கண்டபேரண்டாசனம் (Kandaperandasana)

ஆசனப் பயிற்சிகளுக்குள் மிகச் சிறந்தது. ஆனால் பயிலுவதற்கு மிகக் கடினமானது, கண்டபேரண்டாசனம்.

கண்டபேரண்டாசனம் பயிற்சி செய்யும் முறை :

முதலில் கால்களை ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நிற்கவும். கைகளை உயரத் தூக்கிக் காதுகளோடு சேர்த்துக் கொண்டு மெதுவாக உடலைப் பின்புறமாக வளைத்து உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றியவாறு சக்கராசன நிலைக்கு கொண்டு வரவும்.

ஆசனப் பயிற்சிகளுக்குள் மிகச் சிறந்தது. ஆனால் பயிலுவதற்கு மிகக் கடினமானது, கண்டபேரண்டாசனம்.

கணுக்கால்களையும் கைகளால் இரு அனைத்துக் கொண்டு உடலை நன்றாக வளைத்து இரு கால்களுக்கு மத்தியில் முகத்தை முன்னால் கொண்டு வந்து இரு கைகளின் மேல் வைத்துக் கொள்ளவும்.

கண்டபேரண்டாசனம் செய்யும் நேர அளவு :

மூன்று வினாடி வரை நிறுத்தவும்.

கண்டபேரண்டாசனம் பலன்கள் :

இவ்வாசனம் செய்பவர்களுக்கு மலச்சிக்கல் அகலும். 

கண்டபேரண்டாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

இந்த ஆசனம் செய்து முடித்தவுடன் பாதஹஸ்தாசனம் ஒரு தடவை செய்து ஓய்வு பெறவும். இவ்வாசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றும். 

இந்த ஆசனம் செய்து முடித்தவுடன் பாதஹஸ்தாசனம் ஒரு தடவை செய்து ஓய்வு பெறவும். இவ்வாசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றும்.

ஆனால் ஆசனப் பயிற்சிகளில் மிகத் தேர்ச்சி பெற்றவர்களால் தான் இப்பயிற்சியைச் செய்ய முடியும். மற்றஆசனங்களில் நன்கு தேர்ச்சியடைந்தவர்கள் மட்டும்தான் இவ்வாசனத்தை முயற்சிக்க வேண்டும்.

Previous Post Next Post