1. மின்னணுவியல் பாகங்களும், அதன் சாதனங்களும் 

மின்னணுவியல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பாஸிவ் பாகங்கள் :
ரெஸிஸ்டர்கள், கெபாசிட்டர்கள், டயோடுகள், இன்டக்டர்கள் முதலியன 
ஆக்டிவ் பாகங்கள் :
டிரான்ஸிஸ்டர்கள், ஆபரேஷன் ஆம்பிளிஃபயர்கள் முதலியன 

2. அளவு வீட்டுக் கருவிகள் :

டிஜிட்டல் மல்டிமீட்டர்கள், பவர் சப்ளைகள், வோல்டேஜ் மற்றும் கரண்டு சோர்சுகள், ஆசிலோஸ்கோப்புகள் , ஃபிக்ஷன் ஜெனரேட்டர்கள் முதலியன. 

3. சர்க்யூட்டுகள் மற்றும் பாகங்கள் :

ரெக்டிபயர்கள், ஆம்ப்ளிபயர்கள், ஆக்சிலேட்டர்கள், பில்டர்கள் முதலியன. 
இந்த பாகங்கள் பல்வேறு கட்டமைப்புகளில் ஒன்றுடன் மற்றொன்று இணைணக்ப்பட்டு பல்வேறு பயனுள்ள எலெக்ட்ரானிக் சர்க்யூட்டுகள் அமைக்கப்படுகின்றன.

பாஸிவ் பாகங்கள் வோல்டேஜ் மற்றும் சிக்னல்களுக்கு இழப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும். அதிகரிக்க இயலாது. டிரான்ஸிஸ்டர்ஸ், ஆபரேஷன் ஆம்ப்ளிபயர்கள் போன்ற ஆக்டிவ் காம்பொனென்ட்ஸ்களால் ஆம்பிளிடியூடை அதிகரிக்க முடியும்.
இந்த சாதனங்கள் வயர்கள் மூலம் இணைக்கப்பட்டு பல் கட்டமைப்புகளின் மூலம் பயனுள்ள பல சர்க்யூட்டுகள் அமைகின்றன.

$ads={1}

அணுவின் அமைப்பு :

அணு என்பது ஒரு குட்டி சூரிய குடும்பத்திற்கு இணையானது. ஸோலார் சிஸ்டத்தில் சூரியன் நடுவில் இருப்பது போல அணுவில் நியூகிளியஸ் அமைந்துள்ளது. நியூகிளியஸில் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன. கிரகங்கள் சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றுவது போல எலெக்ட்ரான்கள் நியூக்ளியஸை சுற்றி வருகின்றன.

அடிப்படை மின்னணுவியல் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் | Basic electronics Devices and Facts

நியூக்ளியஸ் :

இது அணுவின் மையத்தில் உள்ளது. இதில் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன. எலெக்ட்ரான்கள் நியூக்ளியஸை சுற்றி வருகின்றன.

புரோட்டான்கள் :

புரோட்டான்கள் நியூக்ளியஸில் உள்ளன. இவை பாஸிட்டிவ் சார்ஜ் கொண்டவை,

நியூட்ரான்கள் :

இது அணுவிற்கு எடையைக் கொடுக்கிறது. இதற்கு
எலெட்ரிகல் சார்ஜ் இல்லை.

எலெக்ட்ரான் :

இவை நியூகிளியஸைச் சுற்றி வருகின்றன, நெகட்டிவ் சார்ஜ் கொண்டவை . இவை புரோட்டான்களை விட லேசாக இருப்பதாலும், நியூகிளியஸின் வெளியே உள்ளதாலும் ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு செல்லும்படி ஓட்டத்தை ஏற்படுத்த முடியும். பொதுவாக இவை ஓர் ஈர்ப்பு விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளதால் எளிதில் பிரிக்க முடியாது. மேலும் புரோட்டான்களின் காந்த விசை, இவை பிரிவைத் தடுக்கிறது. இதே வகையாக கிரகங்கள் அவற்றின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துகிறது.

