தோலுங்காசனம் (Tolangulasana) பயிற்சி செய்யும் முறை :

ஒரு விரிப்பின் மீது பத்மாசனத்தில் உட்காரவும். ஆசனம் கலையாமல் மெதுவாகப் படுக்கவும். இரு கைகளையும் இரு பிருஷ்ட பாகத்தின் சதையின் கீழ் உடலைத் தாங்கும் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

ஒரு விரிப்பின் மீது பத்மாசனத்தில் உட்காரவும். ஆசனம் கலையாமல் மெதுவாகப் படுக்கவும். இரு கைகளையும் இரு பிருஷ்ட பாகத்தின் சதையின் கீழ் உடலைத் தாங்கும் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

தலையையும் உயர்த்தவும். முகவாய்க் கட்டையை மார்பைத் தொடும் மாதிரி வைக்கவும். பத்மாசனத்திலிருக்கும் கால் மூட்டுகளைச் சற்று உயர்த்தவும். 

உள்ளங்கைகளின் ஆதாரத்தில் உடல் வளைந்தும் கால்கள் உயர்ந்தும் இருப்பது தோன்றும். ஊஞ்சல் ஆடுவது போல் முன் பக்கமும் பின்பக்கமுமாகச் சற்று ஆடவும்.

தோலுங்காசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

இருபது வினாடிகள் இரண்டு மூன்று முறைசெய்யவும்.

தோலுங்காசனம் பயிற்சியின் பலன்கள் :

உடலில் வாயு உபத்திரவம் அடியோடு போகும். குடல் பகுதியில் அழுத்தம் ஏற்படுவதால் மலமானது மலத்துவாரத்துக்கு வர உதவுகிறது. மார்பு விரிவடையும். கைகளின் தசையும் நரம்பும் செயல்பட உதவுகிறது.

Previous Post Next Post