பழங்கள் மற்றும் கனி வகைகள் மருத்துவ பயன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை உண்பதன் மூலம் நீரை கிரகித்துக் கொள்ள முடியும். பழம் அல்லது பழச்சாறு உண்பவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியும். அவை சிறுநீரின் அடர்த்தியைக் குறைக்கும். கழிவுகளைத் துரிதமாக வெளியேற்ற உதவும். உப்பு நீக்க உணவாக அமையும்.

உடம்புக்கு அவசியமான தாதுச் சத்துக்களையும் பழங்கள் கொடுக்கும். பழங்களில் உள்ள இழைப்பண்டம் சீரண் பாதையில் உணவு மிருதுவாகச் செல்லவும். எளிதாக மலம் கழிக்கவும் உதவும்.

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை உண்பதன் மூலம் நீரை கிரகித்துக் கொள்ள முடியும். பழம் அல்லது பழச்சாறு உண்பவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியும். அவை சிறுநீரின் அடர்த்தியைக் குறைக்கும். கழிவுகளைத் துரிதமாக வெளியேற்ற உதவும். உப்பு நீக்க உணவாக அமையும்.

முற்றிப்பழுத்த பழங்களை பச்சையாக உண்பது சிறப்பு காலையில் சிற்றுண்டியாக பழங்களை உண்டு நற்பலன் களைப் பெறலாம். சாப்பாட்டை விட பால் தான் பழத்துக்கு நல்ல இணைப்பாக இருக்க முடியும். நோய்வாய்ப்பட்டவர்கள் பழத்தை சாறுவடிவில் உண்ண வேண்டும் என்பது மருத்துவப் பரிந்துரை. பழச்சாற்றை தயாரித்த உடனே அருந்த வேண்டும். இல்லையேல் அது சிதைவுற்று தனது குணங்களை இழக்கும். விதைகள் உள்ள பழங்கள் அனைத்தும் இரத்த விருத்-திக்கும், நரம்புகளை வலிமைப்படுத்துவதற்கும் பயன்படும். 

சாப்பாட்டில் பழங்களை தாராளமாக சேர்த்துக் கொள்கிறவர் ஆரோக்கிய வாழ்வு வாழமுடியும். பழங்கள் எல்லா நோய்களையும் வரவொட்டாமல் தடுக்கும். அது ஒருவரை வாழ்நாள் நெடுகவும் சுறுசுறுப்பும், செய் வேகமும் உடையவராய் வைத்து இருக்கும்.

காலையில் ஒரு கோப்பை எலுமிச்சைசாறு அருந்தினால் குடல் பகுதிகள் சுத்தமாகும். நச்சுத்தன்மை தான் நோய்கள் தோன்ற முக்கியக் காரணம். நோய்கள் ஏற்படாமலிருக்க வேண்டுமானால் உடம்பில் இருந்து நச்சுத்தன்மையை அகற்ற வேண்டும். இது பழச்சாறு அருந்துவதன் மூலம் சாத்தியப்படும்.

1. ஆப்பிள் மருத்துவ பயன்கள் (Apple-Malus pumila)

ஆப்பிள் பாதுகாக்கிற, நலமளிக்கிற ஒரு உணவு. ஆப்பிள் ஊட்டச்சத்துமிக்க உணவு. ஆப்பிளில் உள்ள சர்க்கரை 9-51 சதவீதம் ஆகும். சிலர் ஆப்பிளின் தோலை சீவி எறிந்துவிட்டுப் பழத்தை உண்பார்கள். உண்மையில் சதைப்பற்றுள்ள பகுதியை விட தோலிலும், அதனடியில் உள்ள கதுப்பிலும் அதிக அளவு வைட்டமின் சி இருக்கும்.

ஆப்பிள் பாதுகாக்கிற, நலமளிக்கிற ஒரு உணவு. ஆப்பிள் ஊட்டச்சத்துமிக்க உணவு. ஆப்பிளில் உள்ள சர்க்கரை 9-51 சதவீதம் ஆகும். சிலர் ஆப்பிளின் தோலை சீவி எறிந்துவிட்டுப் பழத்தை உண்பார்கள்.

உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட்டுரைக்க முடியாதது ஆகும். தினம் 1 கிலோ ஆப்பிள் சாப்பிட்டு வர கணிசமான பலன் உண்டு.

ஆப்பிளை பச்சையாக அப்படியே சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. வேகவைத்த ஆப்பிள் வயிற்றுப் போக்குக்கு நல்லது. அனைத்து வகை தலைவலிகளுக்கும் ஆப்பிள் அருமருந்தாக அமையும். 