எலெக்ட்ரான் சுற்றுப் பாதைகள் (orbits) :

ரிங்குகள் , சுற்றுப் பாதைகள் அல்லது ஷெல்கள் எனப்படும் பல்வேறு சுற்றுப் பாதைகளில் எலேக்ட்ரான்கள் நியூகிளியஸைச் சுற்றி வருகின்றன. கட்டுண்ட எலெக்ட்ரான்கள் நியூகிளியஸை உள்வளையங்களில் சுற்றுகின்றன. கட்டுண்ட எலெக்ட்ரான்கள் பலமான காந்த ஈர்ப்பினால் நியூகிளியஸைச் சுற்றுகின்றன. சுதந்திர எலெக்ட்ரான்கள் தூரமான வெளி வட்டப் பாதையில் சுற்றுகின்றன. இந்த சுற்றுப் பாதை சக்தி வளையம் (வேலன்ஸ் ரிங்) எனப்படும்.

சுதந்திர எலெக்ட்ரான்கள் (free electron) :

மிகவும் வெளிவட்டப் பாதையில் சுற்றும் எலெக்ட்ரான்கள் ஓர் அணுவிலிருந்து மற்றோர் அணுவிற்கு எளிதில் பயணிக்கும். இந்தப் பயணம் எலெக்ட்ரான் ஓட்டம் எனப்படும். ஃப்ரீ எலெக்ட்ரான்கள் இலகுவாகக் கட்டப் பட்டுள்ளதால் ஓர் அணுவிலிருந்து மற்றோர் அணுவிற்கு எளிதில் பயணிக்கும். நியூக்ளியரிலிருந்து அதிக தூரத்திலிருப்பதால் ஃப்ரீ எலெக்ட்ரான்கள் வலுவற்ற காந்த ஈர்ப்பைக் கொண்டுள்ளன. இந்த ஈர்ப்பு கட்டுண்ட எலேக்டரான்கள் மீதுள்ள ஈர்ப்பைப் போன்று பலம் இல்லாததால் இவை ஓர் அணுவிலிருந்து மற்றொன்றிற்குப் பெயர்ந்து செல்கின்றன.

$ads={2}

இன்சுலேட்டர்கள் :

இன்சுலேட்டர் என்பது எலேக்ட்ரானின் ஓட்டத்தைத் தடை செய்யக் கூடியது. இன்சுலேட்டர் ஆனது வெளிவட்டப் பாதையில் 5 முதல் 8 ஃப்ரீ எலெக்ட்ரான்களைக் கொண்டுள்ளது. இது போன்று வெளி வட்டத்தில் ஐந்து முதல் 8 எலெக்ட்ரான்கள் உள்ள அணுவில் அவை இறுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் ஒரு அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எளிதில் பயணிக்க முடியாது. எடுத்துக்காட்டு: கண்ணாடி , ரப்பர், ப்ளாஸ்டிக் போன்றவை இன்சுலேட்டர்கள்.

கடத்திகள் (Conductor) :

கடத்தி என்பது எலெக்ட்ரான் ஓட்டத்தை எளிதில்  அனுமதிக்கக் கூடியதாகும். இதில் வெளி வட்டத்தில் ஒன்று முதல் மூன்று வரை ஃப்ரீ எலெக்ட்ரான்கள் உள்ளன. இவ்வாறு வெளிவட்டப் பாதையில் ஒன்று முதல் மூன்று வரை எலெக்ட்ரான்கள் உள்ள அணுக்களில் பவுண்டு bound இல்லாமல் இருப்பதால் அவை ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எளிதில் பயணிக்கின்றன. எடுத்துக்காட்டு: தாமிரம், தங்கம் போன்ற கடத்திகள் மின்னணு கடத்திகள் ஆகும்.

செமி கண்டக்டர்கள் :

வெளி வட்டப் பாதையில் அதிகமாக நான்கு எலெக்ட்ரான்களைக் கொண்டவை செமி கண்டக்டர்கள் ஆகும். செமி கண்டக்டர் கடத்திகளும் அல்ல இன்சுலேட்டர்களும் அல்ல. கார்பன் சிலிக்கான் மற்றும் ஜெர்மனியம் போன்றவை செமி கண்டக்டர்கள் ஆகும். இவை டயோடுகள், டிரான்ஸிஸ்டர்கள் மற்றும் இன்டகிரேடட் சர்க்யூட்டுகள் மற்றும் சிப்-கள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன.

Previous Post Next Post