சிம் (SIM) (சப்ஸ்க்ரைபர் ஐடென்டிட்டி மாட்யூல்) 

SIM தனியே எடுக்கக் கூடியது. SIM மூலமே நெட்வொர்க் தொடர்பு ஏற்படுத்தப் படுகிறது. இதில் ஒரு மைக்ரோ ப்ராஸஸர் இண்டக்ரேடட் சர்க்யூட் சிப், ரேண்டம் ஆக்ஸஸ் மெமரி (RAM), ரீட் ஒன்லி மெமரி (ROM) முதலியன உள்ளன.

SIM தனியே எடுக்கக் கூடியது. SIM மூலமே நெட்வொர்க் தொடர்பு ஏற்படுத்தப் படுகிறது. இதில் ஒரு மைக்ரோ ப்ராஸஸர் இண்டக்ரேடட் சர்க்யூட் சிப், ரேண்டம் ஆக்ஸஸ் மெமரி (RAM), ரீட் ஒன்லி மெமரி (ROM) முதலியன உள்ளன.

MS ன் செயல்பாடுகள் 

1. ரேடியோ ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ரீசப்ஷன் 
2. ஸ்பீச் என்கோடிங் / டீகோடிங் 
3. ரேடியோ லிங்க் எர்ரர் ப்ரோடக்ஷன் 
4. டேட்டா ஃப்ளோ கண்ட்ரோல் 
5. யூசர் டேட்டாவிற்கும் ரேடியோ லிங்கிற்கும் ரேட் அடாப்டேஷன் செய்தல் 

மொபிலிடி மேனேஜ்மென்ட் :

GSM சிஸ்டத்தின் ஸ்பெசிபிக்கேஷன்படி ஐந்து வகையான மொபைல் யூனிட்டுகள் உள்ளன: 

20W, 8W, 5W, 2W, and 0.8W. BTS லிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் MS- ன் பவர் 2dB ஸ்டெப்களில், 200 mts (13 dBm) வரை அட்ஜஸ்ட் செய்யலாம்.

ட்ரான்ஸ்கோடர்கள் (transcoders) 

PSTN சைடில் வாய்ஸ் கோடிங் ரேட் 64 kbps GSM ல் வாய்ஸ் கோடிங்ரேட் 13 kbps / இந்த ரேட்டைக் குறைப்பதற்கும், டெர்ரஸ்டிரியல் லிங்கில் லோடைக் குறைப்பதற்கும் (4:1) டிரான்ஸ்கோடர்கள் பயன்படுகின்றன. 

இவை பெரும்பாலும் MSC ல் ஸ்பீச் அல்லது 3.6 / 6 / 32 kbps செய்து 64 kbps டேட்டாவாக உள்ளன. டிரான்ஸ்கோடர் 13 kbps டேட்டாவை எடுத்து மல்டிப்ளக்ஸ் மாற்றுகிறது. முதலில் 13 kbps அல்லது 3.616 டேட்டாவில் சின்ங்கொரனைஸ் டேட்டாவை இன்ஸர்ட் செய்வதன் மூலம் 16 kbps லெவலுக்கு கொண்டு வருகிறது. பின்னர் நான்கு 16 kbps டேட்டாவை மல்டிப்ளக்ஸ் செய்து 64 kbps சேனலாக மாற்றுகிறது. இது BSS ல் நடக்கிறது. நான்கு டிராபிக் சேனல்கள் ஒரு 64kbps சர்க்யூட்டாக மாற்றப் படுகிறது. இவ்வாறு TRAU வின் டேட்டா ரேட் 64 kbps ஆக உள்ளது.

$ads={1}

நெட்வொர்க் மற்றும் சிவிட்சிங் சப் சிஸ்டம்:

NSS என்னும் சிவிட்சிங் சிஸ்டம் கால்பிராஸஸிங் மற்றும் சந்தாதாரர் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளைச் செய்கிறது. இதன் பாகங்கள் 

1.மொபைல் சுவிட்சிங் சென்டர் ( MSC ) 
2.ஹோம் லொக்கேஷன் ரிஜிஸ்டர் ( HLR ) 
3. விசிட்டர் லொக்கேஷன் ரிஜிஸ்டர் ( VLR ) 
4. எக்யுப்மென்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டர் ( EIR ) 
5. ஆதென்டிகேஷன் சென்டர் ( AUC )

