திரிகோணாசனம் (Trikonasana)

இந்த ஆசனம் முக்கோண தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது.

திரிகோணாசனம் பயிற்சி செய்யும் முறை :

முதலில் நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும், பின் இரண்டு கால்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை இடைவெளி விட்டு கால்களை அகலப்படுத்திநிற்க வேண்டும்.

முதலில் நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும், பின் இரண்டு கால்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை இடைவெளி விட்டு கால்களை அகலப்படுத்திநிற்க வேண்டும்.

மெல்ல காற்றை உள்ளுக்கிழுத்துக் கொண்டே கைகளை பக்கவாட்டில் நீட்ட வேண்டும். இப்போது இழுத்த மூச்சை மெல்ல வெளியே விட்டுக் கொண்டே கைகளை நீட்டிய நிலையில் அப்படியே வைத்துக் கொண்டு உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும்.

உடலை இடது பக்கமாக வளைக்கும் போது முழங்காலையோ. உடலின் மற்றபாகங்களையோ வளைக்கக் கூடாது. இடுப்பை மட்டும் வளைக்க வேண்டும்.

நீட்டிய இடது கையின் நுனிவிரல் இடது பாதத்தைத் தொட வேண்டும். இந்த நிலையிலேயே சில விநாடிகள் இருக்க அந்தச் சமயம் மூச்சுக் காற்றை உள்ளுக்குள் இழுக்கக் கூடாது. 

அச்சமயம் மூகத்தை மேல்பக்கம் திருப்பி வலது கைவிரல் நுனியைப் பார்க்க வேண்டும். இப்போது நீட்டிய நிலையில் உள்ள வலதுகை வானத்தை நோக்கி நிற்கும். அண்ணாந்து பார்க்கும்போது முகவாய்க் கட்டை வலது புறத்தை ஒட்டியிருக்க வேண்டும்.

பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே படிப்படியாக நிதானமாக உடலை மெதுவாக மேலே உயர்த்தி நேர் நிலைக்கு வர வேண்டும். இந்த நிலையில் ஒரிரு விநாடிகள் அப்படியே இருந்து நன்கு மூச்சை இழுத்து விட வேண்டும். 

திரிகோணாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

நான்கு அல்லது ஜந்து வினாடி வரை நிறுத்தவும். இது போன்று ஜந்து அல்லது பத்து தடவை மாறி மாறி செய்யலாம். 

திரிகோணாசனம் பயிற்சியின் பலன்கள் :

முதுகு நரம்புகள் பக்கவாட்டில்வளைக்கப்பட்டு நன்கு புத்துணர்ச்சி பெற்று முதுகு நரம்புகள் கை கால்கள் நன்கு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கின்றன. இடுப்பு பிடிப்பு வலி நீங்குகிறது, முதுகுப் பக்கத்தில் நல்ல இரத்தம் ஒட்டம் ஏற்பட்டு அப்பகுதியில் கொழுப்பு சக்தி அதிகம் சேராமல் பார்த்துக் கொள்கிறது.

திரிகோணாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

இப்பயிற்சியை தொடங்கும் போது சிலருக்கு கை விரல். கால் விரலைத் தொடவே தொடாது. விடா முயற்சியோடு பயிற்சியை செய்து வந்தால் சில நாட்களில்இடுப்பு வளைத்து பாத விரல்களை கை விரல் தொடும் அளவுக்கு வந்து விடும். 

இதனை நிதானமாகவும் படிப்படியாகவும் செய்ய வேண்டும். இடுப்பை வளைத்து காலைத் தொடும் போது சிலருக்கு இடுப்பு முன்பக்கமாகத் திரும்பக்கூடும். 

அப்படி திரும்பாமல் கவனமாகவும் நிதானமாகவும் இடுப்பை பக்கவாட்டில் மட்டுமே வளைக்க வேண்டும். அச்சமயத்தில் முழங்கால்களைத் தளர்த்தியாகவோ வளைத்தோ வைத்திருக்கக் கூடாது.

Previous Post Next Post