அருகம்புல் மருத்துவ பயன்கள் (Scutch grass)

அறுகம்புல் எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. பொதுவாக களர்நிலங்களில் இதன் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். கணபதி பத்திரம் என்று சொல்லப்படும் அறுகம்புல்லால் நச்சுத்தன்மை போகும். இது உடலை வலிமையுள்ளதாய் ஆக்கும்.

அறுகம்புல் எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. பொதுவாக களர்நிலங்களில் இதன் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். கணபதி பத்திரம் என்று சொல்லப்படும் அறுகம்புல்லால் நச்சுத்தன்மை போகும். இது உடலை வலிமையுள்ளதாய் ஆக்கும்.

பொதுவாக எல்லா விதமான நோய்களும் போகும், தலைநோய், கண் புகைச்சல், இரத்தம் பித்தம் இவைகளுடன்- உடம்பில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அதனால் உண்டான பல்வேறு நோய்கள் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும் என்பதாகும்.

1. இந்திய மருத்துவத்தில் அறுகம்புல்

அறுகம்புல் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களி னால் ஏற்படும் நோய்களை நீக்கி உடலுக்கு ஊட்டத்தைத் தரும். சிறுநீரைப் பெருக்கவும், இரத்தப்போக்கைத் தடுக்கவும், மருந்துகளின் நச்சுத்தன்மையை முறிக்கவும் இதனை மருந்தாகச் செய்து பயன்படுத்தலாம் என்று சொல்லப் பட்டுள்ளது. அறுகம்புல்லின் கணுப்பாகம் நச்சுத் தன்மையுள்ளது. எனவே, நீக்கிப் பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதியாகும்.

தேள், பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகள் கடித்து மனித உயிருக்கு அவஸ்தை உண்டாகும் போது அறுகம்புல்லை அரைத்து 1 டம்ளர் கொடுக்க விஷம் பரவுவது தாமதப்படும்.

Also Read : வெள்ளைப் பூண்டு அதன் மருத்துவ பயன்கள்!!!

அறுகம்புல்லையும், மஞ்சளையும் சேர்த்து அதை சொறி, சிரங்கு, படர் தாமரை போன்ற தொல்லைகளுக்கு மேலே பூசிக்குளித்து வந்தால் பிணி விலகும்.

மஞ்சள். கிச்சிலிக் கிழங்கு, வெட்டிவேர் இவற்றைச் சமமாக எடுத்து இடித்து நீர்விட்டு சந்தனச் சாந்து போல் ஆனதும் எடுத்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க பொடுகும் இளநரையும் போகும்.

கொடிபோல் வளர்ந்துள்ள அறுகம்புல்லை கைபிடியளவு பிடுங்கி கணுக்களை நீக்கிவிட்டு அரைத்து வெண்ணெய் கலந்து பிசைந்து இரண்டாக பங்கிட்டு ஒரு பகுதியை காலையும் மீதியை மாலையுமாக சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர மேனி மினுமினுப்புடன் காட்சி தரும். வெளுப்பாக உடல்வாகு உண்டாகும்.

"அறுகம்புல் ஆபத்துக்குதவும்" என்பது பழமொழி. அவ்வகையில் காயம்பட்டு, இரத்தப் பெருக்கு ஏற்பட்டாலும், மூக்கில் இரத்தம் கொட்டினாலும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டாலும் அறுகம்புல்லை பயன்படுத்தலாம். அதேபோல் இரத்தப் போக்குள்ள பெண்களுக்கு அறுகம்புல் சாறு குடித்து வந்தால் குணமாகும்.

