வேம்பு மருத்துவ பயன்கள் (Azadirachta indica, Neem)

வேம்பின் குடிநீர் இரத்தத்தை சுத்திகரிக்கும். பூ உணவாகவும், வயிற்றுக் கிருமிகளை அழிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. வேம்பின் பட்டை இரத்தப்போக்கை கட்டுப்படுத்தவல்லது. அதோடு வயிற்று உபாதைகளுக்கும் வேம்பை விட உயர்ந்த மருந்தில்லை. வேப்பங் கொட்டையிலிருந்து எடுத்த எண்ணெய் வாதம், சீதளம், குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் போக்க பயன்படுகிறது.

வேம்பின் குடிநீர் இரத்தத்தை சுத்திகரிக்கும். பூ உணவாகவும், வயிற்றுக் கிருமிகளை அழிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. வேம்பின் பட்டை இரத்தப்போக்கை கட்டுப்படுத்தவல்லது. அதோடு வயிற்று உபாதைகளுக்கும் வேம்பை விட உயர்ந்த மருந்தில்லை. வேப்பங் கொட்டையிலிருந்து எடுத்த எண்ணெய் வாதம், சீதளம், குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் போக்க பயன்படுகிறது.

நீண்ட நாளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத பெண்கள் 48 நாட்கள் அதிகாலையில் குளித்தவுடன் ஈர உடையுடன் 108 முறை வேப்பமரத்தைச் சுற்றி வந்தால் தேகப் பயிற்சியுடன். சுவாச பந்தனமும், சூதகப்பை வீக்கம் முதலானவைகளும் வேம்பின் காற்றில் கலந்துள்ள மருந்துச் சாரத்தால் நீங்கி, புத்திர உற்பத்தி உண்டாகும்.

வேப்பம் புண்ணாக்கை ஊற வைத்து தோல் நோய் உள்ளவர்கள் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் பல்வேறு தோல் நோய்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்.

1. வேப்பங் கொழுந்து

கிசுக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு வேப்பங் கொழுந்தால் தயாரிக்கப்படும் மருந்துகள் பெரிதும் உதவும். வேப்பங்கொழுந்து, ஓமம், வசம்பு, மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கொழுந்து, கறி வேப்பிலைக் கொழுந்து. சோம்பு.

சித்தரத்தை, இந்துப்பு இவைகளை சமமாக எடுத்து உலர்த்தி இடித்து நுண்ணிய பொடியாக்கி, சுத்தமான நீர்விட்டு அரைத்து குன்றி மணி அளவு மாத்திரைகளாகச் செய்து உலர்த்தி வைத்துக்கொண்டு, காலை, மாலை ஒவ்வொரு மாத்திரை வெந்நீரில் கலந்து கொடுக்க குழந்தை களுக்கான பேதி, இசிவு, மாந்தம்,வயிற்றுப் பொறுமல், மலச்சிக்கல், மார்புச்சளி, மலக்கிருமிகள் போன்ற பிரச்சனைகள் தீரும்.

பசியின்மை- க்கும் ருசியின்மைக்கும் நல்ல மருந்து இது. இல்லந்தோறும் இருக்க வேண்டிய நல்ல குழந்தை மருந்து இது. வேப்பங்கொழுந்து சிறிதளவு, இரண்டு எண்ணிக்கை மிளகு பத்து எண்ணிக்கை சீரகம் என்ற அளவில் தேவையான அளவு எடுத்து இவைகளை ஒன்று சேர்த்து அரைத்து கடலை அளவு மாத்திரை செய்து வைத்துக் கொண்டு, அதில் ஒன்றை எடுத்து வெந்நீரில் கரைத்து குழந்தைகளுக்கு வாரம் ஒருநாள் தரவும். அஜீரணம், சளிபிடித்தல் நீங்கும். வயிற்றில் கிருமிகள் உண்டாகாது.

வேப்பங்கொழுந்து, வேம்பின் ஈர்க்கு, கடுக்காய்தோல் மூன்றிலும் சிறிதளவு எடுத்து பிரண்டைச் சாறுவிட்டு அரைத்து. அதனுடன் தேவையான அளவு விளக்கெண்ணை கலந்து காலை வெறும் வயிற்றில் கொடுக்க அனைத்து குடல்பூச்சி களும் இறந்து மலத்துடன் வெளியேறி குடல் சுத்தமாகும்.

மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு வேப்பங்கொழுந்து, அதிமதுரம், சர்க்கரை இவைகளை வேண்டிய அளவு எடுத்து விழுதாக அரைத்து, அதில் சில சொட்டு நெய்விட்டுச் சூடாக்கி 2 கிராம் வீதம் கொடுத்துவர குணமாகும்.

பெரியம்மை விரைவில் குணமாக உலர்ந்த வேப்பங் கொழுந்துடன் குண்டுமணி வேர் பொடியைச் சமமாகக் கலந்து துளசிச்சாறு விட்டு மைபோல் அரைத்து கோலிக் குண்டளவு சாப்பிட்டு வர குணமாகும்.

வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது வெல்லம் சேர்த்து துவையல் அல்லது சட்னி போல் அரைத்து பகல் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள நுண்கிருமிகள் மலத்துடன் வெளியேறும்: குடல் சுத்தமாகும்.

2. வேப்பம் பூ

வயிற்றின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் வேம்பின் பூ எளிமையான, அதே சமயம் மிகவும் அற்புதமான மருந்தாக வேலை செய்கிறது.

வேப்பம் பூவைச் சேகரித்து உப்புக் கலந்த மோரில் ஊற வைத்து நெய்விட்டு லேசாக வறுத்து, சாதத்தில் கலந்து உண்ணலாம் அல்லது கறிவேப்பிலை, மிளகாய் புளிசேர்த்து சட்னி செய்து உபயோகிக்கலாம். அல்லது வேப்பம்பூவை இரசத்தில் கூட்டி சாப்பிட்டாலும் ஜீரண மண்டலப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

பித்த சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வேப்பம் பூவை நெய்யில் வதக்கி அதனுடன் புளி, மிளகு, உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் துவையல் செய்து முதல் உணவுடன் கலந்து சாப்பிட குணமாகும்.

வேப்பம்பூவை ஊறல் போல் குடிக்க உடல் பலஹீனம் விலகும் வேப்பம் பூ ஒரு கைபிடி, நிலவேம்பு ஒரு கைபிடி இரண்டையும் நன்றாக உலர்த்தி பொடி செய்து, அதில் 2 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து, அதை வடிகட்டி வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் எல்லாப் பலவீனமும் போகும். குறிப்பாக காய்ச்சல் உண்டானபின் ஏற்படும் பலவீனம் மறைய அற்புதமான மருந்து இது.

3. வேப்பங்காய், பழம்

வேப்பங்காயைக் கொட்டை நீக்கிப் பொடித்து சூரணம் போல் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை 1/2 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர நச்சுக்கிருமியால் வரும் முறை சுரம் குணமாகும்.

வேப்பம் பழத்தை கசக்கிப் பிழிந்து சிறிது சர்க்கரை கலந்து மணப்பாகு செய்து 1-2 ஸ்பூன் அளவு காலை-மாலை சாப்பிட இரத்தம் சுத்தமாகி தோல் நோய்கள் குணமாகத் தொடங்கும்.

பண்டை காலத்தில் பஞ்சகற்ப முழுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற முறையாகும். பஞ்சகற்பம் என்பது வேம்பின் வித்து, கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய்த்தோல், நெல்லிப்பருப்பு ஆகியவையாகும். இவைகளை சமமாக எடுத்து இடித்து பசுவின் பால்விட்டு அரைத்து காய்ச்சிய எண்ணையைக் கொண்டு தலைமுழுகுவது போல் தலையில் தேய்த்து முழுகிவர உடலில் நேரம் அணுகாது.

உடலில் உஷ்ணம் மிகுந்தால் கண் எரிச்சல், தலைகனம், தலைவலி போன்றவை உண்டாகும். அதற்கு வேம்பின் விதைப் பருப்பை தேங்காய், மிளகு, கசகசா இவைகளைச் சமமாக எடுத்து பால்விட்டு அரைத்து முன் சொன்ன பஞ்சகற்ப தலை முழுக்குப் போல் செய்து, இளம் வெந்நீரில் குளித்துவர உடல் உஷ்ணம் தணியும்.

