ஆகர்ஷண தனுராசனம் (Akarshan Dhanurasana)

தனுராசனத்தின் சற்று மாறுதல்களுடன் கூடினது. தனுராசனத்தைக் காட்டிலும் சுலபமானது என்றும் கூறலாம்.

தனுராசனத்தின் சற்று மாறுதல்களுடன் கூடினது. தனுராசனத்தைக் காட்டிலும் சுலபமானது என்றும் கூறலாம்.

ஆகர்ஷண தனுராசனம் பயிற்சி செய்யும் முறை :

ஒரு விரிப்பை நீளவாட்டில் மடித்து அதன் மீது உட்காரவும். கால்களை நீட்டிக் கொள்ளவும்.

இடக் கைவிரலால் வலக் கால் கட்டை விரலை பிடித்துக் கொள்ளவும். மெதுவாக இடக் காலை மடக்கி முகவாய்க் கட்டை வரை வரும்படி அமைக்கவும். 

இந்த நிலையில் தொடை வயிறுக்குச் சமீபம் அமையும். இது போன்று இடக் கால்விரலை வலக் கையால் பிடித்துக் கொள்ளவும்.

இதே நிலையில் முழங்கையைப் பின்பக்கமாக வளைவு தரும் படி அமைக்கவும். இரு கால்களும் பெருக்கல் குறி போன்று அமையும். அவ்வளவு தான்.

ஆகர்ஷண தனுராசனம் செய்யும் நேர அளவு :

பத்து வினாடிகள் செய்தால் போதுமானது.

ஆகர்ஷண தனுராசனம் பயிற்சியின் பலன்கள் :

தனுராசனத்தின பலன்கள் ஓரளவு இந்த ஆசனத்தினாலும் கிடைக்கும், முக்கியமாக இடுப்புப் பிரதேசம் நன்மை அடைகிறது. இந்தப் பாகத்துக்கு அதிக ரத்த ஒட்டம் கிடைக்கிறது.

Previous Post Next Post