காய்கறி கீரை வகைகள்

1. பூசணி, 2. பரங்கிக்காய், 3. புடலை, 4. தேங்காய், 5. மிளகாய், 6. சௌ சௌ, 7. இஞ்சி, 8. புதினா, 9. பீன்ஸ், 10. சோயா பீன்ஸ், 11. சர்க்கரை வள்ளி, 12. பட்டாணி, 13. அகத்திக்கீரை, 14. சுண்டை, 15. கறிவேப்பிலை, 16. முளைக்கீரை, 17. வல்லாரை, 18. வாழை, 

1. பூசணி மருத்துவ பயன்கள் (Pumpkin-Cucurbita)

பூசணிக்காய் மூளைக்கும் வயிற்றுக்கும் டானிக் மாதிரி. இருதயம் மற்றும் நுரையீரல் அழற்சியில் நல்ல பலனைக் கொடுக்கும். பூசணியை அல்வா செய்தோ, பூசணிச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து அருந்தவோ நுரையீரல் அழற்சி, இரத்தவாந்தி நிற்கும்.

பூசணிக்காய் மூளைக்கும் வயிற்றுக்கும் டானிக் மாதிரி. இருதயம் மற்றும் நுரையீரல் அழற்சியில் நல்ல பலனைக் கொடுக்கும். பூசணியை அல்வா செய்தோ, பூசணிச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து அருந்தவோ நுரையீரல் அழற்சி, இரத்தவாந்தி நிற்கும்.

பூசணிச்சாறு மூளையை அமைதிப்படுத்தி தணிவு நிலையில் வைக்கும். வாய் நாற்றத்தைப் போக்கும். பருமனைக் குறைக்கும். நரம்புத்தளர்ச்சிக்கு நல்லது.

பூசணி விதை 30 கிராம் எடுத்து அரைத்து தண்ணீர் கலந்து உட்கொள்ள வேண்டும். இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு ஆமணக்கெண்ணெய் உட்கொண்டால் குடலில் உள்ள நாடாப் புழுக்கள் (Tape-Worms) வெளியேறும்.

2. பரங்கிக்காய் மருத்துவ பயன்கள் (Barangay-Cucurbita maxima)

பறங்கிக்காயின் சாறு கடும் வெயிலால் ஏற்படும் மயக்கம் தீர்க்கும். ஈரல் உபாதையில் குணம் அளிக்கும். பறங்கிச் சாற்றை அடிக்கடி முகத்தில் பூசிவர முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளிகள் மறைந்து முகம் மெருதுவாகும். இந்தச் சாற்றை தண்ணீர் கலந்து உபயோகித்தால் (உட்கொள்ளுதல் கண்புரையில் நல்ல பலன் கிடைக்கும்.

பறங்கிக்காயின் சாறு கடும் வெயிலால் ஏற்படும் மயக்கம் தீர்க்கும். ஈரல் உபாதையில் குணம் அளிக்கும். பறங்கிச் சாற்றை அடிக்கடி முகத்தில் பூசிவர முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளிகள் மறைந்து முகம் மெருதுவாகும். இந்தச் சாற்றை தண்ணீர் கலந்து உபயோகித்தால் (உட்கொள்ளுதல் கண்புரையில் நல்ல பலன் கிடைக்கும்.

பறங்கிச்சாற்றை தினமும் பலதடவை பூசிவர சருமத்தில் தோன்றிய வெள்ளை திட்டுக்கள் மறையும். பறங்கிச்சாற்றைக் கொண்டு வாய்கொப்பளித்து வந்தால் பல்லின் வேரையும் அதைச் சுற்றி உள்ள திசுக்களையும் பாதிக்கும் பல் நோயை குணப்படுத்தும்.

பறங்கிக்காய் உடம்புக்கு வலிமையும், சக்தியும் அளிக்க வல்லது. அயர்ச்சி, பித்தம் நீக்கும். கபத்தை வெளியேற்றும். உடல் பருமனைக் குறைக்கும்.

