உஷ்ட்ராசனம் - 1 (Ustrasana, Ushtrasana, or Camel Pose)

சமஸ்கிருதத்தில் உஷ்ட்ரா என்று சொன்னால் ஒட்டகம் என்று பெயர்,இந்த ஆசனம் செய்து முடித்த நிலையானது. ஒட்டகம் போன்று உள்ளது, அதனால் உஷ்ட்ராசனம் என்று பெயர்.

சமஸ்கிருதத்தில் உஷ்ட்ரா என்று சொன்னால் ஒட்டகம் என்று பெயர்,இந்த ஆசனம் செய்து முடித்த நிலையானது. ஒட்டகம் போன்று உள்ளது, அதனால் உஷ்ட்ராசனம் என்று பெயர்.

உஷ்ட்ராசனம் - 1 செய்யும் முறை :

முழங்கால் மடித்து மண்டியிடுவது போல் செய்ய வேண்டும். முழங்காலின் மீதும் பாதங்களின் மீதும் புட்டப் பகுதி பதியும் வகையில் அமர வேண்டும்.

கைகளால் கனுக்கால் பக்கமிருக்கும் குதிகாலைப் பிடித்தவாறு புட்டத்தை உயர்த்த வேண்டும், மார்பு பகுதியை நன்றாக உயர்த்தி வயிற்று பகுதியை மேல் எழுப்ப செய்ய வேண்டும். பின்புறமாக தாழ்த்த வேண்டும்.

பலன்கள் :

உயரமாக வளர வழி செய்யும், வலிமை உள்ள மார்பும் ஏற்படும் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

உஷ்ட்ராசனம்-2

உஷ்ட்ராசனம்-2 செய்யும் முறை :

வஜ்ராசன நிலையில் கைகளை பின்தள்ளி உடம்பை சாய்த்து பின்புறமாக தரையில் ஊன்றவேண்டும். பிறகு பிட்டத்தை உயர்த்தி மார்பையும் உயர்த்த வேண்டும். தலையை பின்புறமாக தாழ்த்த வேண்டும், எட்டு தடவை செய்தால் நலம் பயக்கும்.

நேர அளவு :

பத்து முதல் இருபது விநாடிகள் செய்யவும், இரண்டு மூன்று முறைசெய்யவும்.

பலன்கள் :

தொய்வான தோள்கள். கூன் முதுகு சரி செய்யப்படும், மார்பு விரிவடைந்து நுரையிரல்கள் காற்று இழுக்கும் சக்தியை அதிகம் பெறுகின்றன.

பயிற்சியாளர் கவனத்திற்கு :

ஆரம்பத்தில் உஷ்டராசனம்-1 மட்டும் செய்தால் போதுமானது. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியதில்லை. ஏதாவது ஒன்று செய்தால் போதுமானது. வயதானவர்களும், முதுகெலும்பில் அடிபட்டவர்கள் கூட இதைச் செய்யலாம். நன்றாக முதுகு வளைந்தபிறகு உஷ்டராசனம்-2 வதை செய்ய தொடங்கலாம்.

Previous Post Next Post