உத்தித பார்சுவ கோணாசனம் (Uddita Parsvakonasana) பயிற்சி செய்யும் முறை :

முதலில் நேராக நிற்கவும், இரண்டு கால்களையும் மூன்று அடி நீளத்திற்கு அகற்றி வைக்கவும். தொடக்க நிலையில் பயிற்சி பெறுவோர் இரண்டு அடி நிளத்திற்கு அகற்றி நின்றால் போதுமானது.

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் ஹிர்னியா, மூலம், பவுத்திரம் போன்றகுறைபாடுகள் நீங்கும்.

பின்னர் ஒரு காலைப் அப்படியே நேராக நிறுத்தி மற்றொரு காலை வளைக்கவும். வளைத்த பக்கமாகக் கையையும் மெதுவாகக் கீழே இறக்கி கைவிரல்களால் கால்களைப் பிடித்து மற்றொரு கையை மேலே தூக்கி நேராக வளைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு செய்யும் பொழுது உடலானது ஒரு பக்கம் வளையும் வளைந்த சரீரம். தலை இவைகளின் மேல் பாகத்தில் காதை மூடிக் கொள்வது போல தோளை வைத்துக் கொள்ளவும்.

இதே மாதிரி உடலின் அடுத்த பக்கமும் மாற்றிச் செய்யவும். இவ்வாறு மாறி மாறிச் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

உத்தித பார்சுவ கோணாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

பத்து முதல் இருபது வினாடிகள் செய்யவும். இரண்டு மூன்று முறைமாறி மாறிச் செய்யவும். 

உத்தித பார்சுவ கோணாசனம் பயிற்சியின் பலன்கள் :

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் ஹிர்னியா, மூலம், பவுத்திரம் போன்றகுறைபாடுகள் நீங்கும்.

குடல்வால் அழற்சியிருப்பின் அதுவும் குணமாகும். மலச்சிக்கல் குணமாகும்.

உத்தித பார்சுவ கோணாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

இந்த ஆசனத்தை செய்யும் போது மூச்சு விடுவது நல்ல சம நிலையில் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை நிதானமாகவும் பரபரப்பு அடையாமலும் செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.

Previous Post Next Post