மத்ஸ்யாசனம் (Matsyasana or Fish pose)

மத்ஸியா என்றால் மீன் என்று பொருள். இந்த ஆசனம் நீரில் மீன்போல் மிதக்க உதவுவதால் இப்பெயர்.

மத்ஸ்யாசனம் பயிற்சி செய்யும் முறை :

பத்மாசனத்தில் அமரவும் பின் அப்படியே கால்கள் தரையில் இருக்க மெல்ல பின் பக்கமாக படுக்கவும்.

பத்மாசனத்தில் அமரவும் பின் அப்படியே கால்கள் தரையில் இருக்க மெல்ல பின் பக்கமாக படுக்கவும்.

கைகளை தலைப்பக்கம் தரையில் ஊன்றி உடம்பை மேலே உயர்த்தி உள்ள கால்களை கைகளால் பற்றிக் கொண்டு தலையை மேலும் பின்னால் இழுத்து முதுகு வளைவை அதிகப்படுத்தவும்.

மத்ஸ்யாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

பத்து முதல் இருபது வினாடி செய்யவும். ஒரு முறைசெய்தால் போதுமானது.

மத்ஸ்யாசனம் பயிற்சியின் பலன்கள் :

இந்த ஆசனம் நுரையீரல் பீட்யூட்டரி, தைராய்டு கோளங்கள் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு ஊக்கமளிப்பதாகும். இரத்த ஒட்டத்தை சுறுசுறுப்படையச் செய்யும். மார்புக்கூடு அகன்று விரியும்.

இந்த ஆசனத்தின் மூலம் நுரையீரல் தொடர்பான நோய்கள், சுவாசகாசம் எனப்படும். ஆஸ்துமா, கஷயரோகம், இருமல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும். 

மத்ஸ்யாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

பருமனாக உள்ளவர்கள் பத்மாசனம் செய்ய முடியாவிட்டால் சாதாரண நிலையில் அமர்ந்து இப்பயிற்சி செய்யவும். அல்லது பத்மாசனம் நன்கு பயின்று பின் செய்யவும்.

Previous Post Next Post