இரண்டு வகையான மின்னோட்டம் குறித்த தகவல்கள் உள்ளன.
1. எலெக்ட்ரான் தேற்றம்
இதன்படி மின்னோட்டாமானது -ve லிலுந்து +ve வை நோக்கி நடைபெறுகிறது. எலெக்ட்ரான்கள் அணுவை விட்டு அணுவிற்குக் கடத்தியின் மூலம் +ve வை நோக்கிப் பயணப்படுகின்றன.
2. மரபுத் தேற்றம்
இது ஹோல் தியரி என்றும் அழைக்கப்படுகிறது. மின்னோட்டம் +ve லிருந்து - Veவை நோக்கி நடைபெறுகிறது. புரோட்டான்கள் அல்லது எலெக்ட்ரானின் இழப்பு (ஹோல் -ve வை நோக்கிப் பயணிக்கிறது. (மின்னோட்டம் எலேக்ட்ரான் தியரியின் நேர் எதிர்)
எலெக்ட்ரிகல் அடிப்படை
ஸ்டேடிக் எலெக்டிரிசிட்டி என்பது நிலை மின்சாரம். வோல்டேஜ், பொடென்சியல் உள்ளது. ஆனால் மின்னோட்டம் இல்லை.
டைனமிக் எலெக்டிரிசிட்டி என்பது இயங்கும் மின்சாரம், வோல்டேஜ் பொடென்சியல் மின்னோட்டத்துடன் உள்ளது. இரண்டு வகையான டைனமிக் எலெக்டிரிசிட்டி உள்ளது.
$ads={2}
1. டைக்ட் கரண்ட் (DC) - இதில் எலெக்ட்ரான்கள் ஒரே திசையில் ஓடுகின்றன.
2. ஆல்டர்னேட்டிங் கரண்ட் (AC) - இதில் எலெக்ட்ரான்கள் முன்னும் பின்னுமாக ஓடுகின்றன.
+ve வும் -ve வும் மாறி மாறித் தோன்றுவதால் ஆல்டர்னேட்டிங் கரண்ட் என்றழைக்கப்படுகிறது.
வோல்டேஜ்
வோல்டேஜ் என்பது எலெக்ட்ரான்களைக் கடத்திகள் வழியே பயணிக்கச் செய்யும் விசை ஆகும். வோல்டேஜ் என்பது மின்னழுத்தம் அல்லது இ.எம்.எஃப் (Electro Motive Force). மின்னழுத்தத்தின் வித்தியாசத்திற்கேற்ப (+ve விற்கும் -ve விற்கும் இடையே உள்ள வித்தியாசம்) எலெக்ட்ரான்களின் உந்துதல் நடைபெறுகிறது.
அளவீடு
வோல்ட் மீட்டர், சர்க்யூட்டிற்கு இணையாக அல்லது குறுக்கே உள்ள பொடென்ஷியலை அழைக்கிறது. வோல்ட் மீட்டர் இரண்டு பாயிண்டுகளுக்கு இடையே உள்ள மின்அழுத்த வித்தியாசத்தை அளக்கிறது. எலக்டிரான்களின் ஓட்டமில்லாமலேயே வோல்டேஜ் குறைப்பதற்கு சாத்தியமில்லை.
வோல்டேஜ் யூனிட்
வோல்டேஜ் வோல்ட் என்னும் யூனிட்டால் அளக்கப்படுகிறது. வோல்டெஜ் அளவீடுகள் மில்லி வோல்ட், கிலோ வோல்ட் மற்றும் மெகா வோல்ட் போன்ற முன் சேர்க்கையுடன் வரும்.
கரண்ட் (ஆம்ப்பியர்)
கரண்ட் என்பது ஒரு வினாடியில் குறிப்பிட்ட இடத்தைக் கடந்து செல்லும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை, கரண்ட் ஓட்டம் ஆம்பியரேஜ் அல்லது கருக்கமாக "ஆம்ப்பியர்" என்று அழைக்கப்படுகிறது.
அதிக வோல்டேஜ், அதிக கரண்ட்டையும், குறைந்த வோல்டேஜ் குறைந்த கரண்டையும் உருவாக்கும்.
$ads={1}
அளவீடு
அம்மீட்டர் கரண்ட்டின் அளவை அளக்கிறது. அம்மீட்டர்கள், சீரிஸ்ஸில் இணைக்கப்படுகின்றன.
உதாரணம் ஒரு வாட்டர் மீட்டர் எத்தனை காலன் தண்ணீர் அதன் வழியே செல்கிறது என்பதை அளக்கிறது.
ஆம்பியரேஜ்
கரண்ட் ஓட்டத்தை அளக்கும் அலகு ஆம்பியர்ஸ் அல்லது ஆம்ப்ஸ். இதன் முன்சேர்க்கை மைக்ரோ ஆம்ப்ஸ், மில்லி ஆம்ப்ஸ் போன்றவை.
மின் தடை (Resistance)
மின்தடை என்பது மின்னோட்டத்தைத் தடை செய்யும் விசை. இது வோல்ட்டேஜ்ஜை எதிர்க்கிறது. அதிக மின்தடை எலெக்ட்ரான் ஓட்டத்தைக் குறைக்கும். குறைந்த மின்தடை எலெக்ட்ரான் ஓட்டத்தை அதிகரிக்கும்.
மின்தடை யூனிட்டுகள்
மின்தடை (ரெஸிஸ்டன்ஸ்) ஓம்ஸ் (ohms) என்னும் யூனிட்டால் அளக்கப்படுகிறது. இதன் முன் சேர்க்கை கிலோ ஓம், மெகா ஓம்
கெபாசிட்டர்கள்
கெபாசிட்டர் என்பது ஒரு பொருளின் மின்சாரம் தாங்கும் சக்தி. இது இயங்காத எலெக்ட்ரானிக் சாதனம். இது எலெக்ட்ரோ ஸ்டாடிக் ஃபீல்டாக சக்தியைச் சேமிக்கிறது. ஒரு கெபாசிட்டர் என்பது பிரிக்கப்பட்ட இரண்டு டைஎலெக்டிரிகல் மெட்டிரியலாலான கடத்தும் ப்ளேட்டுகளைக் கொண்டது.