கண்நோய்களுக்கு அறுகம்புல் சாறு நல்ல நிவாரண மளிக்கிறது. அறுகம்புல் முற்றியதை எடுத்து தட்டி துணியில் வைத்து இரண்டொரு சொட்டு கண்ணில் பிழிய கண் எரிச்சல், கண் எரிப்பு, கண் சிவப்பு, கண்வலி, பீளைகட்டல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

அறுகம்புல்லை குடிநீரில் வால்மிளகு 2 சிட்டிகை அளவு கலந்து குடித்துவர நிவாரணம் கிடைக்கும். அறுகம்புல் குடிநீருடன் சமமாக தேன் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

உயிர் கொல்லி நோய்களில் சிறுநீர்க் கோளாறும் ஒன்று. அறுகம்புல்லின் முற்றிய வேரை கைப்பிடியளவு சேகரித்து அரைத்து 1 டம்ளர் தயிரில் கலந்து காலை மாலை குடித்துவர சிறுநீரில் விந்து கலந்து போகும் "தந்திமேகம்" என்னும் நோய் முற்றிலும் குணமாகும். சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவை குணமாகும்.

புட்டிப்பாலில் சிறிதளவு அறுகம்புல் சாறு கலந்து குழந்தைகளுக்குப் புகட்டினால் தாய்ப்பாலுக்குச் சமமான ஊட்டச்சத்தை அது கொடுக்கும். அதோடு மலச்சிக்கல், சளி போன்ற தொல்லைகளும் தலை காட்டாது. குழந்தையும் ஆரோக்கியமாக கொழுகொழுவென்று வளரும்.

இத்தைலத்தை வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படுத்திவர உடல் உஷ்ணம். தூக்கமின்மை. வயிறு எரிச்சல், ஆண்குறி எரிச்சல், தலைசுற்றல், மூலம், பீனிசம் போன்றவை குணமாகும். உடலில் தேய்த்து பிடித்துவர (மசாஜ்) முழங்கால் வாதம், நரம்புவலி, கட்டிகள் போன்றவை குணமாகும். இத்தைலத்தை நாட்பட்ட புண்களுக்குப் பூசி வர விரைவில் புண்கள் ஆறிவிடும்.

2. இயற்கை மருத்துவத்தில் அறுகம்புல்

சுத்தமான இடத்தில் வளர்ந்துள்ள அறுகம்புல் ஒரு கைப்பிடியளவு சுமார் 100 கிராம் எடுத்து நன்கு கழுவி ஆட்டுக் கல்லில் போட்டு நீர்தெளித்து அரைத்து சட்னிபோல் ஆனதும் 1 டம்ளர் நீர்விட்டுக் கலந்து பிழிந்து கொள்ள வேண்டும். (மிக்ஸியில் போட்டு அடித்தும் சாரெடுக்கலாம். ஆனால் (மிக்ஸியில் அடிப்பதால் சாறு சூடேறும். அதனால் சில சத்துகள் அழியும் வாய்ப்புள்ளது).

காலை வெறும் வயிற்றில் அறுகம்புல் சாற்றை சிறிது சிறிதாக வாயில் விட்டு சமமாக உமிழ்நீர் கலக்கும்படி செய்து சிறிதுநேரம் வாயில் வைத்திருந்து மெதுவாக விழுங்க வேண்டும்.

நகரத்தில் உள்ளவர்களுக்கு தினமும் அருகம்புல் புதிதாகக் கிடைக்காது. மேலும், அவர்களது ஆரவாரமான வாழ்க்கைக்குச் சூழல் நேரமின்மை மற்றும் பொறுமை யின்மையால் அவர்கள் அறுகம்புல் சாறு தயாரிக்க இயலாது.

அத்தகையவர்கள் அறுகம்புல் மொத்தமாகக் கிடைக்கும் பொழுது வாங்கி பசுமையான பகுதிகளை மட்டும் சேகரித்து சுத்தமாகக் கழுவி ஓலைப்பாய் அல்லது மூங்கில் தட்டிகளில் பரப்பி, நிழலில் காயவைத்து உலர்ந்ததும் இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம். (சூரிய) ஒளியில் காய வைத்தால் அறுகம்புல்லில் உள்ள 'ப' சையம் அழிந்து விடும்.

Also Read : காய்கறி வகைகள் அதன் மருத்துவ பயன்கள்!!!

காலை உணவை நீக்கி அறுகம்புல் சாறு குடித்து வந்தால் குடல்புண், மூலநோய் குணமாகிறது. மேலும், காச நோய்க்கு இது நல்ல நிவாரணியாகிறது. தொழுநோய் மற்றும் அனைத்து தோல் நோய்களுக்கு நிகரற்ற நிவாரணி அறுகம்புல் சாறு என்றால் மிகையாகாது. 

