அர்த்த சர்வாங்காசனம் 

சர்வாங்க ஆசனம் அர்த்த சர்வாங்க ஆசனம் அமைப்பை பெற்றிருந்தாலும். இது முற்றிலும் மாறுபட்டது. சர்வாங்க ஆசனத்தில் கழுத்துப் பகுதி வரை தான் மடித்துக் கொள்ளப்படுகிறது. அர்த்த சர்வாங்க ஆசனத்தில் தோள் பகுதி உயர்ந்து பற்றிக் கொண்டும் இருக்கிறது. கைகள் முழங்கை வரை தரையிலேயே மடிந்து இருக்கின்றன.

சர்வாங்க ஆசனம் அர்த்த சர்வாங்க ஆசனம் அமைப்பை பெற்றிருந்தாலும். இது முற்றிலும் மாறுபட்டது.

அர்த்த சர்வாங்காசனம் பயிற்சி செய்யும் முறை :

முதலில் சாதாரணமாக மல்லாந்து படுக்கவும். பின்பு தோளுக்கு கீழே உள்ள உடலின் பாகத்தை மேலே தூக்கி கால்களை உயர்த்தி மடித்து பாதங்களை மேல் நோக்கி வைக்க வேண்டும். கால்களை மேலே தூக்கும் போது சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு கால்களைக் கீழே இறக்கும் பொழுது சுவாசத்தை வெளியிட வேண்டும்.

அர்த்த சர்வாங்காசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

ஐந்து வினாடிகள் செய்யவும், இரண்டு மூன்று முறைசெய்யலாம்.

அர்த்த சர்வாங்காசனம் பயிற்சியின் பலன்கள் :

அர்த்த சர்வாங்க ஆசனத்தில் முதுகுத் தண்டு வலிமை அடைகிறது. இரண்டு கைகளின் புஜங்கள், இடுப்பு, கால்கள் சுறுசுறுப்படைவதுடன், ரத்த ஒட்டம் மிக வேகமாக உடல் முழுவதும் பரவுகிறது.

அர்த்த சர்வாங்காசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

இந்த ஆசனம் செய்யும்போது கால்களை வேகமாக மேலே தூக்கவோ. கால்களை உதறவோ கூடாது. கைகளை இடுப்புப் பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆசனம் செய்யும்போது ஆடினாலும் நகர்ந்தாலும் கழுத்து, கை, முதுகு முதலிய இடங்களில் வலி ஏற்படலாம். நரம்பு பிசகலாம், ஆசனம் செய்யும்போது கவனமாக செய்ய வேண்டும்.

சர்வாங்க ஆசனம் செய்யத் தொடங்குபவர்கள் முதலில் அர்த்த சர்வாங்க ஆசனத்தைப் பழகிக் கொண்டால் பிறகு சீராகச் செய்யலாம்.

Previous Post Next Post