(மொபைல் சுவிட்சிங் சென்டர்) MSC

மொபைல் சுவிட்சிங் சென்டர் இதனோடு இணைக்கப்பட்டுள்ள BSSன் ஏரீயாவில் உள்ள அனைத்து மொபைல் ஸ்டேஷன்களின் சுவிட்சிங் செயல்பாடுகளை MSC மேற்கொள்கிறது. இது PSTN, பிற MSC க்கள் மற்றுமுள்ள சிஸ்டம் பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. MSC யின் செயல்பாடுகள் ஆவன 

1. மொபைல் சந்தாதாரர்களின் அழைப்புகளைக் கையாளுதல் இதில் லொகேஷன் ரிஜிஸ்ட்ரேஷன், ஆதென்டிகேஷன், ஹேண்ட் ஓவர் மற்றும் ப்ரீபெய்டு சம்பந்தப்பட்ட பணிகள் அடங்கும். 
2. அழைப்புகளின் போது தேவைப்படும் லாஜிக்கல் ரேடியோ லிங்க் சேனல்களைக் கையாளுதல் 
3. MSC - BSS இடையே சிக்னல் புரோட்டோகாலை மேற்கொள்ளுதல் 
4. லொகேஷன் ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் VLR- மொபைல் இடையிலான இணைப்பைக் கையாளுதல் 
5.MSC க்கள் மற்றும் BSS களுக்கு இடையிலான ஹேண்ட் ஓவர்களைக் கட்டுப் படுத்துதல் 
6. HLR ஐ வினாவுவதற்கு கேட்வே ஆக இயங்குதல், PSTN / PSDN உடன் இணைக்கப் பட்ட MSC, GSMC (கேட்வே MSC) ஆகும். இதுவே HLR உடன் இணைக்கப் பட்ட ஒரே MSC ஆகும். 
7. சார்ஜிங் போன்ற ஸ்டான்டர்டு செயல்பாடுகள்

ஹோம் லொகேஷன் ரிஜிஸ்டர் (HLR) 

மொபைல் சந்தாதாரரின் அடையாளம் ( IMSI ) மொபைல் ஸ்டேஷனின் ஐஎஸ்டிஎன் டைரக்டரி எண்கள் சர்வீஸ்களுக்கு சப்ஸ்கிரிப்ஷன் பறிய தகவல்கள் சர்வீஸ் கட்டுப்பாடுகள் அழைப்பு ஏற்படுத்த உதவும் லொகேஷன் தகவல்கள்.  

ஹோம் லொக்ஷேஷன். ரிஜிஸ்டர் ஒரு ஜிஎஸ்எம் நெட்வொர்க்கிற்கு ஒரு HLR வீதம் பரிந்துரைக்கப் படுகிறது. இந்த டேட்டாபேஸ் டிஸ்டிரிப்யூடட் ஆக இருக்கலாம். HLR ன் நிரந்தர  டேட்டா மேன்-மெஷின் இண்டர்பேஸ் மூலம் மாற்றப்படுகிறது.  லொகேஷன் தகவல்கள் போன்ற டெம்பரரி டேட்டா அவ்வப்போது தானாகவே மாறுகிறது. 

விசிட்டர் லொகேஷன் ரிஜிஸ்டர் VLR :

VLR எப்போதும் MSC யுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஒரு மொபைல் ஸ்டேஷன் புதிய MSC யில் ரோமிங் செய்யும்போது அந்த MSC யின் VLR மொபைல் ஸ்டேஷனின் விவரங்களை அதனுடைய HLR ல் இருந்து பெற்றுக் கொண்ட பின்னர் அழைப்புகள் நிகழும் போது கால் செட் அப்பிற்கு தேவையான விவரங்களை HLR ன் துணை இன்றி பயன்படுத்த இது உதவுகிறது. 

VLR ல் கீழ்க்கண்ட தகவல்கள் உள்ளன. 

