கருடாசனம் (Garudasana Yoga pose)

இந்த ஆசனம் கருடனைப் போன்று தோற்றமளிப்பதால் இதற்கு கருடாசனம் என்று பெயர்.

கருடாசனம் பயிற்சி செய்யும் முறை :

முதலில் நேராக நிற்கவும். வலதுக் கால் பூமியில் நன்றாக ஊன்றும் படி வைக்கவும். இடதுக் காலைத் தூக்கி வலது காலின் மீது சுற்றினால் போன்று வைக்கவும்.

    

முதலில் நேராக நிற்கவும். வலதுக் கால் பூமியில் நன்றாக ஊன்றும் படி வைக்கவும். இடதுக் காலைத் தூக்கி வலது காலின் மீது சுற்றினால் போன்று வைக்கவும்.

இந்த நிலையில் இரு தொடைகளும் ஒன்றையொன்று சாய்வாக அமைவதை பார்க்கலாம். இடக் கையை வலக் கையைச் சுற்றினால் போன்று அமைத்து இரண்டு கைகளின் உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று தொடும் படி அமைக்கவும்.

கருடாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

இருபது வினாடிகள் நிற்கவும். இரு கால்களையும் மாற்றி மாற்றிச் செய்யவும்.

கருடாசனம் பயிற்சியின் பலன்கள் :

கால்களும், கைகளும் நீளமாக உதவும். கால்களில் வரும் உபத்திரவம் நீங்கும். தவிரவும் ஆண்களில் சிலருக்கு ஜனன இந்திரியத்தில் விறைகள் பெருப்பதும் உண்டு இந்தக் கோளாறும் நீங்கும்.

கருடாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

இந்த ஆசன நிலையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி அதிக நேரம் நிற்கப் பழகலாம். இந்நிலையில் முடிந்தால் கண்களையும் மூடிக் கொண்டும் செய்யலாம், சாதாரணமாக நாம் நிற்கும் நிலையும் ஒரு வகை ஆசனமாகும்.

அவ்வாறு நாம் நிற்கும் போது உடலின் பாரம் இரு கால்களிலும் வரும் படி நிமிர்ந்து நிற்கவும். உடலைச் சாய்த்துக் கொண்டும், உடல் பாரம் ஒரு காலில் விழும் படியும் நிற்பது சரியான நிலையாகாது, கருடாசனம் செய்யும் போது மட்டுமே சில நிமிடமே ஒரு காலில் நிற்கிறோம் என்பதை கவனிக்கவும்.

Previous Post Next Post