3. புடலை மருத்துவ பயன்கள் (Snake gourd - Trichosanthes cucumerina)

உடலுக்கு வலிமை தரும். வாத நீக்கியாக செயல்படும். பசி உணர்வைத் தூண்டும். விந்து விருத்திக்கு உதவும். ஒரு நல்ல மலமிளக்கியும் கூட.

உடலுக்கு வலிமை தரும். வாத நீக்கியாக செயல்படும். பசி உணர்வைத் தூண்டும். விந்து விருத்திக்கு உதவும். ஒரு நல்ல மலமிளக்கியும் கூட.

புடலை பித்தத்தையும், கபத்தையும் அதிகரிக்கும். குடலை சுத்தப்படுத்தும். புடலையின் இன்னொரு வகையான பன்றிப்புடலை (குட்டை ரகம்) உபாதைகளைத்தான் உண்டு பண்ணும்.

வேம்பின் வகைகள் அதன் மருத்துவ பயன்கள்!!!

4. தேங்காய் மருத்துவ பயன்கள்

முற்றாத தேங்காயில் உள்ள இளநீர் வாந்தி, பித்தம். வெயிலில் ஏற்படும் மயக்கம் இவற்றைப் போக்கும். பயணத்தின் போது ஏற்படும் உமட்டலைத் தடுக்கும். தேங்காய் பாலை தனியாகவோ, கற்கண்டு அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பயன்படுத்தி வந்தால் உடம்பு உறுதி பெறும். மேனி அழகுறும்.

வாத, பித்த தேகிகள் தேங்காய்ப்பாலைக் காய்ச்சிதான் பருக வேண்டும். சில பேருக்கு ஒத்துக்கொள்ளாமல் வாந்தி, பித்த மயக்கம், தலைசுற்றல் ஏற்படலாம். ஆனால் எலுமிச்சம் பழச்சாறு பருக தொல்லை தீரும்.

தேங்காய்ப்பால் இரத்த விருத்திக்கும், தாது விருத்திக்கும் ஏற்றது.

5. மிளகாய் மருத்துவ பயன்கள்

இந்திய உணவு வகைகளில் பலவற்றிலும் முக்கிய இடம் மிளகாய்க்கு உண்டு. உணவுக்கு சுவையூட்ட, மணமூட்ட, குழம்பு தயாரிப்புக்கு, ஊறுகாய் தயாரிப்புக்கு என ஒவ்வொன்றுக்கும் ஒரு ரகம். மிளகாயில் பல ரகங்கள் இருந்தாலும் சிலவற்றை பிரதானமாகக் குறிப்பிடலாம்.

மிளகாய் காரம் மிக்கது. மிதமான அளவில்தான் பயன்படுத்த வேண்டும். அதிகமாக உண்டால் ஆசனக் கடுப்பை ஏற்படுத்தும். சிறுநீர்ப் போக்கில் எரிச்சல் காணும்.

மிளகாய் ஜலதோஷம் நீக்கும். அசீரணத்தில் குணம் அளிக்கும். இரைப்பையை வலுப்படுத்தும். குடலுக்கு இதம் தரும். ஆனால் மிதமான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே என்பதை மறந்துவிடக்கூடாது.

6. சௌ சௌ மருத்துவ பயன்கள்

இது சமமான குளிர்ச்சியை உடையது. சாம்பார், கூட்டு செய்து சாப்பிடலாம். சௌ சௌ கால்சியச்சத்து மிக்கதால் பல நோய்களைக் குணப்படுத்தும். எலும்புகளுக்கும், உடலுக்கும் உரம் அளிக்கும்.

சௌ சௌ கூட்டு செய்து சாப்பிட வாய்ப்புண், தொண்டைப் புண் மறையும். கபக்கட்டு நீங்கும். சீரண சக்தியை உண்டுபண்ணும். சுவாச சய அட்டையைப் போக்கும். வயிற்றுவலி, எரிச்சலுக்கு நிவாரணமாக அமையும்.

7. இஞ்சி மருத்துவ பயன்கள்

இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும். இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.

கடுமையான ருசி உடையது. ரொட்டி, குழம்பு, ஊறுகாய் போன்றவற்றில் பயன்படுத்தப்படும். மசாலாவுடன் அரைத்து உபயோகிக்கலாம்.