1. மொபைல் சந்தாதாரரின் அடையாளம்
2. தற்காலிக மொபைல் சந்தாதாரரின் அடையாளம் 
3.மொபைலின் ஐஎஸ்டிஎன் டைரக்டரி எண் 
4. ரோமிங் ஸ்டேஷனுக்கு ரூட் செய்வதற்குத் தேவையான டைரக்டரி எண் 
5. அந்த MSC யின் சர்வீஸ் ஏரியாவிலுள்ள மொபைல்களின் HLR ல் உள்ள பகுதி டேட்டா 

எக்யுப்மெண்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டர் (EIR)

மொபைல் ஸ்டேஷன் IMEI (International Mobile Equipment Identity) செல்லும் படியாக உதவ பயன்பெற உள்ள மற்றும் தடை செய்யப் பட்டவை களைக் கொண்டது,

ஒரு மொபைல் சிஸ்டத்தைத் தொடர்பு கொள்ளும் போது எக்யுப்மெண்ட் வெலிடேஷன் முறை செயல்படத் துவங்குகிறது. இந்தத் தகவல்கள் கீழ்க்கண்ட மூன்று லிஸ்ட்டுகளில் உள்ளன. 

1. ஒயிட் லிஸ்ட் : - டெர்மினல் நெட்வொர்க்குடன் தொடர்பு கொள்ளலாம்  
2. கிரே லிஸ்ட் : - டெர்மினலில் வரக்கூடிய சந்தாதாரர்களுக்கான நெட்வொர்க்கினால் கண்காணிக்கப் படுகிறது. 
3. ப்ளாக் லிஸ்ட் : - திருடு போன அல்லது அங்கீகாரம் இல்லாத டெர்மினல்கள் நெட்வொர்க்குடன் தொடர்பு கொள்ளமுடியாது,
 குறிப்பிட்ட IMEI ஐ எந்த இடத்திலுள்ளது என்ற விவரத்தை EIR , VLR க்கு வழங்குகிறது. 

ஆதெண்டிகேஷன் சென்டர்

இது HLR உடன் இணைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மொபைல் சந்தாதாரர்களின் அடையாளங்களை ஆதெண்டிகேஷன் கீயை (Ki) தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் (Ki) கீழ்க்காணும் ஆதெண்டிகேஷன் ரிப்போர்ட்டை உருவாக்கப் பயன்படுகிறது. 

1. RAND (ரேண்டம் நம்பர்) 
2. SRES (கையெழுத்திடப்பட்ட பதில்) ஆதெண்டிகேடட் IMSI 
3. Kc ( சைபர் கீ - MS ற்கும் நெட்வொர்க்கிற்கும் இடையே உள்ள, (தொடர்பை இரகசியமாக்குவதற்கு)

ஆப்ரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சென்டர் (OMC)

இதன் மூலம் நெட்வொர்க் ஆபரேட்டர் கீழ்க்காணும் செயல்பாடுகளை மானிட்டர் செய்யவும், கட்டுப் படுத்தவும் முடிகிறது.

1. சாஃப்ட்வேர் இன்ஸ்டலேஷன் 
2. டிராபிக் மேனேஜ்மென்ட் 
3. பெர்ஃபார்மன்ஸ் டேட்டா அனாலிஸிஸ் 
4. சந்தாதாரர் எக்யுப்மெண்ட் டிரேசிங் செய்தல் 
5. காலர்ஃபிகுரேஷன் மேனேஜ்மென்ட் 
6. சந்தாதாரர் நிர்வாகம் 
7.மொபைல் எக்யுப்மென்ட் மேனேஜ்மென்ட் 
8. சார்ஜிங் மற்றும் பில்லிங் மேனேஜ்மென்ட் 

$ads={2}

இதர நெட்வொர்க் பாகங்கள் 

SMS சர்வீஸ் சென்டர்

PLMN சந்தாதாரர்களுக்கு தேவையான SMS சவையை MSC உடன் இணைந்து வழங்குகிறது. SMS ஐ FAX மெஷினுக்கோ பெர்சனல் கம்ப்யூட்டருக்கோ அல்லது மொபைல் ஸ்டேஷனுக்கோ அனுப்பலாம். அனுப்பப்படும் மொபைல் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொண்டு MSC டெலிவரி செய்கிறது. வாய்ஸ் மெயில் பாக்ஸ் மொபைல் சந்தாதாரர்கள் பிஸியாக அல்லது சர்வீஸ் ஏரியாவிற்கு வெளியே இருக்கும் போது அவரால் ஆக்டிவேட் செய்யப்பட்ட மொபைல் பாக்ஸிற்கு அழைப்பு டைவர்ட் செய்யப்படுகிறது.

இதற்காக MSC யுடன் தனியே ஒரு இணைப்பு உள் ளது. பின்னர் சந்தாதாரர் அலர்ட் மூலம் செய்தியைத் தெரிந்து கொள்ளலாம்.

Previous Post Next Post