மூலநோய்க்கு இன்றளவும் கிராமப் பகுதிகளில் கடைபிடிக்கும் முறை ஒன்று உண்டு. உலர்ந்த வேம்பின் விதை பருப்பை வெல்லங்கூட்டி அரைத்து கோலிக் குண்டளவு தினமும் சாப்பிட்டு வர எல்லா மூலநோயும் குணமாகும்.

4. வேப்பெண்ணெய்

தலைவலி பல காரணங்களால் வரலாம். குளிர்ச்சியினால் வரும் தலைவலி, பிடரி வலிக்கு வாரம் ஒருமுறைப் வேப்பெண்ணெயைத் தலையில் தேய்த்து நன்றாக ஊறிய யின் தலைமுழுகி வந்தால் குணமாகும். தலை குளிப்பன்று பகல் தூக்கம் கூடாது.

வேப்பெண்ணையைத் தினமும் தலைக்குத் தடவி வர பேன் தொல்லைகள் ஒழியும். அதுமட்டுமல்ல அதனால் முடி கொட்டுதல் நிற்பதுடன், முடியும் நன்றாகச் செழித்து வளரும்.

மூக்கடைப்பு ஏற்பட்டால் இரவில் தூங்குவது கஷ்டமாக இருக்கும். அதற்கு இரவு படுக்கப்போகும் போது, வேப்பெண்ணையில் விரலை நனைத்து இரண்டு மூக்கு துவாரத்திலும் தடவிவர மூக்கடைப்பு நாளடைவில் குணமாகி விடும்.

வாதநோய் தாக்குதலால், கை, கால்கள் உணர்விழந்து விடும். இதற்கு வேப்பெண்ணையில் வதக்கிய ஆமணக்கு இலையினை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைத்துக் கட்ட மெல்ல மெல்ல குணம் கிடைக்கும்.

தினசரி ஒரு கண்ணாடி வேப்பெண்ணெய் சாப்பிட்டால் நீரிழிவு என்னும் சர்க்கரைநோய் கட்டுப்படுவதாக நம்பப்படுகிறது. ஆய்வில் இது உண் மையென்று நிரூபிக்கப் பட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பெண்ணெய் ஒரு வரப்பிரசாதமாகும். குளிர்காலத்தில் கைகால் சில்லிட்டு விட்டால் 50 மில்லி வேப்பெண்ணைச் சூடாக்கி, அதில் கட்டிக் கற்பூரத்தைப் பொடித்துப் போட்டு துழாவினால் கற்பூரம் கரைந்துவிடும். அவ்வெண்ணையை உள்ளங்காலிலும், உள்ளங்கையிலும் நன்றாகச் சூடு வரத் தேய்த்தால் கை, கால் சில்லிட்ட நிலை மாறிவிடும்.

5. விஞ்ஞான நோக்கில் வேம்பு

புதுடெல்லியில் உள்ள தேசிய நோய் எதிர்ப்பு ஆய்வு மையம் (National Institute of Immunology) வேம்பின் பட்டை, இலை, விதை, பிசின் மற்றும் எண்ணெய் இவற்றைக் கொண்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு நீண்டகாலம் பரிசோதிக்கப்பட்டு, மருந்துகளாகச் செய்து பல வியக்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

எய்ட்சுக்கு (AIDS) :-

வேம்பின் பலபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பு மருந்து AIDS நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்ததில் இரத்தத்தில் குறைந்து கொண்டே வரும் வெள்ளை அணுக்களின் விகிதம் கட்டுப்படுத்தபட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் இருவிதப் பயன்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதை பாரீஸில் (Paris) உள்ள எய்ட்ஸ் நோய் பற்றி ஆராய்ச்சி செய்யும் (Pasture) "பாஸ்டர் நிறுவனம்" இம்முடிவை ஏற்றுக்கொண்டு ஆராய்ச்சிகளைத் தொடரச் செய்துள்ளது.

