தகவல் தொழில்நுட்பம் அறிமுகம்:

நாம் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் (IT) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மின்னணுவியலே தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில் நுட்பத்தின் அடிப்படை.. மின்னணுவியலில் சாதிக்கப்பட்ட வெற்றியே கணிணி மற்றும் தொலைத் தொடர்பில் ஏற்பட்ட அசுர வேக வளர்ச்சிக்குக் காரணம். சில சமயங்களில் நாம் நம்முடன் எடுத்துச் செல்லும் மின்னணு சாதனங்களைக் கணக் கிட்டால் நம்ப முடிவதில்லை. டிஜிட்டல் ரிஸ்ட் வாட்ச், கேல்குலேட்டர், கேட்போன், டிஜிட்டல் டயரி அல்லது PDA, டிஜிட்டல் கேமிரா அல்லது வீடியோ கேமிரா இப்படி பற்பல.. நமது வீடுகளிலும், அலுவலகத்திலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் வியப்பூட்டுவதாகும். 

பல சாதனங்கள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப் படுகின்றன ஓயர் இணைப்பு இல்லாமலேயே ஸோபாவில் அமர்ந்து கொண்டு சிறு குழந்தை கூட சில பட்டன்களை அழுத்தி ஏர்கண்டிஷனர், ஆடியோ சாதனங்கள், தொலைபேசி முதலியவற்றை இயக்குவதும், டிவி வால்யூமைக் கூட்டுவதும், குறைப்பதும், சேனல்களை மாற்றுவதும் பிரமிப்பூட்டும் விஷயங்கள்! மேலும் வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது காரில் செல்லும் போதோ கையடக்கத் தொலைபேசி மூலம் வெகு தொலைவில் உள்ள சொந்த பந் தங்களுடன் நாம் அளவளாவிக் கொள்வது விந்தையிலும் விந்தையல்லவா!

GSM நெட்வொர்க் பற்றிய தகவல்கள்:

டிஜிட்டல் ரேடியோ தொழில் நுட்பத்தின் மூலம் ஏற்படுகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு தரும் GSM தொழில் நுட்பம் ஓர் ஐரோப்பிய தரமாகும். 1982 மூலம் 1985 வரை அனலாக் தொழில் நுட்பமா அல்லது டிஜிட்டல் தொழில் நுட்பமா என்ற விவாதம் நடை பெற்றது. பல களப் பரீட்சைகளுக்குப் பின்னர் GSM ற்கு டிஜிட்டல் ஸிஸ்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

$ads={1}

நேரோபேண்டா அல்லது பிராட்பேண்டா என்று முடிவு செய்ய வேண்டியது அடுத்த வேலை. 1987 மே மாதம் நேரோபேண்ட் TDMA ஸிஸ்டம் தேர்ந்தெடுக்கப் பட்டது. GSM தொழில் நுட்பம் ஐரோப்பாவில் தொடங்கப் பட்டாலும், கிழக்கத்திய, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. GSM என்பது Global System for Mobile Communication என்ற அதன் பெயருக்கேற்ப செயல் பாட்டில் உள்ளது. FDMA,TDMA மற்றும் FDD தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நான்கு அலை வரிசைகளில் வேலை செய்கிறது.

GSM நெட்வொர்க்கை நான்கு மேஜர் சிஸ்டங்களாக பிரிக்கலாம். 

1. சுவிட்சிங் சிஸ்டம் (SS)
2. பேஸ் ஸ்டேஷன் சிஸ்டம் (BSS)
3.மொபைல் ஸ்டேஷன் (MS) 
4. ஆப்ரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சென்டர் (OMC)

பேஸ் ஸ்டேசன் சிஸ்டம் | ரேடியோ நெட்வொர்க்:

BSS - MS ஐயும், NSS ஐயும் இணைக்கின்றது. இது இரண்டு பாகங்களைக் கொண்டது. 

1. பேஸ் ட்ரான்ஸீவர் ஸ்டேசன் (BTS)
2. பேஸ் ஸ்டேசன் கண்ட்ரோலர் (BSC)

BTS-ம் BSC-ம் Abis இண்டர்பேஸால் இணைக்கப்பட் டுள்ளனர். BSC, BTS ஐ கண்ட்ரோல் செய்கிறது. ஒரு BSC ஒன்றுக்கும் மேற்பட்ட BTS களை கண்ட்ரோல் செய்யலாம். 

பேஸ் ட்ரான்ஸீவர் ஸ்டேசன் (BTS) :

ரேடியோ ட்ரான்ஸீவர்கள் இதில் அடங்கியுள்ளன. இது MS உடனான ரேடியோலிங்க் ப்ரோட்டோகால்களைக் கையாள்கிறது. ஒவ்வொரு BTS லும், ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர், ரிசீவர், ஆண்டெனா சிக்னல் ப்ராஸஸர் போன்ற சாதனங்கள் உள்ளன. ஒவ்வொரு BTS உம் 1 முதல் 16 RF கேரியர்கள் வரை சப்போர்ட் செய்கிறது. பவர் லெவல், மற்றும் ஆண்டெனாவின் உயரம், ஆண்டெனாவின் மாதிரி, கேரியர் எண்ணிக்கைகள் முதலியன ஒரு BTS ற்கும் மற்றொரு BTS ற்கும் வேறுபடுகின்றன.

BTS ன் செயல்பாடுகள்:

1. டைம் மற்றும் ப்ஃரீக்வன்ஸி சின்க்ரனைசேஷன்.
2. சேனல் கோடிங், என்க்ரிப்ஷன், மல்டிப்ளக்ஸிங், மாடுலேஹன் போன்ற பிரொஸஸ்கள்.
3. மொபைல் BTS லிருந்து உள்ள தூரத்திற்கேற்ப டைமிங் அட்வான்ஸ் செய்தல்.
4. மொபைலிலிருந்து வரும் வேண்டுகோள்களைப் பரிசீலித்தல் மற்றும் ரேடியோ சேனல்களின் பவர் லெவல், ஹேண்ட் ஓவர்களை மானிட்டர் செய்தல்.

பேஸ் ஸ்டேஷன் கன்ட்ரோலர் (BSC):

BTS ன் ரேடியோ ரிஸோர்சுகளை மேனேஜ் செய்கிறது. ரேடியோ சேனல் செட் அப், ப்ரீக்வன்ஸி ஹாப்பிங், ஹேண்ட் ஓவர்கள், RF பவர் லெவல் கண்ட்ரோல் முதலியவற்றைக் கையாள்கிறது. BTS ன் மூலம் ப்ராட்காஸ்ட் செய்யப் படும், டைம் மற்றும் ப்ரீகுவன்ஸி சிங்கொரனைசேஷன், ரெபரன்ஸ் சிக்னல்களை வழங்குகிறது. MSC க்கும், MS க்குமிடையே தொடர்பு ஏற்படுத்துகிறது. MSC, BTS மற்றும் OMC உடன் interface மூலம் இணைக்கப் பட்டிருக்கிறது.

$ads={2}

மொபைல் ஸ்டேசன் (MS) 

ஒயர்லெஸ் சந்தாதாரர் உபயோகப் படுத்துகின்ற டெர்மினல் சாதனத்தைக் குறிக்கிறது. இது இரண்டு பாகங்களைக் கொண்டது. 

1. சிம் (SIM) (சப்ஸ்க்ரைபர் ஐடென்டிட்டி மாட்யூல்) 
2. மொபைல் எக்யூப்மென்ட்

Previous Post Next Post