உடல் பருமனை குறைக்கவும். தொந்தியை கரைக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் அறுகம்புல் பெரிதும் பயன்படுகிறது. உடலில் கழிவு மண்டலம் பலமிழப்பதால் கழிவுகள் வெளியேறாமல் இரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மையை உண்டாக்குகிறது. அறுகம்புல்சாறு அதை வெளியேற்றி இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

இளம் வயதினருக்கு பாலியல் உறுப்புகளை வயதுக்கேற்ற வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. ஜனனேந்திரிய கோளாறுகள் அனைத்தையும் நீக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களது இல்லற இன்பத்தைப் பாதுகாக்கிறது.

அழகையும் அறிவு வளர்ச்சியையும் உண்டாக்குகிறது. இவ்வாறு எண்ணற்ற மருத்துவப் பயனைத் தருவதால் அறுகம்புல்லை ஒரு "அதிசயப்புல்" எனலாம்.

3. அருகம்புல்லின் பிற மருத்துவப் பயன்கள்

அறுகம்புல் ஒரு கைபிடியளவு, சிறுநெரிஞ்சிச் செடியை வேருடன் பிடுங்கி பொடியாக நறுக்கி அதில் ஒரு கை பிடியளவு. எடுத்து இடித்து குடிநீர் செய்து வடிகட்டி வேளைக்கு 50 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக, மூன்று நாட்களுக்குக் குடித்து வர கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல். தேக உஷ்ணம் இவையனைத்தும் குணமாகும்.

மூலநோயால் அவதிப்படுவோர்க்கு அறுகம்புல் இரசத்துடன், இஞ்சி ரசம், தேன் சமமாகக் கலந்து காலை மாலை 10 மில்லியளவு பருகிவர குணமாகும். அதோடு மலச்சிக்கல் நீங்கலாம். எளிதில் வெளியேறி சுகம் தரும்.

தீராத வயிற்று வலிக்கு அறுகம்புல்லுடன் சமமாக வேப்பில்லையும் கலந்து இடித்து 4 லிட்டர் சுத்தமான நீர் விட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியளவு வற்றியதும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இவ்வாறு மூன்று நாட்கள் இக்குடிநீரை தயாரித்துக் குடிக்க குணம் கிடைக்கும்.

அறுகம்புல் கைப்பிடியளவு அதேபோல் வில்வம் கைப் பிடியளவு எடுத்து ஒன்றாகச் சேர்த்து அரைத்து லேசாக சூடான நீர்கலந்து சாறு பிழிந்து 1/2 டம்ளர் அளவு எடுத்து, 1/2 டம்ளர் இளநீர் கலந்து 27 நாட்களுக்கு காலை வெறும் வயிற்றில் குடித்து வர இருதய சம்பந்தமான எல்லா நோய் களும் குணமாகும்.

அறுகம்புல் தைலம் :-

அறுகம்புல் சாறு 4 லிட்டர். வெந்தயம் 2 ஸ்பூன், சீரகம் 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1/4 படி இவைகளில் வெந்தயம். சீரகம் இரண்டையும் அறுகம்புல்லில் சேர்த்து இடித்த சாறு 1/4 படியை தேங்காய் எண்ணெயில் கலந்து நீர்ச்சத்து போகும் வரை காய்ச்சி வடித்து வடிகட்டி தலையில் தேய்க்க கூந்தல் நீளமாக வளரும். அதோடு பொலிவுடனும், அழகுடனும் பட்டுப் போலவும் காட்சி தரும்.

மாதவிலக்கு பெண்களுக்கு சாதாரணமாக மூன்று முதல் நான்கு நாட்கள் வரை இருப்பது இயல்பு. அதற்கு மேல் நீடிப்பது இரத்தக் குறைபாடு உண்டாகி உடல் இளைத்துவிடும். அதற்கு அறுகம்புல்லையும் மாதுளம் இலையையும் சேர்த்து கஷாயம் வைத்து வடிகட்டி, காலை மாலை 1/2 டம்ளர் அளவு அருந்தி வர வேண்டும். இரண்டொரு நாளில் பெரும்பாடு என்னும் மாதவிலக்கு நோய் குணமாகும்.