தலைவலியால் அவதிப்படுகிறவர் ஆப்பிளின் தோலையும். கடினப்பகுதியையும் அகற்றிவிட்டு சதைப்பகுதியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவேண்டும். இவ்விதமாக தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.

ஆப்பிள்களில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்களும் குறைந்த அளவு சோடியமும் உண்டு. இருதய இயக்கக் கோளாறுகளுக்கு ஆப்பிளுடன் தேன்கலந்து உண்பது ரொம்ப காலமாகவே பரிந்துரைக்கப்படுகிற ஒன்று.

மூளைக் கோளாறை குணப்படுத்தும் பாஸ்பரஸ் ஆப்பிளில் உள்ளது. இதனால் மூளைக்கோளாறு உள்ளவர் களுக்கு ஆப்பிள் கட்டாய உணவாகக் கொடுக்கப்பட வேண்டும் தூக்கத்தில் நடமாடும் வியாதிக்காரர்களுக்கு இரண்டு ஆப்பிளை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்துப் பாலில் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளில் 25 வகைகள் உண்டு. ஆப்பிள் நிறம், அளவு, மணம், மிருதுத்தன்மை, சுவை இவற்றில் வேறுபடுகிறவை.

2. வாழைப்பழம் மருத்துவ பயன்கள் (Banana-Musa sp)

எந்தக் காலத்துக்கும் ஏற்றது வாழைப்பழம். உடல் வளர்ச்சிக்கு அவசியமான எல்லாச் சத்துகளும் இதில் அடங்கி உள்ளன. ஒரு பெரிய வாழைப்பழம், 20 திராட்சை, 4 பேரீச்சம் பழம், 2 அத்திப்பழம், ஒரு சிறிய ஆப்பிள், ஒரு கோப்பை ஆரஞ்சுரசம் ஆகியவற்றுக்குச் சமம். குளுகோஸ் சத்து அதிகம். இருப்பதால் வளரும் குழந்தைகள் நல்ல பலன் பெற முடியும்.

எந்தக் காலத்துக்கும் ஏற்றது வாழைப்பழம். உடல் வளர்ச்சிக்கு அவசியமான எல்லாச் சத்துகளும் இதில் அடங்கி உள்ளன.

மலைவாழை :- மலச்சிக்கலைப் போக்கி இரத்தத்தை விருத்தி செய்யலாம். மலச்சிக்கல், மலத்தீச்சல் உடையோர் தினசரி இரவில் இரண்டு பெரிய பழங்களைச் சாப்பிட்டு பசும்பால் அருந்த உபாதை நீங்கும். குழந்தைகளுக்கும் இதனை ஒரு பழம் வீதம் கொடுக்கலாம்.

நேந்திர வாழை :- கேரள மாநிலத்தில் உற்பத்தியாவது. கண் உபாசைகளை நீக்கி பார்வையை ஒளிபெறச் செய்யும்.

ரஸ்தாளி :- குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. பசிமந்தம் ஏற்படுத்தும்.

பூவன் வாழை :- பசியை உண்டுபண்ணும். அதிகம் உண்டால் பசியை அடக்கும். வாந்தி உண்டாக்கும்.

பேயன் வாழை :- நீரழிவு, பருமன், இருமல், ஜலதோஷம் மற்றும் அசீரணக் கோளாறு உள்ளவர்கள் வாழைப்பழத்தை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

இளமையின் இயற்கை ரகசியமாகப் போற்றப்படுகிற பழம் இது. திசுக்களைப் புதுப்பித்து உதவும் உடம்பின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

மலம் கழிய அதிக அளவு நீர் உட்கிரகிக்கப்பட வேண்டும் அதற்கான பெருங்குடல் இயக்கத்தை இயல்பாக்க வாழைப் பழம் உதவும்.

மூட்டுவலி, முழங்கால் வீக்கம் இருந்தால் வாழைப் பழத்தை தொடர்ந்து 3-4 நாட்கள் உணவாகக் கொள்ள பலன் கிடைக்கும் தினம் 8 அல்லது 9 வாழைப்பழங்களை மட்டுமே நோயாளி உண்ண வேண்டும்.

