பென்சில் உருவான வரலாறு (Pencil)

பேனாவைப் போல பெரிதும் உபயோகப்படுவது பென்சில். பென்சிலின் மூலம் வரைபடங்கள், சித்திரங்கள் தீட்டலாம். ''பெனிசிலாஸ்' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து 'பென்சில்' பிறந்தது. அதற்கு 'சின்ன வால்' என்று பொருள்.

பென்சில் செய்யப்பயன்படும் 'கிராஃபைட்' ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இருந்தும், கிராஃபைட்டைக் கொண்டு 1760-ஆம் ஆண்டில்தான் பென்சில் உற்பத்தி செய்யப்பட்டது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஃபேபர் என்னும் குடும்பத்தார் இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டு தோல்வியடைந்தார்கள். 

பேனாவைப் போல பெரிதும் உபயோகப்படுவது பென்சில். பென்சிலின் மூலம் வரைபடங்கள், சித்திரங்கள் தீட்டலாம். ''பெனிசிலாஸ்' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து 'பென்சில்' பிறந்தது. அதற்கு 'சின்ன வால்' என்று பொருள்.

1795-ஆம் ஆண்டு. 'என்.ஜே.கண்டே' என்னும் ஜெர்மானியர். கிராஃபைட்டுடன் களிமண்ணைச் சேர்த்தார். அந்தக் கலவையை அவர் சிறு குச்சிகளாகச் செய்து, உலை மூலம் காய வைத்து. பென்சில்களை முதன் முதலாக உருவாக்கினார். பென்சிலின் புறப்பகுதி தனியாக 'டைன்' மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இன்று சுமார் 500 வகையான ரகங்களில் பலவிதமான உபயோகத்திற்கு பென்சில்கள் தயாராகின்றன.

மை நிரப்பும் பேனா உருவான வரலாறு (Ink refill pen)

பறவைகளின் இறகு பேனாவாகப் பயன்படுத்தப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பவுண்டன் பேனா வடிவமே உபயோகத்துக்கு வந்தது. லூயிஸ் வாட்டர்மேன் என்பவர்தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தார், இவர் அமெரிக்காவின் ஓர் இன்சூரன்ஸ் நிறுவன சேல்ஸ்மேன் ஆவார். முதலில் வடிவமைக்கப்பட்ட பவுண்டன் பேனா எப்படி இருந்தது தெரியுமா? மையை அடைத்து வைக்க ஏதுவாக, கடினமான ரப்பரால் செய்யப்பட்ட குழாயும், அதன் அடியில் "நிப்பும்' பொருத்தப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த வகை பவுண்டன் பேனாவால் மென்மையாக காகிதத்தில் எழுத முடியாமல் போனது. இந்தப் பேனாவை வைத்து எழுதியதால், மை தாறுமாறாகக் கொட்டி வாட்டர்மேனின் மதிப்பு மிக்க இன்சூரன்ஸ் ஒப்பந்தப் பத்திரங்களெல்லாம் வீணாகின. அதனாலேயே வாட்டர்மேனுக்கு ஒரு சூப்பர் பேனா உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாகத் தோன்றியது. அப்படி அவர் வடிவமைத்ததுதான் சரியாக எழுதக்கூடிய பவுண்டன் பேனா. பழைய பவுண்டன் பேனாவின் நிப்பில் ஒரு துளை மற்றும் வேண்டிய இயந்திர நுட்ப வசதிகளைச் சேர்ப்பது தான் அவரது எண்ணமாக இருந்தது. அதைச் செயல்படுத்திப் பார்த்தார். பவுண்டன் பேனா உருவானது.

வாட்டர்மேன் கண்டுபிடித்த பவுண்டன் பேனா மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டது. நிப், அதன் அடியில் பொருத்தப்படும் கருப்புக் கட்டை. இந்த இரண்டையும் உள்வாங்கிக் கொள்ளும் சிறு உருளை ஆகியனவாகும். எல்லா பேனாக்களும் ஒரு மை நிரப்பிக்கொள்ளும் கலனை முக்கியமாகக் கொண்டுள்ளன. லூயிஸ் வாட்டர்மேன் தனது முதல் (நன்கு எழுத ஏதுவான) பவுண்டன் பேனா கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை 1884-இல் பதிவு செய்தார். 