அறுகம்புல் ஒருகைப்பிடி, துளசி ஒருகைப்பிடி, மிளகு ஒரு தேக்கரண்டியளவு எல்லாவற்றையும் இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு கலந்து நன்றாகக் காய்ச்சி 1/8 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டி இதை ஒரு வேளைக்கு சமமாகப் பங்கிட்டு காலை-மாலை கொடுத் தால் காய்ச்சல் தணிந்துவிடும்.

காய்ச்சல் தீவிரமாக இருப்பின் இந்தக் குடிநீரை காலை-மதியம் மாலை-இரவு ஆகிய நான்கு வேளையும் கொடுத்து வர எத்தகைய காய்ச்சலும் தணியும்.

அறுகம்புல்லின் மிகப் பெரிய பலன்கள் :-

அறுகம்புல் நாம் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு புல் வகையாகும். இதனை பிள்ளையாரின் வழிபாட்டுக்காக நம் இந்துக்கள் உபயோகம் செய்கிறார்கள். எனவே இது ஒரு தெய்வீக மூலிகை என்று மதிக்கப்படுகிறது. நமக்கு எளிதாக கிடைப்பதலோ. இதனை சிலர் மிகவும் அலட்சியப்படுத்து கின்றனர். இதனால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்.

1. அறுகம்புல்லானது திரிதோஷங்கள் எனப்படக் கூடிய வாதம், பித்தம், ஐயம் எனப்படும் நோய்களைக் கண்டிக்கிறது.
2. கோழை நோயைக் குணமாக்குகிறது.
3. கண்ணிலே எவ்வகையான பிரச்சினைகள் இருந்தாலும் அதனைத் தீர்த்து வைக்கிறது.
4. தலையில் ஏற்படக்கூடிய பற்பல வியாதிகளை நிவர்த்தி செய்கிறது.
5. கண்களில் உண்டாக்கும் புகைப்படலம், கண்கள் முன் பூச்சி பறப்பது போன்ற பிரமை இவற்றை நீக்கி வைக்கிறது.
6. இரத்தத்தில் உண்டாகக்கூடிய பித்தத்தினை நிவர்த்தி யாக்குகிறது.
7. ஏதாவது நோயின் பொருட்டு மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது, அந்த மருந்தினால் உடலில் சூடேறி விட்டதென்றால், அச்சூட்டினை இது நிவர்த்திக்கிறது.
8. அறிவைத் துலக்கி, பிரகாசமுடையச் செய்வதில் இதுவே தன்னிகரற்றதாக விளங்குகின்றது.

Also Read : 12 வகையான கீரைகள் அதன் மருத்துவ பயன்கள்!!!

பெரும்பாடு என்னும் நோயைத் தீர்க்கும் முறை :-

பெரும்பாடு எனப்படும் நோய் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய வியாதியாகும். இந்த நோயானது மாதவிடாய் காலங்களில் மட்டுமே ஏற்படும்.

அளவுக்கு அதிகமான இரத்தப் போக்கு ஏற்படக்கூடிய காலங்களிலேயும், நிற்காத இரத்த போக்கு காலங்களிலேயும், இந்த நோய்களைப் பெரும்பாடு என்று சித்த வைத்தியம் தெரிந்தவர்கள் வர்ணிப்பார்கள். இப்படிப்பட்ட காலங்களிலே இதனைக் குணமாக்க அருகம்புல்லைக் கீழ்வரும் விதமாகப் பயன்படுத்தலாம்.