பால்வினை நோய்க்கு :-

மேற்கொண்ட இதே மருந்தை களிம்பு வடிவத்தில் டெல்லியில் உள்ள “சப்தர் ஜங்" மருத்துவமனையில் பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கொடுத்து சோதனை செய்ததில் வாரங்களில் நோய் முற்றிலும் குணமாகி விட்டதாகவும் மற்றும் பெண்களுக்கு வெள்ளை, வெட்டை முதலிய நோய்களை உண்டாக்கக்கூடிய போன்ற கிருமிகளுக்கும், யோனிப்புற்று நோய்க்கும் எதிராக செயல்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கருத்தடையில் வேம்பின் பங்கு :-

மேலும் N.i.l நிறுவனம் வேப்பெண்ணையை பிரதானப் பொருளாகக் கொண்டு செய்யப்படும் இம்மருந்தை ஊசி மூலம் கருப்பை யில் செலுத்தி தற்காலிகமாக 9 முதல் 12 மாதங்களுக்கு கருத்தடை உண்டாகிறது. ஆனால் மாதவிடாயிலோ, ஹார்மோன் உற்பத்தியிலோ எந்த வித மாறுதலும் ஏற்படுவ தில்லை. எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.

6. வேப்பிலை

கூர்மையான முனைகளையும் இரம்பம் போன்ற ஓரங்களின் அமைப்பையும், கொத்துக் கொத்தாக பசுமையான இலைகளையும் கொண்டது வேப்பிலை. வேப்பிலை ஒரு காயகல்ப மூலிகை. வேப்பிலையை உண்பதன் மூலமாக நமது அறிவு தெளிவாகும். உடல் வலிமை பெறும். ஆயுளை நீடிக்கச் செய்யும். இதை மெய்ப்பிக்கும் வகையில், புத்தியினைத் தீட்டுவிக்கும் புண் பிணியை போட்டுவிக்கும் இந்திரியத்தை நன்றாக இசைவிக்கும் சந்ததமும் வீதுண்டாங் கற்பமிகவுண்டா மெய் ஈன்று மாநினிரை மில்லாமல்.

என்ற தேரையர் வெண்பா அமைந்துள்ளது. உடல் பிணிகள் அனைத்துக்கும் பயன்படுவதால் வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்றே கூறலாம். அதன் மருத்துவப் பயனை இனிக் காணலாம்.

மூன்று வேப்பிலை ஒன்பது மிளகு, 2 கிராம் கற்பூரம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தலைவலிக்கு நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே நிற்கும்.

மாலைக்கண் நோய்க்கு இதன் இலைச்சாற்றை கண்களுக்குப் பூசி வந்தால் குணமாகும். இதன் இலையைச் சட்னிபோல் அரைத்து சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்துப் பிழிய சாறு வெளிவரும். இதைச் சேகரித்து கண் இமைகளில் மை போல் தீட்டி வந்தால் குணமாகும்.

இச்சிகிச்சை முறை சற்று வித்தியாசமானது. வேப்பிலைச் சாற்றை வலது கண்பாதிக்கப்பட்டிருந்தால் இடது காதிலும், இடது கண் பாதிக்கப்பட்டிருந்தால் வலது காதிலும் சில சொட்டுகள் விட்டு வந்தால் பாதிப்பு குணமாகும்.

வேப்பிலையின் ஈர்க்கை இடித்து சாறு பிழிந்து சில துளி காதில் விட காதுவலி குணமாகும். வேப்பிலைச் சாற்றில் சமன்தேவன் கலந்து சில துளி காதில் விடக் காதில் உண்டாகும் கொப்புளம் உடைந்து சீழ் வெளிவரும்.

கைப்பிடியளவு வேப்பிலையும், அத்தி இலையும் சமமாக எடுத்து 4 டம்ளர் நீர் ஊற்றி ஒரு டம்ளர் அளவு வற்றக் காய்ச்சி, வெறும் வயிற்றில் குடித்துவர வயிற்றுப்புண் பூரண குணம் கிடைக்கும்.

சில மகளிர் மாதவிலக்கின் போது தாங்க முடியாத வயிற்றுவலியால் துன்புறுவர். அவர்கள் வேப்பிலையை நன்றாக அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து, அதனுள் கடலை அளவு பெருங்காயம் வைத்து மாதவிலக்கான மூன்று நாட்களும் தொடர்ந்து உண்டுவர வலி சாந்தப்படும். இதை மூன்று மாதங்கள் மாதவிடாய் காலங்களில் மட்டும் உண்டு வர நிரந்தர குணம் கிடைக்கும்.

