அர்த்த சலபாசனம் (Ardha Salabhasana)

அர்த்த சலபாசனம் செய்யும் முறை :

முன்பு ஒரிடத்தில் சொல்லப்பட்ட சலபாசனத்தின் தொடர்புடைய ஒரு ஆசனம்தான் அர்த்த சலபாசனம். இதன் தொடக்க நிலை சலபாசனத்தில் சொல்லப்பட்டது போலவே அமையும்.

அர்த்த சலபாசனம் செய்யும் முறை

சலபாசனத்தில் இடுப்பிற்குக் கீழே இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டியிருந்தது. அர்த்த சலபாசனத்தில் ஒரு காலை மட்டும் உயர்த்தினால் போதுமானதாகும்.

ஒரு கால் மட்டும் மேலே உயர்த்தப்படும். போது மற்றொரு கால் தரையோடு படிந்திருக்க வேண்டும். ஒரு காலை மேலே தூக்கும் சமயம் மூச்சை நிதானமாகவும் தீர்க்கமாகவும் உள்ளுக்கு இழுக்க வேண்டும்.

முன்பு ஒரிடத்தில் சொல்லப்பட்ட சலபாசனத்தின் தொடர்புடைய ஒரு ஆசனம்தான் அர்த்த சலபாசனம்.

காலைக் கீழே தாழ்த்தும் போது மூச்சை வெளிவிட வேண்டும். முதலில் ஒரு காலை உயர்த்தி செய்தபின் சற்று நிறுத்தி மறு காலை உயர்த்திச் செய்ய வேண்டும். இவ்வாறு மாறி மாறிச் செய்வதன் மூலம் இரட்டிப்புப் பலன் கிடைக்கும்.

நேர அளவு :

பத்து முதல் இருபது வினாடிகள் இருக்கவும். இரண்டு மூன்று முறைசெய்யலாம்.

பலன்கள் :

இருதய வலிமைக்கு இந்த ஆசனம் உதவும். ஜீரண உறுப்புக்களின் செயற்பாட்டைச் சீராக்கஇது உதவும். இடுப்பு வலி அகலும். தொந்தி அமைந்திருப்பின் அது கரைத்து வயிற்றுப் பகுதி இயல்பும். கவர்ச்சியும் பெறும்.

Previous Post Next Post