காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு:

கி.பி. 1968ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் இம்மாவட்டம் உருவாக்கப் பட்டது. இதன் தலைநகரம் காஞ்சிபுரம். பல்லவர் காலத்தில் பல்லவ பேரரசின் தலைநகரமாக விளங்கியது. முதலில் செங்கை எம். ஜி. ஆர் மாவட்டம் எனவும், பின்னர் செங்கை அண்ணா மாவட்டம் எனவும் அழைக்கப்பட்டு. தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் எனப் பெயர் பெற்றுள்ளது.

முதலில் செங்கை எம். ஜி. ஆர் மாவட்டம் எனவும், பின்னர் செங்கை அண்ணா மாவட்டம் எனவும் அழைக்கப்பட்டு. தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் எனப் பெயர் பெற்றுள்ளது.

தலைநகர்: காஞ்சிபுரம்

பரப்பு: 1655.94 ச.கி.மீ

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மக்கள்தொகை:

மொத்தம்: 11,66,401

காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவுகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வருவாய்த்துறை :

கோட்டங்கள் : 2

வட்டங்கள் : 5

வருவாய் குறுவட்டங்கள்: 25

வருவாய் கிராமங்கள் : 479

காஞ்சிபுரம் மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகள் :

மாநகராட்சி: 1

நகராட்சிகள்: 2

பேரூராட்சிகள்: 3

ஊராட்சி ஒன்றியங்கள்: 5

கிராம ஊராட்சிகள்: 274

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தொகுதிகள் :

சட்டமன்ற தொகுதிகள் : 4

பாராளுமன்ற தொகுதி : 2

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆறுகள் : 

பாலாறு; செய்யாறு; அடையாறு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தொழிற்சாலைகள்:

கல்பாக்கம் அணுமின் நிலையம், தோல் பொருள் தொழிற்சாலை, தோல் பதனிடுதல், கைத்தறி நெசவு, பட்டு நெசவு, ஹூண்டாய் கார் தொழிற்சாலை, மகேந்திரா போர்டு தொழிற்சாலை, செயின்ட்கோபின் மிதவைக் கண்ணாடித் தொழிற்சாலைகள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயம்:

ஏரிகள் மிகுந்துள்ளமையால் ஏரி மாவட்டம் எனப்படுகிறது. ஏரிகளின் எண்ணிக்கை 3,696, புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரி இங்குள்ளன. நெல், கரும்பு, நிலக்கடலை, கேழ்வரகு, காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வழிபாட்டுத் தலங்கள்:

காஞ்சி வரதராஜப் பெருமாள், காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர், கைலாச நாதர், குமரக் கோட்டம், மகாபலிபுரம், திருக்கழுக் குன்றம், உலகளந்தப் பெருமாள், வல்லக்கோட்டை, மேல்மருவத்தூர், காமகோடி பீடாதிபதி மடம் ஆகியன காஞ்சிபுரம் மாவட்டத்தின் வழிபாட்டு தலங்கள் ஆகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள்:

காஞ்சிபுரம், வேடந்தாங்கல், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, முட்டுக்காடு முதலைப் பண்ணை. 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிறப்புகள்:

காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்குப் புகழ்பெற்றது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், மகாபலிபுரம் கல்வெட்டுகள். சிற்பங்கள். ரதங்கள். காஞ்சிபுரம் புராதனக் கோயில்கள், உத்திரமேரூர் கல்வெட்டு சோழர் காலத்திய குடவோலை தேர்தல் முறையை விளக்குகிறது. அண்ணா சர்வதேச விமானநிலையம், காமராஜர் உள்ளூர் விமான நிலையம், இராணுவ விமான நிலையம் ஆகியவை உள்ளன. இவ்வூர் ஏரிஜில்லா எனப் புகழ் பெற்றது.

Previous Post Next Post