வாயு உபத்திரம், அசீரணம், குடலில் ஏற்படும் திருகுவலி, வாந்தி, இசிவு போன்ற வயிறு மற்றும் கடல் சம்பந்தமான உபாதைகளை இஞ்சி குணப்படுத்தும்.

சாப்பாட்டுக்கு பிறகு ஒரு சிறிய இஞ்சித் துண்டை மென்று தின்றால் சீரணக் கோளாறு எதுவும் வராது. இருமலில் குணம் காண இஞ்சிச்சாற்றுடன் தேன் கலந்து தினம் மூன்று அல்லது நான்கு தடவை உட்கொண்டு வந்தால் போதும்.

சிறிதளவு தண்ணீர்விட்டு இஞ்சியை உரசி நெற்றியில் பற்றுப் போட தலைவலி நீங்கும். முகத்தில் பூச பல்வலி பறந்து போகும். சில சொட்டு இஞ்சிச்சாற்றை காதில்விட காதுவலி தீரும்.

இஞ்சி வாத, பித்த, கப சீர்கேட்டில் உண்டாகும் வியாதிகளைப் போக்கும். இடுப்பு, முழங்கால், மூட்டு வலிகளை நிவர்த்தி செய்யும். பசி மந்தத்தைப் போக்கி பசியைத் தூண்டும்.

8. புதினா மருத்துவ பயன்கள்

உணவுத் தயாரிப்பில் மணமூட்டியாகவும் பயன்படுத்த- லாம். துவையல் செய்யலாம். புதினா எண்ணெய் 'சுயிங்கம் தயாரிப்பிலும், பற்பசை தயாரிப்பிலும் இடம் பெறுகிறது.

புதினா இலைச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும், தேனும் கலந்து உட்கொள்ள அசீரணம், பித்தம், கோடையில் வரும் வயிற்றுப்போக்கு, குடலில் ஏற்படும் பித்தம், திருகுவலி ஆகியவற்றில் நல்ல விளைவை உண்டு பண்ணும்.

தினமும் புதினா இலையை மென்று வந்தால் வாய் நாற்றத்துக்கு காரணமான கிருமிகள் அழியும். பருக்கள் மறையும். சொறிசிரங்கு, பூச்சிக் கொட்டுகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.

புதினாக்கீரையுடன் சிறிதளவு இஞ்சி, மிளகு, பனை வெல்லம் சேர்த்து தண்ணீர் கலந்து கஷாயம் தயாரிக்கலாம்.

9. பீன்ஸ் மருத்துவ பயன்கள்

பீன்ஸில் 18 வகை இருக்கிறது. பீன்ஸை தோலோடு உண்ணலாம் அல்லது அதன் பருப்பு பகுதியை உலர்த்தியும் பயன்படுத்தலாம்.

இதில் உள்ள புரதச்சத்து உடம்புக்கு வலிமை அளிக்கும். அதிகம் தின்றால் உப்புசம் ஏற்படும். அவரை இலைச்சாற்றுடன் கொஞ்சம் சுண்ணாம்பு, ஆமணக்கெண்ணெய் சேர்த்து குழைத்து பூச உடலில் ஏற்பட்ட புண் ஆறும்.

அவரையில் இரும்புச்சத்து அதிகம். எனவே கர்ப்பத்தில் பெண்களுக்கு சிறந்த உணவாக அமையும். அவரையில் உயிர்ச்சத்து மிகுதி. கண் உபாதை உள்ளவர்களுக்கும், விதை முற்றாத பிஞ்சுக்காய்களை சேர்த்து சமையல் செய்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

10. சோயா பீன்ஸ் மருத்துவ பயன்கள்

எண்ணெய்க்கும், புரதத்துக்கும் சிறந்த மூலப் பொருள் இது. புரதப்பற்றாக்குறையை ஈடுகட்டும். புரதம், வைட்டமின் செறிந்து உள்ளன. மற்ற காய்கறிகளை விட அதிகமாகவும் பால், முட்டை, இறைச்சிக்கு சமமாகவும் இதில் புரதச்சத்து உண்டு.

