வஜ்ராசனம் (Vajrasana, Thunderbolt Pose)

வஜ்ஜிரம் என்பது இந்திரனின் ஆயுதத்தின் பெயர்.

வஜ்ராசனம் பயிற்சி செய்யும் முறை :

காலை நீட்டி உட்கார வேண்டும், இரண்டு காலையும் பின்புறமாக மடித்து மண்டியிட்டு அமர வேண்டும். இரண்டு பாதங்களின் பெரு விரல்கள் ஒன்றோடு ஓன்று பொருந்தும் படி பாதங்களின் மேல் உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டும், கைகள் இரண்டையும் முழங்கால்களின் மீது வைக்க வேண்டும்.

வஜ்ராசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் செய்யலாம். இரண்டு மூன்று முறை செய்யலாம்.

வஜ்ராசனம் பயிற்சியின் பலன்கள் :

மன உறுதி உண்டாகும், உடல் வஜ்ஜிரமாகும். பாதம், கனுக்கால், தசைகள், தொடைகள், இடுப்பு முதலிய உறுப்புகள் பலம் பெறும். உடலில் உள்ள கெட்ட நீர் தங்காது, யானை கால் வியாதி நீங்கும், அஜீரணம் போகும், கருவுற்ற பெண்கள் வஜ்ஜிராசனத்தை மூன்று மாதம் வரை செய்யலாம். அதற்கு மேல் செய்தல் கூடாது.

Previous Post Next Post