சென்னை மாவட்டத்தின் வரலாறு:
கி.பி. 1659 ஆம் ஆண்டு சென்னை நகரம் நிர்மாணம் செய்யப்பட்டது. 1640 இல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
1746, 1758 மற்றும் 1772 ஆம் ஆண்டு காலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பின் நாடு சுதந்திரம் அடையும் வரை சென்னை ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தது.
சென்னப்ப நாயக்கரின் பெயரால் சென்னப்ப நாயக்கன் பட்டினம் என வழங்கப்பட்டது சென்னைப் பட்டினமாகி இப்போது சென்னை ஆயிற்று. மதராஸ் பட்டினம் என்பதே ஆங்கிலேயர் வைத்தப் பெயர்.
தலைநகர் : சென்னை
பரப்பளவு:
மொத்தம்: 178 ச.கி.மீ
மக்கள்தொகை:
மொத்தம்: 67,48,026
ஆண்கள்: 33,31,478
பெண்கள்: 34,14,827
திருநங்கைகள்: 1,721
சென்னை மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவுகள் :
சென்னை மாவட்டத்தின் வருவாய்த்துறை :
கோட்டங்கள் : 3
வட்டங்கள் : 16
வருவாய் கிராமங்கள் : 122
சென்னை மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகள் :
மாநகராட்சி : 1
மண்டலம் : 15
வார்டு : 200
சென்னை மாவட்டத்தின் தொகுதிகள் :
சட்டமன்ற தொகுதிகள் : 16
பாராளுமன்ற தொகுதி : 3
சென்னை மாவட்டத்தின் ஆறுகள் :
கூவம், அடையாறு.
சென்னை மாவட்டத்தின் கால்வாய் :
பக்கிங்ஹாம், ஒட்டேரி.
சென்னை மாவட்டத்தின் தொழிற்சாலைகள் :
இரயில் பெட்டித் தொழிற்சாலைகள், தோல் பொருள் தொழிற்சாலைகள், சைக்கிள் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள், இயந்திரத் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கிண்டி - அம்பத்தூர் தொழில் மையங்கள், உரத் தொழிற்சாலை, ஆவடி டாங்கித் தொழிற்சாலை, டயர் தொழிற்சாலைகள்.
சென்னை மாவட்டத்தின் வழிபாட்டு இடங்கள் :
கந்தகோட்டம், வடபழநி, மாங்காடு, அஷ்டலஷ்மிகோவில், திருவேற்காடு ஸ்ரீராகவேந்திரா மடம், சாந்தோம் சர்ச், ஜார்ஜ் டவுன், பெசன்ட் நகர், திருவல்லிக் கேணி, ஆயிரம் விளக்கு மசூதி, மயிலை, திருவான்மியூர்.
சென்னை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்கள் :
அறிவியல் பூங்கா, பிர்லா கோளரங்கம், வள்ளுவர் கோட்டம், கோல்டன் பீச், வண்டலூர் மிருகக்காட்சி சாலை, மெரினா பீச், கிண்டி சிறுவர் பூங்கா. மியூசியம், திரைப்பட நகரம், கலங்கரை விளக்கம், முதலைப் பண்ணை. கிஷ்கிந்தா, டிஸ்னிவோல்டு.
சென்னை மாவட்டத்தின் சிறப்புகள் :
இது தமிழகத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரம். உலகத்திலேயே இரண்டாவது நீண்ட கடற்கரை இங்குள்ளது.
தொழிற் துறையில் சிறந்த துறைமுக நகரமான இது பன்னாட்டு விமானச் சேவையால் உலகத்தின் பல பகுதிகளோடு இணைக்கப்பட்டடுள்ளது.
தொலைக்காட்சி நிலையங்கள், வானொலி, உயர்நீதிமன்றம், பிர்லா அறிவியல் கோளரங்கம், தலைமைச் செயலகம், சட்டமன்றம் மற்றும் வெளிநாட்டுத் துதரகங்களும் இங்குள்ளன.
சென்னையிலுள்ள தரமணியில் எல்காட்டும், டிட்கோவும் ஒருங்கிணைந்து டைடெல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்பு நிலையங்கள் பல உள்ளன.
பல இந்திய மொழி பேசுவோரும், அயல் நாட்டவரும், பல மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழும் பெரும்பகுதி. கோயம்பேடு அருகில் 36.57 ஏக்கரில் உருவான சென்னை புறநர் ருேந்து நிலய (சி.எம்.பி. டி)ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து போக்குவரத்து நிலையமாகும்.