உடம்பில் சதை போடவும், நிறத்தை மேம்படுத்தவும் சோயா உதவும். நீரழிவு நோயாளிக்கு சிறந்த உணவாக அமையும். இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் உடம்புக்குத் தேவையான வெப்பத்தையும், சக்தியையும் வழங்கும்.

சோயா சருமத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்கும், சோயா எளிதில் சீரணிக்கக்கூடியது. இரும்புச்சத்து உள்ளது என்பதால் சோகை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

11. சர்க்கரை வள்ளி மருத்துவ பயன்கள்

கிழங்கை துண்டுகளாக்கி, வெய்யில் உலர்த்தி சேமித்து வந்தால் வற்றல் ஆண்டு முழுவதும் பயன்படும். கிழங்கை நறுக்கி காய்களை போல் பொரியல் செய்யலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு குடல் கோளாறுகளை சரி செய்யும், மலக்கட்டையும், குடற்பூச்சிகளையும் வெளிப் படுத்தும்.

இது மிகுதியாக சாப்பிட்டால் வாந்தியும், பேதியும் உண்டாகும். இந்தக் கிழங்கு இரத்த சோகைக்கு நல்ல பலனை அளிக்கும். உடல் எரிச்சலை தணிக்கும். சிறுநீர் சம்பந்தமான உபாதைகளை குணமாக்கும்.

12. பட்டாணி மருத்துவ பயன்கள்

இது காய்கறியாகவும், பருப்பு வகையாகவும் முக்கியத்துவம் பெறுவது. ஊட்டச்சத்து நிறைந்தது. சீரணமாகக் கூடிய புரதம் உயர் அளவில் கொண்டது. அதுமட்டுமல்ல வைட்டமின்களும், தாதுக்களும் கூட கணிசமான அளவில் பெற்றது.

பட்டாணி பச்சையாக மட்டுமின்றி வறுத்தும் உணவாக உட்கொள்ளப் படுகிறவைதாம். பட்டாணி உடல் வளர்ச்சிக்கு உதவும். இரத்தவிருத்தி செய்யும். பசி உணர்வைத் தூண்டும். இருமல், பித்த மயக்கத்திற்கு பரிகாரமாக அமையும்.

13. அகத்திக்கீரை மருத்துவ பயன்கள்

மர வகையைச் சார்ந்தது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணலாம். அகத்திக்கீரையில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

புழுக்களை கொல்லும் சக்தி இலைகளுக்கு உண்டு. உடலில் உண்டாகும் அரிப்புகள் நீங்கும். பிரசவித்த பெண்கள் இக்கீரையை உண்ண தாய்ப்பால் அதிகரிக்கும். கஷாயம் செய்தும் உட்கொள்ளலாம்.

அகத்திக்கீரைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கொப்பளித்தால் வாய்ப்புண் நீங்கும்.

அகத்திக்கீரையுடன் பூண்டு பெருங்காயம் சேர்த்து சமைத்து உண்ண வாயுத் தொல்லை நீங்கும். இந்தக் கீரையை அதிகம் உண்டால் வாயுத் தொல்லையை அதிகரிக்கச் செய்யும். முதிர்ந்த இளந்தளிராக உண்ண வேண்டும். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் தீரும்.

14. சுண்டை மருத்துவ பயன்கள்

பித்த, கபரோகங்களில் குணமளிக்கும். நாட்பட்ட பேதி, சீதபேதியை கண்டிக்கும். கீரிப்பூச்சிகளால் உண்டாகும் வயிற்று வலியைப் போக்கும். மூலத்தில் நல்ல பலனை வழங்கும்.

புளி சேர்க்காத சுண்டைக்காய் வற்றல் குழம்பு பிரசவித்த பெண்களில் வயிற்று நோயைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, காச நோயாளிகள் சுண்டைக்காய் வற்றலால் நிவார்ணம் பெறலாம்.

15. கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்

கறிவேப்பிலை சமையலில் சிறந்த மணமூட்டி என்கிற அளவில்தான் நாம் அறிவோம். சிற்றுண்டி, பிரதான உணவுக்கான குழம்பு, ரசம். பொரியல் ஆகியவற்றில் கறிவேப்பிலையை சேர்க்காமல் சுவாரஸ்யப்படாது.

கறிவேப்பிலை குளிர்ச்சி பொருந்தியது. நம் உடலின் சூட்டைத் தணிக்கும். பசி உணர்வைத் தூண்டும். பித்த உபாதை நீக்கும். உமட்டல், வயிற்று உளைச்சலில் குணம்பெற உதவும்.

கறிவேப்பிலை பித்தத்தில் உண்டாகும். அகால நரையைத் தடுக்கும். இதனுடன் மிளகு, சீரகம், சுக்கு சேர்த்துப் பொடி செய்து, சிறிது உப்பும் சேர்த்து சோற்றிலிட்டு நெய்யுடன் பிசைந்து உண்ண வயிற்றுப்போக்கு, மலக்கட்டு நீங்கும். குடல் உறுதி பெறவும் செய்யும்.

16. முளைக்கீரை மருத்துவ பயன்கள்

முளைக்கீரையின் தண்டுப்பகுதி மென்மையாக இருக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் ஏ. சி செறிவுள்ளது. கீரையை கூட்டு வைத்தோ கடைந்தோ உண்ணலாம்.

முளைக்கீரை குடற்புண்ணை ஆற்றும். பித்தம் நீங்கும். மலத்தை இளக்கும். எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும். கண் உபாதைகளில் நல்ல பலனை அளிக்கும்.

கீரைத்தண்டில் பச்சை, சிவப்பு உண்டு. பச்சைக் கீரைத் தண்டு நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டுக்குப் பரிகாரமாக அமையும்.

சிவப்புக் கீரை தண்டு உடல் வெப்பத்தை தணிக்கும். பித்தத்தை கட்டுப்படுத்தும், சருமத்தில் பளபளப்பை ஏற்படுத்தும்.

17. வல்லாரை மருத்துவ பயன்கள்

வல்லாரை மூளைக்கும், இருதயத்துக்கும் வலிமை தரும். சோர்வுற்ற நரம்புகளை தட்டி எழுப்பும். வல்லாரை இலைகளுடன், நெல்லிக்காய் சமஅளவு சேர்த்து அரைத்து காலை, மாலை மோரில் கலந்து குடித்துவர நீர்ச்சுருக்கு நிவாரணமடையும்,

அடிக்கடி தலைவலி வந்து அவதிப்படுகிறவர்கள் வல்லாரை இலைகளை உலர்த்திப் பொடி செய்து. கொத்த. மல்லி பொடி சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட குணம் கிடைக்கும்.

இளைய தலைமுறையினர் படிப்பில் தேர்ச்சிக்கு நினைவாற்றல் முக்கியம். வல்லாரை நினைவாற்றலை அபிவிருத்தி செய்யும். வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு சிட்டிகை பாலில் கலந்து பருகிவர நினைவாற்றல் வளரும்.

18. வாழை மருத்துவ பயன்கள்

வாழை மரத்தின் பழம், காய், பூ, தண்டு, கிழங்கு இவைகளை நாம் உணவாக கொள்கிறோம். ஆனால் வாழை மரம் பல நோய்களைத் தீர்க்கும் பயன்பட்டு வருகிறது.

ஆசனக்கடுப்பு நீங்க :- வாழைப் பூவைக் கொண்டு வந்து ஆய்ந்து அவியலாக வேகவைத்து எடுத்து கையினால் பிசைந்து பிழிந்தால் சாறு வரும். அந்தச் சாற்றில், கறிவேப்பிலையை மை போல் அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து போட்டுக் கலக்கி மேலும் ஒரு டம்ளர் தயிர் கலந்து. காலை வேளையில் மட்டும் உள்ளுக்குக் கொடுத்துவிட்டால் போதும் இந்த விதமாக தொடர்ந்து மூன்று நாள் கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

மூலத்தில் இரத்தம் வருவது நீங்க :- வாழைப் பூவைக் கொண்டு வந்து உரலில் போட்டு இடித்து, பிழிந்து சாறு எடுத்து காலை அரை ஆழாக்கு அளவு உள்ளுக்குள் கொடுத்து வந்தால் மூலத்தில் இரத்தம் வருவது நின்றுவிடும். ஆனால் பூரணமாகக் குணமாகும் வரை கொடுத்து வர வேண்டும்.