வயிற்றோட்டம் பல்வேறு காரணங்களில் உண்டாகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் 50 கிராம் வேப்பிலையுடன் 15 கிராம் வசம்பைத் தட்டிப்போட்டு 1/2 லிட்டர் நீர் சுற்றி கொதிக்க வைத்து, 100 மில்லியானதும் இறக்கி வடிகட்டி காலை மாலை 50 மில்லி வீதம் பருகி வந்தால் இரண்டொரு நாளில் வயிற்றோட்டம் குணமாகிவிடும்.

காதில் ஈ, எறும்பு, பூச்சி ஆகியவை புகுந்து கொண்டால் வேப்பிலைச் சாற்றில் சிறிது உப்பைக் கலந்து சூடாக்கி சில துளி காதில்விட அவை இறந்துவிடும்.

காமாலைக்கு மிகச்சிறந்த நிவாரணி வேப்பிலை. வேப்பிலையை இடித்துச் சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் வீதம், காலை மாலை மூன்று வேளைகளையும் குடித்துவர குணமாகும். குறைந்தது ஒரு வாரம் இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதிகமாக வயிற்றோட்டம் ஏற்பட்டால் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

நாள்பட்ட புண்கள் ஆற வேப்பிலையையும் பெருங் காயத்தையும் சேர்த்து அரைத்துப் பூச குணமாகும். மேலும், வேப்பிலையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து சாறுபிழிந்து, ஒரு அவுன்ஸ் வீதம் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குஷ்டம் குணமாகும்.

குஷ்டத்திற்கே அருமருந்தாகும் வேப்பிலை எல்லாத் தோல் நோய்களுக்கும் நிகரற்ற மருந்தாகும். இதில் களிம்பு செய்து பயன்படுத்தலாம். வேப்பிலையை நுண்ணிய பொடியாக்கி நெய்விட்டு அரைத்து களிம்புப் பதம் வந்ததும் உபயோகிக்கலாம். இதைக் கொப்புளங்கள், பரு, பால்வினை நோயால் வந்த குழிப்புண்களுக்குத் தடவினால் விரைவில் குணம் கிடைக்கும்.

ஒவ்வாமை (Alergy) க்கு வேப்பிலையுடன் சிறிது மிளகு சேர்த்து மைபோல் அரைத்து கோலிக்குண்டு அளவு மூன்று வேளையும் உண்டுவர ஒவ்வாமையால் உண்டாகும் உடல் தடிப்பு. அரிப்பு போன்றவை குணமாகும். ஒவ்வொரு வேப்பிலையுடன் ஒரு மிளகு வைத்தும் சாப்பிடலாம்.

மகப்பேறு மருத்துவத்தில் வேப்பிலையின் பங்கு மிகவும் முக்கியம். குழந்தை பிறப்புக்கு சில நாட்களுக்கு முன் கருவுற்றுவர்களுக்கு, காலையில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலைச்சாறு குடிக்கக் கொடுத்து வர பிரசவம் எளிதாகும். மேலும் வயிற்றுத் தசைகள் பிரசவத்தின் போது எளிதாகச் சுருங்கி விரிய இது வழி செய்வதே காரணம். 

மேலும், வேப்பிலைக் கஷாயத்தைக் கொண்டு பெண்களின் ஜனனேந்திரியத்தை தினமும் சுத்தம் செய்து வர கருப்பை கோளாறுகளும் மற்றும் அது சம்பந்தமான உபாதைகளும் நிவர்த்தியாகும்.

வேப்பிலையையும், கரந்தைச் செடியின் காயும் ஒன்றாகக் காயவைத்து. பழைய கூரையின் வைக்கோலுடன் தூளாகச் செய்து வைத்துக்கொண்டு, கொசு தொல்லையின் போது அத்தூளை நெருப்பிலிட்டு புகைக்க கொசுக்கள் இருக்கமிடந் தெரியாமல் ஓடிவிடும்.

கொசுக்களினால் பரவும் முக்கியமான நோய் மலேரியாவாகும். இதனால் வரும் காய்ச்சல் குறிப்பிட்ட நேரத்தில் வந்து போகும். நீண்ட நாள் தொடரும் நோய் இது. இந்நோய்க்கு வேப்பிலையை இடித்துச் சாரெடுத்து அல்லது கஷாயம் வைத்து 15 முதல் 30 மில்லி வரை புகட்ட ஈரலில் சென்று வேலை செய்து நோயைக் குணமாக்கும்.