சமைத்த வாழைப்பூவை தயிருடன் சேர்த்து உண்ண மாதவிடாய்க்கால வலி, மிதமிஞ்சிய இரத்தப் போக்கு கட்டுப்படும். வாழைப்பூ ப்ராஜெஸ்ட் ரோன் சுரப்பியை ஊக்குவிப்பதன் மூலம் மாதவிடாய்க்கால இரத்தப் போக்கை குறைக்கும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை அடித்துக்கலக்கி மென்மையான பசை போல் செய்து கொள்ளலாம். காயங்களில் அதனைப் பரவலாகப் பூசி. துணிக்கட்டு போடலாம், இதில் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

காய்களை அவித்து உண்ணலாம். அவற்றில் 'சிப்ஸ்' தயாரித்து உண்ணலாம். வாழைப்பழம் குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் நிறைவான உணவாக அமையும்.

வாழைப்பழத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. குளிர்பதனப் பெட்டியின் தாழ்வெப்பநிலை பழங்களை முழுமையாய் பழுக்க விடாமல் தடுத்துவிடும்.

3. பேரீச்சை மருத்துவ பயன்கள் (Date Palm-Phoenix Dactylifera)

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும்கூட, அதிகாலையில் பாலுடன் பேரீச்சை உண்பது டானிக் சாப்பிட்டது போலாகும். பேரீச்சை மரத்தில் ஒரு இனிப்பான சாறுவடியும். அதை அப்படியே அருந்தலாம்.

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும்கூட, அதிகாலையில் பாலுடன் பேரீச்சை உண்பது டானிக் சாப்பிட்டது போலாகும்.

பாலில் பேரீச்சம் பழத்தை இட்டுக் காய்ச்சினால் அது சிறந்த ஆரோக்கிய பானமாகிவிடும். குழந்தைகள். பெரியவர்கள். நோயாளிகள் என்று எல்லோருக்கும் உகந்தது.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

இரவில் பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள். காலையில் அருந்த மலச்சிக்கல் தீரும். பேரீச்சம் பழத்தை தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைத்து, காலையில் அதே தண்ணீரில் பழத்தைப் பிசைந்து விதை நீக்கி உட்கொள்ளலாம். இப்படி வாரம் இருமுறை உட்கொண்டு வர இருதயம் உறுதி அடையும்.

பால் சார்ந்த பலவீனத்துக்கு பேரீச்சம்பழம் உபயோகமாக இருக்கும். ஒரு கைப்பிடி பேரீச்சம்பழத்தை வெள்ளாட்டுப் பாலில் ஊறவைத்து (இரவு முழுதும்) காலையில் அதே பாலில் உண்ண வேண்டும். இந்தத் தயாரிப்பில் ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கொள்ளவும். உறவுக்கான ஆற்றல் மேம்படும்.

4. திராட்சை மருத்துவ பயன்கள் (Grapes-Vitis vinifera)

திராட்சை சுவையான பழம். அபரிதமான சத்துக்களைக் கொண்டது என்றாலும் எளிதில் சீரணமாகக் கூடியது. பச்சை, கருப்பு, நீலம் என்று மூன்று நிறங்களில் இருக்கும்.

திராட்சை சுவையான பழம். அபரிதமான சத்துக்களைக் கொண்டது என்றாலும் எளிதில் சீரணமாகக் கூடியது. பச்சை, கருப்பு, நீலம் என்று மூன்று நிறங்களில் இருக்கும்

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

திராட்சை பழத்தால் நாவறட்சி தாகம், சரீர வெப்பம், கபக்கட்டு நீங்கும். இரத்தம் விருத்தியாகும். மூளைத் திறன் அதிகரிக்கும். திராட்சை உண்பதன் மூலம் விரும்பிய பலனைப் பெற முடியும். உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்தும் பயன்படுத்தலாம்.

வயிற்றில் ஏற்படும் எரிச்சலை அகற்றும். ஆஸ்துமாவில் திராட்சை மற்றும் திராட்சை ரசம் அற்புத பலனை அளிக்கும் என்பது டாக்டர் ஓல்டு பீல்டு என்பாரின் கருத்து.

திராட்சையில் பொட்டாசிய உப்பும், தண்ணீரும் அதிக அளவு உண்டு. சிறுநீரக அழற்சியைப் போக்கும். திராட்சை ஈரலின் இயக்கத்தைத் தூண்டும் பித்தநீர் சுரப்பை அதிகரிக்கும்.

திராட்சை இரத்தவிருத்திக்கு உதவும். குழந்தைகளின் மலச்சிக்கல், பல தொந்தரவுகளில் குணம் காண திராட்சையை பயன்படுத்துவது வீட்டு வைத்தியம்.

