கோனாசனம் (Konasana)

கோனாசனம் செய்யும் முறை :

முதலில் நேராக நிற்க வேண்டும், பாதங்கள் இரண்டும் இரண்டு அடி தள்ளி இருப்பது போல நேராக இருக்கவும். கைகள் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டிருக்க வேண்டும்.

கோனாசனம் செய்யும் முறை :

தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி இரண்டையும் இணைத்துக் கொள்ளவும். விரல்களை இணைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளும் காதுகளைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

அப்போது உடலை வலதுபக்கம் சாய்த்து சில நிமிடங்கள் நிற்கவும். பின்பு நேராக நிற்கவும். அடுத்து இடது பக்கம் சாய்ந்து சில நிமிடங்கள் கழித்து நேராக நிற்கவும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம் இருந்தால் போதும்.

நேர அளவு :

பத்து முதல் இருபது நிமிடங்கள் செய்யவும். இரண்டு மூன்று தடவை செய்யலாம்.

பலன்கள் :

இறுக்கமான முதுகுப்புறம் உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் பயன்படும். ஒரு புறம் இறுகி மறுபுறம் வயிறு தளரவதால் வயிற்றுப் பகுதி தசைகள் தொய்வு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

Previous Post Next Post