இதுமட்டுமல்ல அனேக நோய்களுக்கு வேப்பிலை நிகரற்ற நிவாரணியாக வேலை செய்யும். இதன் இலையைத் தினம் இரண்டு மூன்று உண்டு வர உடல் பிணிகள் நீங்கும். இலையை அரைத்து மேலுக்குப் பூசிக் குளிக்க விஷக் கிருமிகள் உடலில் புகா, வேப்பிலையை அரைத்து களிபோல் ஆகும் வரை சூடாக்கிக் கிண்டி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

வேப்பில்லை ஊறுகாய் :-

வேப்பிலை, கருவேப்பிலை, புதினா, இஞ்சி, பூண்டு, வறுத்த உளுந்து, கொத்து, மல்லி, சீரகம், மிளகு தேவையான அளவு எண்ணெய் ஆகிய பொருட்களை இடித்து நசித்து எல்லாவற்றையும் உறவாகும்படி கிளறி (வறுத்து உளுந்து நீங்கலாக மற்றவை பச்சையாகவே சேர்க்க வேண்டும்) சூரிய ஒளியில் 5 நாட்கள் வைக்க வேண்டும். தினமும் கிளறி விட வேண்டும். இதுவே வேம்பின் ஊறுகாய் எனலாம்.

வேம்பின் ஊறுகாயை உணவுடன் சேர்த்து பயன்படுத்திவர அஜீரணகட கோளாறுகள், இரத்த சோகை. குறைவான மற்றும் மிகை இரத்த அழுத்தம், தூக்கமின்மை, மலச்சிக்கல், மூத்திரப்பை வீக்கம், கல்லடைப்பு, பித்த நீர்பையில் கல் உண்டாகுதல் போன்ற குறைபாடுகள் பூரண நிவர்த்தியாகும். சிறுநீரக் கோளாறுகளான சிறுநீரக வீக்கம், சிறுநீரில் சர்க்கரை மற்றும் உப்புக் காணுதல், பால்வினை நோய்கள், சிறுநீர் பை அழற்சி, புரோஸ்டேட் சுரப்பி வீக்கம், சிறுநீரில் சீழ், இரத்தம் வருதல் போன்றவை குணமாகும். நரம்பு பலவீனம், இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படர்தல், இருதயத்தில் உள்ள வால்வு பிரச்சனைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு போன்றவை வேப்பிலை ஊறுகாயை உண்டு வர நிவர்த்தியாகும்.

7. வேம்பின் பயன்கள்

வேம்பின் கொழுந்து  :-

அஜீரணம், ஆடை பாதுகாப்பு, கற்றாழை நாற்றம், குடல் சுத்தம், குழந்தைகளின் பேதி, இசிவு, மாந்தம் -சர்மநோய்கள், சளி பிடித்தல், நோய் தடுப்பு, 'பசியின்மை, பொன்னுக்கு வீங்கி, மலச்சிக்கல், மலக்கிருமிகள், மார்புச்சளி, பேன் தொல்லை, பெரியம்மை, வயிற்றுப் பொருமல், ருசியின்மை ஆகியவை தீரும்.

வேப்பிலை :-

கருப்பைக் கோளாறுகள், கட்டிகள், கல்லடைப்பு, உப்புநோய், காதில் கொப்புளம், காதில் ஈ, எறும்பு புகுந்து கொண்டால், காமாலை, குழிப்புண்கள், ஒவ்வாமை, குஷ்டம், கொசுக்களை விரட்ட, சர்க்கரைநோய், சிறுநீரக் வீக்கம், சிறுநீர்ப்பை அழற்சி, சிறுநீரில் இரத்தம், சீழ் வெளியேறுதல், இரத்தக் குழாய் அடைப்பு, இதய வால்வுப் பிரச்சனைகள், தலைவலி, தூக்கமின்மை, பரு.