5. நெல்லிக்கனி மருத்துவ பயன்கள் (gooseberry-Phyllanthus acidus)

அமிர்தத்துக் கொப்பான கனி இது. நெல்லிக்கனி நீண்ட ஆயுளுக்கு உதவும் சர்வரோக சஞ்சீவினி என்பதும் பொருத்தமே. நெல்லிக்கனி குளிர்ச்சியானது. நலமூட்டுவது.

அமிர்தத்துக் கொப்பான கனி இது. நெல்லிக்கனி நீண்ட ஆயுளுக்கு உதவும் சர்வரோக சஞ்சீவினி என்பதும் பொருத்தமே. நெல்லிக்கனி குளிர்ச்சியானது. நலமூட்டுவது.
அமிர்தத்துக் கொப்பான கனி இது. நெல்லிக்கனி நீண்ட ஆயுளுக்கு உதவும் சர்வரோக சஞ்சீவினி என்பதும் பொருத்தமே. நெல்லிக்கனி குளிர்ச்சியானது. நலமூட்டுவது.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க நெல்லிக் கனியின் சாறு பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் நெல்லிச்சாறு கலந்து உபயோகிக்க முடிஉதிர்வது தடுக்கப்படும். வாந்தி, உமட்டல் போன்றவற்றிக்கு நெல்லிக்கனிச்சாறு நல்ல பலனைத் தரும்.

நரை திரை வராமல் காக்கும். வாதம், பித்தம், சிலேத்துமம் என்கிற மூன்று தோஷங்களை சமாதனப்படுத்தி உடலுக்கு உறுதியும் அழகும் தரும். இதன் சாற்றில் தேன்கலந்து கொடுத்தால் சுவாசக் கோளாறு, உட்சுரம், விக்கல், பித்த மயக்கம் குணமாகும். இதனைப் பச்சையாகத் தின்றால் பல் உபாதைகள், ஈறுபாதிப்புகள் நீங்கும்.

நுரையீரல் சயம், ஆஸ்துமா மற்றும் மார்ச்சளி நோயில் விசேஷ குணமளிக்கும். இருதய நோய் ஏற்படாமல் காக்கும். நெல்லிச் சாற்றுடன் தேன் கலந்து உண்பதால் பார்வைக் கோளாறுகள் சரி செய்யப்படும். கண்ணுக்கு ஏற்படும் இறுக்கத்தை கணிசமாகக் குறைக்கும். வயது கூடிய நிலையிலும் கிழட்டுத் தன்மை ஏற்படாமல் தடுக்கும். உடம்புக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

முடி வளர்க்கவும், நிறம் காக்கவும் நெல்லிச்சாறு உதவும். நெல்லித் தைலம் சிறந்த கூந்தல் தைலமாக அங்கீகரிக்கப் படுகிறது.

6. எலுமிச்சை மருத்துவ பயன்கள் (Lemon - Citrus limon)

ஆரோக்கியம் மற்றும் அழகுப் பராமரிப்பில் உதவும் எலுமிச்சையின் முக்கியத்துவம் அளவிடற்கரியது. அவற்றுள் ஸிட்ரிக் அமிலம் குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியம் மற்றும் அழகுப் பராமரிப்பில் உதவும் எலுமிச்சையின் முக்கியத்துவம் அளவிடற்கரியது. அவற்றுள் ஸிட்ரிக் அமிலம் குறிப்பிடத்தக்கது.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

எலுமிச்சை ஒரு அழகு சாதனம். சருமம், தலைமுடி, கைகள், பாதங்கள் மற்றும் உடம்பின் அழகுப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கிறது. சருமத்தின் நிற மாற்றங்களை சரி செய்யும். சருமத்தில் ஏற்படும் கொப்புளம் போன்ற குறைகளைப் போக்குகிறது.

தலைமுடிக்கு ஷாம்பூ செய்தபின் டீ கஷாயத்துடன் எலுமிச்சைசாறு கலந்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்துக் கொள்ளவும். சில நிமிடங்களில் கழுவி விடவும். முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்க அரை மூடி எலுமிச்சையை முகத்தில் தேய்க்கலாம்.

எலுமிச்சை சாறு தலையில் உள்ள பொடுகு, தலைமுடியில் உள்ள பிசுபிசுப்பையும் அகற்றும். பாதத்தில் வீக்கம் இருந்தால் குளித்த பிறகு எலுமிச்சை சாற்றினால் பாதத்தை தேய்க்கவும். எலுமிச்சை தோலால் தேய்க்க பற்களில் உள்ள பழுப்புக் கறைகள் மறையும்.

