குகிறது. ரச கற்பூரம் (Menthol) தயாரிக்க இதைப் பயன்படுத்துகிறார்கள்.

11. கரிசலாங்கண்ணிக் கீரை மருத்துவ பயன்கள் (Eclipta prostrata)

அற்புதமான மருத்துவ குணம் கொண்ட கீரை இது, மிகவும் சத்துள்ள கீரை இது, சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய மலைபடுகடாம் இக்கீரையை கையாந்தகரை என்று கூறுகிறது.

அற்புதமான மருத்துவ குணம் கொண்ட கீரை இது, மிகவும் சத்துள்ள கீரை இது, சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய மலைபடுகடாம் இக்கீரையை கையாந்தகரை என்று கூறுகிறது.

இக்கீரைக்கு பல பெயர்கள் உண்டு. கரிசணாங்கண்ணி, கையார்ந்த கீரை, கரிப்பான், பிருங்கராஜம், பொற்கொடி. பொற்பாவை, பொற்றிலைப் பாவை, கரிசாலை, கைகேசி, காரிசாலை. இக்கீரை வளமான பூமியில் மட்டுமே நன்றாக விளையும், இதில் இரு வகைகள் உண்டு, ஒன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றது வெள்ளைக் கரிசலாங்கண்ணி. 

மஞ்சள் கரிசலாங்கண்ணியைத்தான் சமைத்து சாப்பிடலாம், இதுதான் சமையலுக்கு ஏற்றது. நாட்டு வைத்தியத்தில் பெரும் பயனைத் தருவது இக்கீரை. மஞ்சள் காமாலையைப் போக்குவதில் பெரும் பங்காற்றுகிறது.

இதன் மருத்துவப் பயன்கள்
மஞ்சள் காமாலை போக :-

கரிசலாங்கண்ணிக் கீரையை அரைத்து சாறெடுத்து, மோரில் கலந்து மூன்று வேளை கொடுத்தால் போதும். குழந்தைகளின் மஞ்சள் காமாலை போகும்.

பல் சம்பந்தமான நோய்கள் நீங்க :-

பல் வியாதிகளால் கஷ்டப்படுகிறவர்கள் காலை வேளையில் கரிசலாங்கண்ணி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று அதைக் கொண்டே பல்துலக்கி வந்தால், பல் நோய்கள் குணமாகும். வாய் துர்நாற்றம் போகும்.

குடல் சுத்தமாக கரிசலாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால், குடலில் ஏற்படும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். குடலிலுள்ள கிருமிகள் சாகும். குடல் சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.

புத்தி தெளிவடைய எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறவில்லை என்று கஷ்டப்படுபவர்களும், மறதிகாரர்களும், வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம் இரண்டு மாதங்கள் நெய், பாசிப்பருப்புடன் கலந்து பொரியல் செய்து, இக்கீரையை சாப்பிட்டு வந்தால் புத்தி தெளிவடையும்; மறதி போகும்.

காதுவலி தீர :-

கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் சில துளிகளை காதில்விட காதுவலி தீரும். நல்ல தூக்கம் வரும்.

மது அருந்துபவர்களுக்கு :-

மது உடலுக்கு, உயிருக்குக் கேடு என்று தெரிந்தும் பலர் தினமும் தங்களின் அரிய உடலை நாசமாக்கிக் கொள்கிறார்கள். மதுவை தினமும் அருந்துவதால் ஈரல் கேட்டு உயிர்போகும் குடியில் கெட்டுப்போகும் ஈரலை சரிசெய்கிறது கரிசலாங்கண்ணி. எனவே குடியை நிறுத்தியவர்கள் தினமும் காலையில் இக்கீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தாலோ. சாறுபிழிந்து பருகி வந்தாலோ, கெட்டுப் போன ஈரல் நல்ல நிலைமைக்கு மாறும்.

பற்களில் மஞ்சள் நிறமா :-

சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாக. பார்க்க அழகற்று இருக்கும். இப்படிப்பட்டவர்கள், கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்கவும். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறை மறைந்தே போய்விடும்.

கரிசலாகண்ணிக் கீரையை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் :-

காய்ச்சல், யானைக்கால், விஷக்கடி, காதுவலி, ஜலதோஷம், கண்பார்வை மங்கல், மார்புவலி, மஞ்சள் காமாலை, தொழுநோய், மயக்கம், பித்த சுரம், பித்த எரிச்சல். மலச்சிக்கல், சளி, இரத்த சோகை, தலைப் பொடுகு, இளநரை, பசியின்மை, வீக்கம், கட்டி, அதிக இரத்தப்போக்கு, மூலம். அதிக வயிற்றுப்போக்கு, வாய் துர்நாற்றம், புண்கள், வாதம், கல்லீரல் வீக்கம், பல்வலி, மாலைக்கண், புத்திக்குறைவு போன்றவை நீங்கும்.

12. காசினிக் கீரை மருத்துவ பயன்கள் (Chicorium intybus)

இது நல்ல ருசியுள்ள கீரை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் கீரை இக்கீரை தேக உஷ்ணத்தை சமன்படுத்தக் கூடிய சக்தியைக் கொண்டது. மூலிகை வைத்தியத்தில் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இது நல்ல ருசியுள்ள கீரை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் கீரை இக்கீரை தேக உஷ்ணத்தை சமன்படுத்தக் கூடிய சக்தியைக் கொண்டது. மூலிகை வைத்தியத்தில் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

ஆறாத புண் ஆற :-

சிலருக்கு புண் ஏற்பட்டுவிட்டால், அவ்வளவு சீக்கிரம் ஆறவே ஆறாது. மிகவும் சிரமப்படும் இவர்கள், இக்கீரையை மைபோல அரைத்து புண்கள் மேல் கனமாக வைத்து கட்டிவந்தால், ஒரு வாரத்தில் நன்றாகிவிடும்.

உடலில் சூட்டைத் தணிக்க :- காணாம் வாழைக் கீரையோடு, தூதுவளைக் கீரையையும் சேர்த்து, கூடவே பாசிப்பருப்பையும் கலந்து கடைந்து அவ்வப்போது வாரத்திற்கு இருமுறையோ அல்லது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 'உடல்காங்கை' என்னும் உடற்சூடு தணித்துவிடும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்: இதன் வேர் காய்ச்சலை குணமாக்கும் சக்தி கொண்டது. இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்தத்தை விருத்தி செய்யும்.

மூலச்சூட்டை தணிவிக்கும் உயிர்ச்சத்துக்கள் கொண்டது. எனவே உடலுக்கு நல்லதைச் செய்யும் வாரத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ, பாசிப்பருப்புடன் கலந்து சாப்பிட்டு வருவது உடல் நலத்திற்கு பயன் தரும்.

காய்ச்சலைப் போக்கும் மேலும் இக்கீரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு பெரும்பாடு நோய்களை குணமாக்கும். பயனுள்ள கீரை, அடிக்கடி பயன்படுத்த வேண்டிய கீரை.

Also Read : கீரை வகைகள் மற்றும் மருத்துவ பயன்கள்!!!

Previous Post Next Post