சித்தாசனம் (Siddhasana - Accomplished Pose)

பலவிதமான சித்திகளை அடைந்த மகான்கள் இந்த ஆசனத்தில் இருந்ததால் இந்நிலைக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பலவிதமான சித்திகளை அடைந்த மகான்கள் இந்த ஆசனத்தில் இருந்ததால் இந்நிலைக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சித்தாசனம் செய்யும் முறை :

ஒரு விரிப்பை மடித்துத் தரையில் வைத்து அதன் மீது உட்காரவும். ஒரு காலின் குதிகால் பாதத்தை மலத்தவாரத்துக்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.

அடுத்த காலின் குதிகால் பாதத்தை ஜனன இந்திரியத்தின் கீழ்ப் பகுதியில், ஜனன இந்திரியம் அழுத்தப்படாமல் வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் இரண்டு கணுக்கால் மூட்டுக்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு காணப்படும். தொடர்ந்து பழகினால் சில தினங்களில் சரியான நிலையில் அமர முடியும்.

நேர அளவு :

பத்து வினாடிகள் செய்தால் போதுமானது.

பலன்கள் :

அதிக நேரம் தியான நிலைக்கு இது உகந்தது, பிரம்மசரியத்தைக் காக்கப் பெரிதும் உதவும்.

பயிற்சியாளர் கவனத்திற்கு :

பெண்கள் இந்த ஆசனம் செய்வது தேவையில்லை.

Previous Post Next Post