எலுமிச்சை வைட்டமின் சி செறிவுள்ளது 12 பேரிக்காய், 6 காரட், 6 சிறிய தக்காளியில் உள்ள வைட்டமின் சி சத்து ஒரு எலுமிச்சப்பழத்தில் இருப்பதாக மருத்துவம் தெரிவிக்கிறது.

எலுமிச்சைச்சாறு எடையில் எச்சரிக்கை காட்டுகிறவர்களுக்கு உதவும் எலுமிச்சை நீங்கள் இழந்த பசி உணர்வை மீட்டுத் தரும்.

வைட்டமின் சி அன்றாடம் உட்கிரகிக்கப்பட வேண்டிய சத்து. அது பற்றாக்குறையானால் ஈறுகள் வலுவிழக்கும். இரத்தக் கசிவு ஏற்படும். மூட்டுகளில் வீக்கம், உபாதை உண்டாகும். வைட்டமின் சி குறைபாட்டில் சொறி, சிரங்கு வரும்.

7. மாங்கனி மருத்துவ பயன்கள் (Mango - Mangifera indica)

மாங்கனியின் பிறப்பிடம் இந்தியா. ருசிமிக்க பழம். இதை மிகுதியும் உண்டால் பசி மந்தம், நெஞ்செரிவு, நமைச்சல், கிரந்தி, கரப்பான், வயிற்றுவலி, பேதி, வாந்தி உண்டாகும்.

மாங்கனியின் பிறப்பிடம் இந்தியா. ருசிமிக்க பழம். இதை மிகுதியும் உண்டால் பசி மந்தம், நெஞ்செரிவு, நமைச்சல், கிரந்தி, கரப்பான், வயிற்றுவலி, பேதி, வாந்தி உண்டாகும்.

மாம்பழம் வைட்டமின் சி செறிவுள்ளது மாங்காய் ஊறுகாய்த் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் புளிப்பன அதிக அளவு காரம் எண்ணெய் சேர்த்த ஊறுகாய் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மூட்டுவாதம், கீல்வாயு, பீனிசம் தொண்டைப்புண் உள்ளவர்கள் ஊறுகாயைத் தவிர்க்கவும்.

மாம்பழம் பசியைத் தூண்டும், நிறத்தை மேம்படுத்தும், இருதயத் தசைகளை வலுப்படுத்தும். ஈரல் கோளாறு, எடை இழப்பு மற்றும் சரீர உபாதைகளில் மாங்கனி நல்ல பலனைத் தரும்.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

மாங்கா- யுடன் உப்பு சேர்த்து உண்ண தாகம் தணியும். மங்கிய வெளிச்சத்தில் பொருட்களைப் பார்க்க முடியாத வரும், இரவில் பார்க்கும் திறன் அற்றவரும் மாம்பழம் உண்டு பார்வைத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மாங்காயை அதிக அளவு உண்ணக்கூடாது. மாங்காய தின்ற கையோடு தண்ணீர் குடிக்கக் கூடாது. மாம்பழத்தை அளவோடு உண்பவரின் குரல் இனிமையாகும். அவருக்கு உறக்கப் பிரச்சனை இருக்காது. அவருடைய நரம்புகள் வலுப்பெறும். நீடித்த ஆயுளும் கிடைக்கும். மாம்பழத்தை அரைத்து தேன்கலந்து சாப்பிட்டால் சீதபேதி, இரத்த மூலம் குணமாகும்.

8. ஆரஞ்சு மருத்துவ பயன்கள் (Orange - Citrus × sinensis)

ஆரஞ்சுப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தப் போக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுக்கப்படும். குடலின் இயக்கத்தைத் தூண்ட இரவில் படுக்கைக்குப் போகும் போதும், காலையிலும் ஒன்றிரண்டு ஆரஞ்சுகளை உண்ண வேண்டும். உணவுக் கழிவுகள் குடலில் தங்கி விடாமல் தடுத்து உதவும். அழுதால் அழுகலும், நச்சுத்தன்மை அடைவதும் தடுக்கப்படும்.

ஆரஞ்சுப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தப் போக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுக்கப்படும். குடலின் இயக்கத்தைத் தூண்ட இரவில் படுக்கைக்குப் போகும் போதும், காலையிலும் ஒன்றிரண்டு ஆரஞ்சுகளை உண்ண வேண்டும்.

தாய்ப்பால் அருந்தாத குழந்தைக்கு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம். தேன் கலந்த ஆரஞ்சுச்சாறு இருதய நோய்களில் நல்ல பலனைத் தரும். திரவ உணவு மட்டுமே பரிந்துரைக்கப்படும். இருதய நோய்களுக்கு ஆரஞ்சுச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பது பாதுகாப்பு முகப்பருவிற்கு ஆரஞ்சுத் தோலை தண்ணீர் விட்டு அரைத்துப் பூசலாம். ஆரஞ்சில் மார்மலேடு, ஜாம், ஸ்க்வாஷ் தயாரிக்கலாம்.