இரத்த மூலம் குணமாக :- ஐந்து வாழைப் பிஞ்சுகளை பொடியாக நறுக்கி மோரில் தேவையான அளவு உப்புச் சேர்த்து அதில் போட்டு ஒரு நாள் ஊற வைத்து மறுநாள் முறத்தில் காயவிட வேண்டும். மாலையில் காய்ந்த வாழைப் பிஞ்சுகளை மறுபடி மீதமுள்ள மோரில் போட்டு மூடி வைக்க வேண்டும். மறுநாள் முற்றத்தில் காயவிட வேண்டும்.

இவ்வாறு மோரை குடிக்கும் வரை காயை ஊற வைத்து, காய வைத்து பின், பத்திரப்படுத்த வேண்டும். இதை எண்ணெயில் வறுத்தும் தின்னலாம். சாதத்துடன் தின்னலாம். இந்த விதமாக 40 நாள் சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் பூரணமாகக் குணமாகும்.

பாம்பு விஷம் இறங்க :- பாம்பு கடித்துவிட்டது என்று தெரிந்தவுடன் வாழை மட்டை சாற்றில் அரை டம்ளர் அளவும். தும்பை இலைச்சாற்றில் அரை டம்ளர் அளவும் எடுத்து ஒன்றாகக் கலந்து உள்ளுக்குள் கொடுத்து விட்டால் பாம்பு விஷம் முறியும். 

சில சமயம் பாம்பு விஷம் ஏறி நோயாளி படுத்து விடுவார். வாய் கட்டி விடும். இந்த சமயம் மருந்து கொடுக்க முடியாது. 

வாழை மரத்தின் பட்டைகளை உரித்து கொண்டு வந்து, அதைத் தரையிலே கனமாகப் பரப்பி அதன் மேல் நோயாளியைப் படுக்க வைத்துவிட்டால் சிறிது நேரத்தில் நிலைமை மாறும். ஒரு சிறு உறுதியான குச்சியைக் கொண்டு வாயை திறக்கும்படி நெம்பினால் வாய் திறக்கும்.

உடனே மருந்தை உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். நோயாளி பிழைத்துக் கொள்வார். பசிக்கு அரிசி கஞ்சி கொடுக்க வேண்டும்.

நீர்க்கடுப்பு நீங்க :- உஷ்ணம் காரணமாக சிறுநீர் சற்றுச் சிவந்த நிறத்துடன் இறங்கும். இந்த சமயம் நீர்த்தாரையில் எரிச்சலும், கடுப்புமிருக்கும். 

இதை போக்க வாழைப் பட்டையை தணலில் வாட்டி முறுக்கிப் பிழிந்தால் அதிலிருந்து சாறு வரும். அந்த சாற்றில் அரை டம்ளர் அளவு எடுத்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாள் கொடுக்க நீர்க் கடுப்பு குணமாகும்.

சிறுநீர்க் கல் கரைய :- வாழைத் தண்டைக் கொண்டு மேல் வந்து, மேல் தோலை சீவிவிட்டு பொடி துண்டுகளாக நறுக்கி வாழைப் பிஞ்சுகளை ஊறவைத்தது போல மோரில் ஊற வைக்க வேண்டும். ருசிக்காக சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வற்றலாக காய வைத்த வாழைத் தண்டை எண்ணெயில் வறுத்து வைத்துக் கொண்டு வெறும் வாயில் தேவையான அளவு தின்று வரலாம். இந்த விதமாக செய்து வந்தால் சிறுநீரிலுள்ள கல் நாளாவட்டத்தில் கரைந்து ஒன்றில்லாமல் போய்விடும்.

Previous Post Next Post