1. அறுகம்புல்லை வேருடன் பிடுங்கிக் கொண்டு வரவும். 
2. இதனைச் சுத்தமாக தண்ணீரிலே நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. கைப்பிடி அளவுக்கு இப்புல்லிலிருந்து எடுத்துக் கொள்ளவும்.
4. பின்னர் கீழ்வரும் பொருட்களைச் சேகரிக்கவும்.
அ. கானாம் வாழை இலை
ஆ. அசோக மரத்தின் உள்ளே இருக்கும் பட்டை மேற்சொன்ன இரண்டையும் கைப்பிடி அளவுக்குச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.
5. பின்னர் எல்லாவற்றையும் அம்மிக்கல் ஒன்றிலே வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்ததைத் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

உண்ணும் முறை :-

பெரும்பாடுக்கு உட்பட்ட நோயாளிகள் இந்த விழுதை ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையை காலையில் ஒரு வேளையும் நண்பகல் உணவு வேளையின் போதும், மாலையில் ஒரு வேளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு விட வேண்டும். இச்சமயத்தில் வெந்நீர் ஒரு டம்ளர் அளவுக்குச் சாப்பிட்டுவிட வேண்டும்.

மருந்துண்ணும் காலம் :-

இந்த மருந்தினை ஒரு நாளைக்கு மூன்று வேளை என்ற ரீதியில், மூன்று நாட்கள் தொடர்ந்து ஒன்பது வேளைகள் சாப்பிட்டு வர பெரும்பாடு எனப்படும் நோயானது பூரணமாகத் தீர்ந்து போகும்.

4. அறுகம் வேரின் மருத்துவப் பயன்கள்

அறுகம்புல் பற்பல மருத்துவ சிகிச்சைகளுக்கு உபயோகபடுவது போல, நீரிழிவு நோய்க்கு அருகம் வேரானது பெரிதும் உதவி செய்கிறது.

அதாவது, முதன் முதலில் தென்னம் பானைகளைக் கொண்டு அதைச் சுத்தமான அம்மி ஒன்றிலே வைத்து நசுக்கிக் கொள்ளவும். நன்றாக தோய்ந்திருக்க கூடிய எருமைத் தயிர் சிறிதளவு எடுத்து இதில் விட்டு நன்றாக அம்மியிலே வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். 

பின் ஒரு வெள்ளைத் துணியில் அரைத்ததை வாரி வைத்து சாற்றைப் பிழிந்து விடவும். இதன் பின்னர் கீழ்வரும் சரக்குகளை அம்மியில் வைத்து அரைக்கவும்.

1. வெள்ளைத் துணியின் உதவியால் பிழியப்பட்ட சரக்கு
2. இலவம் பிசின்
3. புளியங்கொட்டைத் தோல்
4. பொன் மெழுகு
5. ஏலக்காய்

ஆகிய சரக்குகள் அனைத்தையும் ஒன்று கூட்டி அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சுத்தமான எருமைத் தயிர்விட்டு நன்றாகக் கலக்கி சாப்பிட வேண்டியது, இந்த மருந்தினைக் குடித்த பின்னர் கீழ்வரும் சரக்குகளை சமன் எடை எடுத்துக் கொள்ளவும்.

1. அகத்தியின் பட்டை 
2. நாகப் பட்டை
3. ஆலம் விழுது
4. அருகம் வேர்

மேற்சொன்ன நான்கு சரக்குகளையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் கல்லுப் பொடியைப் போடவும். இப்போது மருந்துகளின் அளவோடு எட்டு மடங்கு அளவுக்குத் தண்ணீர் விட்டு எட்டி லொரு பாகமாகக் காய்ச்சவும்.

இது கஷாயப் பதத்துக்கு வந்தவுடன் இந்தக் கஷாயத்தை நன்றாக வடிகட்டி சாப்பிட்டுவிட வேண்டும். எல்லா விதமான நீரிழிவு நோய்களும் மறைந்து போகும்.

அறுகம்புல்லின் வேர். மற்ற மருந்துச் சரக்குகளுடன் ஒரு சரக்காகப் பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. அறுகம்வேர் மருந்துச் ஏனைய சரக்குகளில் ஒன்றாக பெரும்பாலும் சித்த மருத்துவர்களினால் கையாளப்பட்டு வருகின்றது.

Also Read : கீரை வகைகள் மற்றும் மருத்துவ பயன்கள்!!!

Previous Post Next Post