9. பப்பாளி மருத்துவ பயன்கள் (Papaya - Carica papaya)

பப்பாளிப் பழத்தின் தோல் மெலிசானது பப்பாளி வைட்டமின் ஏ,பி,சி செறிவுடையது. நலமளிப்பது, சீரணிப்பது, மலமிளக்கி,இளமையும் வனப்பும் தருவது.

பப்பாளிப் பழத்தின் தோல் மெலிசானது பப்பாளி வைட்டமின் ஏ,பி,சி செறிவுடையது. நலமளிப்பது, சீரணிப்பது, மலமிளக்கி,இளமையும் வனப்பும் தருவது.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

படர்தாமரை நோய்க்கு பப்பாளி விதைகளை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம். பப்பாளியை கூட்டு செய்து சாப்பிட பிரசவத்தில் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும். பப்பாளிக்காயை படர்தாமரை உள்ள இடத்தில் தேய்த்தால் குணம் கிடைக்கும்.

எளிதில் சீரணமாகக் கூடிய பழம். உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதில் உடம்பின் சத்து நீர்களுக்கு உதவும். பப்பாளிக் காயில் உள்ள பாப்பெயன் ரசம் நோய்க் கிருமிகளை அழிக்கும்.

பெண்களின் கருப்பைத் தசை நார்களை சுருங்கச் செய்வதற்கு பப்பாளிக்காய் உதவும். முறையான மாதவிடாய்ப் போக்கை நிகழ்த்தும். கன்னிப் பெண்களுக்கும் அச்சம் அல்லது குளிரில் மாதவிடாய் தடைப்படும் சமயங்களில் பப்பாளி உதவியாக இருக்கும்.

பப்பாளிப்பழச் சாற்றுடன் தேன்கலந்து கொடுக்க டிப்தீரியா, தொண்டை அழற்சி போன்ற கோளாறுகளில் நிவாரணம் கிடைக்கும்.

தோல் நீக்கிய பழத்தை மெல்லிய துண்டுகளாகச் செய்து கொண்டு அத்துடன் சீரகம், மிளகு சேர்த்து தினம் ஒருமுறை உட்கொண்டால் மலேரியா காரணமாக வீக்கமுற்ற மண்ணீரல் குணமடையும்.

10. கொய்யா மருத்துவ பயன்கள் (Common guava - Psidium guajava)

கொய்யாவை இந்தியன் ஆப்பிள் என்பார்கள் அத்தனை சத்துக்கள் நிரம்பியது. வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் அதிக அளவில் இருக்கும்.

கொய்யாவை இந்தியன் ஆப்பிள் என்பார்கள் அத்தனை சத்துக்கள் நிரம்பியது. வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் அதிக அளவில் இருக்கும்.

ஆரஞ்சுப் பழத்தைவிட மூன்றுமடங்கு அதிகமாக வைட்டமின் சி இதில் உள்ளது இப்பழம் சாப்பிட்ட பின்னர் பால், தேன், கற்கண்டு, பனங்கற்கண்டு ஏதேனும் சாப்பிட்டால் ஆப்பிளைவிட சிறந்த சக்தியை அடையலாம். இப்பழம் கிடைக்காத காலங்களிலும் தீங்கின்றி பலன் பெற வேண்டிய இப்பழத்தின் ஜாம் சாப்பிடலாம்.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

இலையை மென்று குதப்பி பற்களைத் தேய்த்தால் பல்வலி நீங்கும். கொய்யா மரப்பட்டையை நீரில் ஊறவைத்து அந்நீரைக் குடித்தால் அழுகிய ரணங்களில் குணம் தெரியும்.

பழத்தைச் சாப்பிட மலம் இளகும் பிஞ்சு வயிற்றுப் போக்கு, வயிற்றுக்கடுப்பை சரிசெய்யும். பற்களுக்கு உறுதி தரும். உடலுக்கு குளிர்ச்சி தரும். விந்துவை விருத்தி பண்ணும். இதய ஓட்டத்தை சீர்படுத்தும். அதிகம் உண்டால் பசிமந்தம் உண்டாகும். வாந்தி, உமட்டல் வரும்.

