சுகாசனம் பயிற்சி செய்யும் முறை :

சுகாசனம் Easy Pose (Sukhasana) சுமார் ஐந்து அடி நீளமுள்ள துண்டு அல்லது ஒரு நாடாவை நீளவாட்டில் மூன்று அங்குலம் அல்லது நான்குவிரல் அகலம் இருக்குமாறு மடித்துக் கொள்ளவும். தரையில் ஒரு விரிப்பை வைத்து அதன்மீது சாதாரணமாக உட்காரும் நிலையில் உட்காரவும். கால்களை மார்புவரை மடக்கிக் கொள்ளவும். 

சுகாசனம் Easy Pose (Sukhasana) சுமார் ஐந்து அடி நீளமுள்ள துண்டு அல்லது ஒரு நாடாவை நீளவாட்டில் மூன்று அங்குலம் அல்லது நான்குவிரல் அகலம் இருக்குமாறு மடித்துக் கொள்ளவும்.

மடிக்கப்பட்ட நீளமான துண்டு அல்லது ஒரு நாடாவை இடக்கால் முட்டியில் வைத்து ஒரு கையால் அதைப் பிடித்துக் கொள்ளவும்.

மறுகையால் அதை உடலைச் சுற்றி வந்து முன்புஒரு நுனி வைத்த இடத்துக்குக் கொண்டு வரவும். இரு நுனிகளையும் முடி போட்டுக் கொள்ளவும்.

கைகளை முழங்கால் மத்தியில் அமைக்கவும். வணக்கம் தெரிவிக்கும் மாதிரி உள்ளங்கைகளைச் சேர்த்துக்கொண்டு விரல்களை மடக்கி கட்டை விரல்களை மட்டும் நீட்டிக் கொள்ளலாம். நிமிர்ந்து உட்கார வேண்டும்.

சுகாசனம் பயிற்சியின் பலன்கள் :

முதுகு கூன் விழுவதைத் தடுக்கிறது. வயிற்றுக்குள் இருக்கும் உறுப்புக்கள் அதன் இடத்தில் அழுத்தாப்படாமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

ஆகர்ஷண தனுராசனம் செய்வது எப்படி

Previous Post Next Post