ஹலாசனம் (Halasana or Plough pose)

ஹலம் என்பது கலப்பையின் பெயர் ஹலாசனம் என்பது கலப்பை போன்ற இருக்கை நிலை, கலப்பை போன்று அமைப்பு இருப்பதால் இதற்கு ஹலாசனம் என்று பெயர்.

மல்லாந்து படுத்து கைகளை பக்கவாட்டில் வைக்கவும், உள்ளங்கைகள் தரையை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.


ஹலாசனம் பயிற்சி செய்யும் முறை :

மல்லாந்து படுத்து கைகளை பக்கவாட்டில் வைக்கவும், உள்ளங்கைகள் தரையை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.

கால்களை விரைப்பாக்கி முழங்கால்கள் மடியாமல் மெதுவாக மேலே உயர்த்தி பின்புறமாக கொண்டு வந்து விரல்களால் தரையை தொட வேண்டும். அவ்வாறு கொண்டு வரும்போது முட்டி மடங்காமல் இருக்க வேண்டும், கால்கள். தொடைகள் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

முகவாய்க்கட்டை மார்பில் அழுத்தும் விதத்தில் இருக்கவும் சிறிது நேரம் இதே நிலையிலிருந்து பின்பு படிப்படியாக முதல் நிலைக்கு வர வேண்டும். ஆசன நிலையில் சாதாரண சுவாசம் போதும்.செய்து முடித்த பின் ஆழ்ந்த மூச்சு இழுத்து விட வேண்டும்.

ஹலாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

பத்து முதல் இருபது வினாடிகள் நிறுத்தவும், இரண்டு மூன்று முறைசெய்யவும்.

ஹலாசனம் பயிற்சியின் பலன்கள் :

இந்த ஆசனம் செய்து வந்தால் முதுகெலும்பு நன்கு வளைக்கப்படுகிறது, அதனால் நல்ல இரத்த ஒட்டம் நடைபெற்று பிராண வாயுவை உடலின் எல்லாப் பாகங்களிலும் பரவச் செய்கிறது. உடல் பருமன், மலச்சிக்கல், கல்லீரல், மண்ணீரல் தொந்தரவுகள் சரி செய்யப்படுகின்றன. மூச்சுடைப்பு சரியாகிறது. ஆண்மையை அதிகரிக்கும்.

ஹலாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

கால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும் போது அவசரமாகத் தரையில் தொப்பென்று போடாமல் மெதுவாக கொண்டு வரவும். இந்த ஆசனத்தை இரண்டு மூன்று முறைகள் தினமும் செய்யலாம்.

Previous Post Next Post