11. பலாப்பழம் மருத்துவ பயன்கள் (Jackfruit - Artocarpus heterophyllus)

பழம் சத்துக் குறைவானது ஆனால் ஆசிய நாடுகளில் முக்கிய ஆகாரப் பொருளாகப் பயன்படுகிறது. பலாப்பலத்தை அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஒரு நேரத்தில் 4-5 சுளைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது.

பழம் சத்துக் குறைவானது ஆனால் ஆசிய நாடுகளில் முக்கிய ஆகாரப் பொருளாகப் பயன்படுகிறது. பலாப்பலத்தை அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஒரு நேரத்தில் 4-5 சுளைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது.

பலாக்காய் பசிமந்தம் உண்டாக்கிய போதும் உள்ளுக்கு வலிமையும் தாதுவிருத்தியையும் கொடுக்கும்.

கொட்டை முற்றாத பிஞ்சுகளை உபயோகித்தால் பசி உண்டாகும் பலாப்பழத்தின் சுவை விரும்பி உண்ணச் செய்யும். அதன் விரும்பத்தகாத விளைவுகளை முறியடிக்க சுத்தமான தேன் சாப்பிடலாம்.

12. பேரி மருத்துவ பயன்கள் (Pear - Pyrus)

ஆப்பிளைவிட மென்மையானது பேரிச்சாறு பொங்கிப் புளித்து காடியானதும் பொரி என்கிற ஒயின் தயாரிக்கப் பயன்படும். உலகிலேயே இத்தாலியில் தான் பேரி அதிகம் பயிராகிறது. சீனா இரண்டாமிடம் வகிக்கிறது.

ஆப்பிளைவிட மென்மையானது பேரிச்சாறு பொங்கிப் புளித்து காடியானதும் பொரி என்கிற ஒயின் தயாரிக்கப் பயன்படும். உலகிலேயே இத்தாலியில் தான் பேரி அதிகம் பயிராகிறது. சீனா இரண்டாமிடம் வகிக்கிறது.

பேரியில் பலவித வைட்டமின்களும், தாதுப் பொருட் களும் உண்டு. சுரம், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு, இருமல், ஜலதோஷம், சோகை, பொது பலவீனத்துக்குப் பரிகாரம் ஆகும்.

13. அன்னாசி மருத்துவ பயன்கள் (Pineapple - Ananas comosus)

அன்னாசிப் பழத்தை துண்டு செய்து சுவைக்கலாம் அல்லது பழத்தின் சாறு எடுத்துப்பருகலாம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்படுகிறது. இப்பழத்தை உணவுக்குப் பின் உண்பதால் எளிதில் சீரணமாகும்.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

பழுக்காத காயின் சாறு பெண்களுக்கு கர்ப்பப் பையில் சுருக்கத்தை ஏற்படுத்தும். அன்னாசி இனிப்பான பழந்தான். அதற்காக அதிகம் தின்றால், தொண்டை கட்டும், வயிற்றுக் கோளாறு ஏற்படும்.

அன்னாசிப்பழத்துடன் தேன்கலந்து உண்ண வெள்ளை படுவது நிற்கும் (பெண்களுக்கு. சர்க்கரைப்பாகுடன் இப்பழத்தை உண்டு வந்தால், மண்டை குத்தல் நிற்கும்.

தலைவலி, கண், காது, மூக்கு, இருதயம், தொண்டை, நாக்கு, பற்கள் தொடர்பான உபாதைகள் தீரும்.

இப்பழம் வாந்தி, பித்தம், தாகவறட்சி. காமாலை, மாதவிடாய்க் கோளாறுகளில் நல்ல பலனை அளிக்கும். சொறி, சிரங்கை ஆற்றும். காய் சிறுநீரைப் பெருக்கும். மலத்தை இளக்கும்.

14. இலந்தை மருத்துவ பயன்கள்

சீனாவிலும், இந்தியாவிலும் காணப்படுகிறது. இலந்தைப் பழம் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். நாட்டு இலந்தை சிறியதாய் உருண்டை வடிவில் இருக்கும். சீமை இலந்தை முட்டை வடிவில் இருக்கும்.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

இலந்தைப் பழத்தின் சதைப்பகுதியுடன் மிளகாய் சேர்த்து அடை தட்டி உலர்த்தி வைத்துக் கொள்ளலாம். பழம் சாப்பிட உடல் குளிர்ச்சி அடையும். உரம் பெறும். நாவறட்சி, தாகம் தீர்க்கும். தாது விருத்தியை உண்டாக்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும். இலந்தைப்பழத்தை அதிகம் உண்டால் அசீரணம், புளி ஏப்பம் ஏற்படும். இலந்தை விதை இருமல், கண்ணோய், தொண்டைப் புகைச்சல், மலச்சிக்கல் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றில் குணமளிக்கும்.