பித்தநீர்ப்பைகல், பால்வினை நோய்கள், புரோஸ்டட் சுரப்பி வீக்கம், மலச்சிக்கல், மாதவிடாய் வலி, மூத்திரப்பை வீக்கம், மாலைக்கண் நோய், நரம்பு பலவீனம், மிகை இரத்த அழுத்தம் வயிற்றோட்டம் ஆகியவை குணமாகும்.

வேம்பின் பூ :-

பித்த சம்பந்தமான பிரச்சனைகள், பலவீனம், மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்சனைகள் ஆகியவை தீரும்.

வேம்பின் காய், பழம் :- 

இரத்தம் சுத்தமாக, இதயம் மற்றும் மூளை பலம் பெற சூதகவாயு, ஷயரோகம், தாது விருத்தி, தோல்நோய்கள் முறைசுரம் போன்றவையாகும்.

வேப்பங்கொட்டை :-

உடல் பாதுகாப்பு, காதுப் பிரச்சனைகள், கண் எரிச்சல், தலைவலி, தலைக்கணம், மூலம் ஆகியவை குணமாகும்.

வேப்பெண்ணெய் :-

ஆறாத புண், காதிரைச்சல், காதுகுத்தல், காதில் சீழ்வடிதல், குடல் பூச்சிகள், கை, கால் குடைச்சல், இரத்தக் குழாய் அடைப்பு, கை, கால் சில்லிப்பு, சர்க்கரை நோய், தலைவலி, தொண்டைப்புண், தொண்டைக்கம்மல், தோல்வெடிப்பு, நீர்வடியும் புண், பிடரி வலி, பேன்தொல்லை. பூஞ்சைக்காளான் தாக்குதல், பீனிசம், புரையோடிய புண், முடி கொட்டுதல், பாரிசவாதம், ஜலதோஷம், நரம்பு பலவீனம், மூக்கடைப்பு, வலி நிவாரணம், வாதநோய் போன்றவை போகும்.

வேம்பின் சமூலம் :-

போதை பழக்கத்தால் வந்த பிரச்சனைகள் மற்றும் காயகல்பமாகப் பயன்தரும்.

வேம்பின் பிசின் :-

தாதுவிருத்தி, வெண்குஷ்டம் மற்றும் சிறுநீரில் இரத்தம் வருவது தீரும்.

வேம்பின் பட்டை :-

இரத்தம் சுத்தமாக, கரப்பான், காய்ச்சல், குஷ்டம் காய்ச்சல், குழிப்புண், காதுவலி, காதில் சீழ்வடிதல், சரும ரோகங்கள், சூதகவலி, தீப்பட்ட புண் நரைதிரை மாற, நீரிழிவு. நாட்பட்ட புண், பித்தம், புத்திகூர்மை, மனஅமைதி, மலச்சிக்கல், முறைக்காய்ச்சல், மூத்திரப்பை பலவீனம், மூலநோய், களைப்பு, விஷஜூரம், நரம்புத் தளர்ச்சி, பீனிசம், மண்டையம், வயிற்றுவலி ஆகியவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

8. வேம்பின் பட்டை

வேப்ப மரம் முதிர முதிர வேம்பின் பட்டையின் தடிமன் அதாவது கனம் அதிகமாகும். பொதுவாக வேம்பின் பட்டையில் உள்ள காய்ந்த வெளிச்செதில்களை எடுத்துவிட வேண்டும். அதே போல் பட்டையின் உள்பக்க நாரையும் நீக்கிவிட்டு மத்திய பகுதியைப் பயன்படுத்த வேண்டும்.

தலை சம்பந்தமான நோய்களுக்கு வேம்பின் பட்டை கலந்த மருந்து சிறந்த நிவாரணியாகும். வேப்பம் பட்டை 10 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, பூண்டு, சீரகம், கஸ்தூரி மஞ்சள் இவை ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து இவைகளைப் பசுவின் பால் விட்டு அரைத்து 1/2 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 4 லிட்டர் பாலும் கலந்து காய்ச்சி பதத்தில் இறக்கி வைத்து வடிகட்டி வாரம் இருமுறை தலையில் தேய்த்து சிறிது ஊறியதும் குளித்துவர மண்டையடி, பீனிசம், காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்ற தலை சம்பந்தமான நோய்களும் வாதநோய் போன்றவையும் குணமாகும்.

Previous Post Next Post