சசாங்காசனம் (Shashankasana) பயிற்சி செய்யும் முறை :

முதலில் விரிப்பின் மீது மண்டியிட்டு அமரவும், முதுகைப் பின்னால் வளைத்துக் கைகளைப் பின் பக்கமாக ஊன்றி, தலையைப் பின்புறம் கால்களின் அருகில் விரிப்பில் நிறுத்தவும்.

முதலில் விரிப்பின் மீது மண்டியிட்டு அமரவும். முதுகைப் பின்னால் வளைத்துக் கைகளைப் பின் பக்கமாக ஊன்றி, தலையைப் பின்புறம் கால்களின் அருகில் விரிப்பில் நிறுத்தவும்.

பின்பு மெதுவாகத் தலையை நெருக்கிக் கொண்டு வந்து கால்களின் பாதங்களின் மேல் அமர்த்தவும். பின்பு தலையை அகற்றிக் கொண்டு கைகளை ஊன்றி முன் நிலைக்குக் கொண்டு வரவும்.

சசாங்காசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

மூன்று வினாடி நிறுத்தவும்.

சசாங்காசனம் பயிற்சியின் பலன்கள் :

இந்த ஆசனம் செய்வதினால் தலை, கழுத்து, மார்பு, கால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மார்புக் கூடு அகன்று விரிவதால் நுதையீரலுக்கு நல்ல பிராண வாயு கிடைக்கும். உடல் உறுப்புகள் அனைத்துமே நல்ல வலுவுண்டாகும்.

சசாங்காசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

இந்த ஆசனம் பார்ப்பதற்குச் சுலபமாகத் தோன்றினாலும் பயிற்சி செய்யும் போதுதான் அதன் சிரமம் தெரியும். இந்த அசனத்தைச் சரியாகச் செய்பவர்களுக்குப் பெரும்பாலும் மற்ற ஆசனங்கள் மிக எளிதில் செய்ய முடியும். சிறுவர் சிறுமியர்கள் இந்த ஆசனத்தை பயிலுவது மிக நல்லதாகும். மற்றவர்களும் இதைப் பயின்று வந்தால் என்றும் இளமை. அழகு. ஆனந்தம் கிடைக்கும்.

Previous Post Next Post