தனுராசனம் (Dhanurasana)

தனுராசனம் என்பது வில் போன்ற இரு ககையெனப் பொருள்படும் வில் போன்று தோற்றம் அளிப்பதால் இப்பெயர். 

தனுராசனம் என்பது வில் போன்ற இரு ககையெனப் பொருள்படும் வில் போன்று தோற்றம் அளிப்பதால் இப்பெயர்.

தனுராசனம் செய்யும் முறை :

சலபாசனம் செய்து முடிந்ததும், அதே நிலையில் குப்புறப் படுத்து கொண்டபடியே கால்கள் இரண்டையும் முதுகின் பக்கமாக வளைக்கவும், இரு கைகளிலும் வளைத்த கால்களைக் கணுகாலுக்கருகில் பிடித்துக் கொள்ளவும்.

படத்தில் காட்டியவாறு நன்கு கவனித்து சுவாசத்தை வெளியே விட்டுக் கொண்டே முதலில் கால்களைச் சேர்த்தவாறே உயரத் தூக்கவும். பின்பு தலையையும் கழுத்தையும் முடிந்த வரைக்கும் பின்னால் இழுத்து வளைக்கவும்.

நேர அளவு :

மூன்று முதல் ஜந்து வினாடி வரை நிறுத்தவும். இவ்வாறு இரண்டு மூன்று முறைகள் செய்யவும். 

பலன்கள் :

வயிற்று உறுப்புகளை வலுப்படுத்துகிறது, தொப்பையை குறைக்கிறது. கூன் முதுகை சரி செய்கிறது, முட்டி வலிகள் குணமடைகின்றன. நழுவிய முதுகுத் தண்டு. ஆஸ்துமா.நீரழிவு நோய் சரி செய்யப்படுகிறது, வயிறு.இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்குகிறது, மாதவிலக்கில் குறைபாடுள்ள பெண்களுக்கு இது மிகவும் பயனுடையது.

பயிற்சியாளர் கவனத்திற்கு :

புதிதாகப் பழகுகிறவர்கள் ஒரு கணுக்காலை மட்டும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு காலை வெறுமனே நீட்டியவாறு இந்த ஆசனத்தைச் செய்யலாம். இவ்வாறு சில நாட்கள் மாறி மாறிச்செய்து பழகினால் பின்னர் இரு கணுக்கால்களையும் கைகளால் பிடித்துக் கொண்டு இந்த ஆசனத்தை திறம்படச் செய்யலாம்.

Previous Post Next Post