நம் ஒவ்வொருவரின் ஆறாவது விரலாக ஒட்டி உறவாடுவது பேனா என்று சொல்லலாம். அ, ஆ... என எழுதிப்பழகிய பள்ளிப்பருவம் முதல் உயில் எழுதும் வாழ்க்கையின் கடைசி காலம்வரை நம் இணைபிரியா நண்பனாய் கூடவே வரும் வரம் பெற்றது இந்தப் பேனா. பவுண்டன் பேனா. பால்பாயிண்ட் பேனா ஆகிய இரு வகைப் பேனாக்களும் நாம் எழுதப் பயன்படுவனவாகும். தற்போது பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்துவது பால்பாயிண்ட் பேனாதான்.
அதற்கு முன்பே 1702-ஆம் ஆண்டு 'எம். பயான்' என்ற பிரெஞ்சுக்காரர் பவுண்டன் பேனாவை வடிவமைத்தார். பேனா தயாரிப்புக்காக முதல் அமெரிக்கக் காப்புரிமையை, 'பியரி கிரீன் வில்லியம்சன்' என்பவர் 1809-ல் பெற்றார். பாதி இறகாலும், பாதி உலோகத்தாலும் தயாரிக்கப்பட்ட பேனாவுக்காக, 1819-ல் பிரிட்டிஷ் காப்புரிமையை 'ஜன் செப்பர்” என்பவர் பெற்றார். 1831-இல் மை நிரப்புவதற்காக தானே உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுள்ள பவுண்டன் பேனாவை ஜான் ஜேக்கப் பார்க்கர் என்பவர் கண்டுபிடித்தார். இவர் பெயரில் உருவான பார்க்கர் நிறுவன பேனாக்கள் மிகவும் பிரபலமடைந்தன.

பால்பாயிண்ட் பேனா உருவான வரலாறு (Ballpoint pen)

நம் ஒவ்வொருவரின் ஆறாவது விரலாக ஒட்டி உறவாடுவது பேனா என்று சொல்லலாம். அ, ஆ... என எழுதிப்பழகிய பள்ளிப்பருவம் முதல் உயில் எழுதும் வாழ்க்கையின் கடைசி காலம்வரை நம் இணைபிரியா நண்பனாய் கூடவே வரும் வரம் பெற்றது இந்தப் பேனா. பவுண்டன் பேனா. பால்பாயிண்ட் பேனா ஆகிய இரு வகைப் பேனாக்களும் நாம் எழுதப் பயன்படுவனவாகும். தற்போது பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்துவது பால்பாயிண்ட் பேனாதான்.

நம் ஒவ்வொருவரின் ஆறாவது விரலாக ஒட்டி உறவாடுவது பேனா என்று சொல்லலாம். அ, ஆ... என எழுதிப்பழகிய பள்ளிப்பருவம் முதல் உயில் எழுதும் வாழ்க்கையின் கடைசி காலம்வரை நம் இணைபிரியா நண்பனாய் கூடவே வரும் வரம் பெற்றது இந்தப் பேனா. பவுண்டன் பேனா. பால்பாயிண்ட் பேனா ஆகிய இரு வகைப் பேனாக்களும் நாம் எழுதப் பயன்படுவனவாகும். தற்போது பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்துவது பால்பாயிண்ட் பேனாதான்.

முதல் பால்பாயிண்ட் பேனா 1938-ஆம் ஆண்டில் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. அங்கேரிய பத்திரிக்கையாளரான லாஸ்லோ பைரோ என்பவர்தான் இந்தப் பேனாவைக் கண்டுபிடித்தார், 1938-க்கு முன்பு வரை, பவுண்டன் பேனாதான் புழக்கத்தில் இருந்தது. பத்திரிகையாளர் பைரோ பணியில் இருந்தபோது ஏற்பட்ட ஓர் எண்ணம்தான் பால் பாயிண்ட் பேனா உருவாகக் காரணமாயிற்று.

செய்தித்தாளில் பிரசுரிக்கப் பயன்படுத்தப்படும் மையானது அச்சானதுமே உலர்ந்து விடும் தன்மை பெற்றிருந்தது. இதைக் கவனித்த பைரோ இந்த மையை பயன்படுத்தும் விதத்தில் ஒரு பேனா உருவாக்கலாமே என்று தனது சிந்தனையைத் தூண்டி விட்டார். ஏனெனில் இந்த அடர்த்தியான மையை பவுண்டன் பேனாவில் பயன்படுத்த முடியாது.

இந்த மை பவுண்டன் பேனா முனை வழியாக வெளியேறுவது மிகமிகக் கடினம். ஆகையால் அதற்குத் தகுந்த பேனாவை உருவாக்க வேண்டி இருந்தது. பந்து போன்ற முனை பொருத்தப்பட்ட பேனாவில் இந்த அடர்த்தியான மையை நிரப்பி எழுத வைத்தார் பைரோ. பால் பாயிண்ட் பேனா உருவானது.

Previous Post Next Post