15. சப்போட்டா மருத்துவ பயன்கள்

சப்போட்டாவின் மகத்துவம் நம்மவர்க்கு அதிகம் தெரியாது. அதனால்தான் குறைவான அளவு பயிரிடப்படுகிறது சப்போட்டா ருசிமிக்கது. மிகுதியான சக்திகளைக் கொண்டது. பழத்தின் விதைகள் சற்று பெரியதாய் கறுப்பாக இருக்கும். விதை நீக்கி பழத்தை உண்ண வேண்டும். வைட்டமின் சி சத்து நிறைந்தது.

உறக்கமின்றி அவதிப்படுபவர்கள் நன்கு உறங்க உதவும். உடம்பின் வெப்பத்தைப் போக்கும். பித்த மயக்கம் தீர்க்கும். காய்ச்சலைத் தணிக்கும்.

16. செர்ரி மருத்துவ பயன்கள்

வைட்டமின் சி செறிவுடையது. கிளைத்தண்டு, விதை மூலம் சாகுபடி செய்யபடுவது. பழத்தை அப்படியேயும் தின்னலாம். பழச்சாறு தயாரித்தும் பருகலாம். ஊறுகாய் தயாரித்தும் உபயோகிக்கலாம்.

இனிப்பு, புளிப்பு மற்றும் ட்யூக்ஸ். இனிப்பு வகையில் அமிலத்தன்மை குறைவு. உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும். இரத்த சோகை, சளி ஆகியவற்றைப் போக்கும். சளியை நீக்க செர்ரி பழத்தை தினமும் சாப்பிட்டு வரலாம்.

17. சீத்தாப்பழம் மருத்துவ பயன்கள்

நம் நாட்டில் ஆந்திர மாநிலத்தில் அதிகம் பயிராகும். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிற பழம் இது. சீரணத்துக்கு உதவக்கூடிய பழம் இது. தலைவலி உடல், வலியில் நிவாரணம் அளிப்பது. மரத்தின் இலைகளும், விதைகளும்கூட மருத்துவ ரீதியாக பலன் அளிப்பவை. இலையில் இருந்து எடுக்கப்படும் சாற்றை முன்னெற்றியில் பிரயோகிக்க தலைவலி தீரும்.

தலையில் பொடுகுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு விதைகள் உதவும். விதைகளைப் பொடியாக்கி பசை போல் செய்து முடியின் வேர்க்கால்களில் படுமாறு தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவிவிட்டால் பொடுகு மாயமாய் மறைந்து விட்டிருக்கும்.

18. உலர்ந்த திராட்சை மருத்துவ பயன்கள்

திராட்சையை உலர்த்தி புக்குவம் செய்து விட்டால் நீண்ட கெடாமல் இருக்கும். மிகவும் இனிமையான திராட்சையைத் தான் பக்குவம் செய்வது. ஊட்டசத்துக்கள் உயர் அளவில் இருக்கும்.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

பழங்காலத்தில் இருந்தே திராட்சை ஒரு உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திராட்சையை விட உலர்ந்த திராட்சையில் எட்டு மடங்கு சர்க்கரைச் சத்து அதிகம். சோர்வடையச் செய்யும் நோய்களில் உலர்ந்த திராட்சை சத்துமிக்க உணவாக அமையும்.

எளிதில் கிரகிக்கக்கூடிய அயச்சத்து திராட்சையில் அதிகம். உலர் திராட்சை இரத்தத்தைப் பெருக்கும். இவ்விதமாக சோகை நோயில் உபயோகமாகும்.

எடை குறைவாக இருப்பவர்கள் தங்கள் எடையை அதிகரித்துக் கொள்ள தினமும் 1 கிலோ உலர்ந்த திராட்சை வரை உண்ணலாம்.

நரம்புத்தளர்ச்சி நீக்கி உடலுறவு ஆற்றலை மேம்படுத்த ஆயுர்வேத மருந்துகளில் உலர்ந்த திராட்சை சேர்க்கப்படுகிறது.

19. மாதுளை மருத்துவ பயன்கள்

மற்ற பழங்களை விட எளிதில் சீரணமாகக் கூடியது மாதுளை. மாதுளை அளவில் பெரியது. ஆறுபக்கங்களைக் கொண்டது.

ஆயுர்வேத வைத்திய முறைப்படி மாதுளையில் இருந்து தாதிமஷ்டாக் சூரணம், தாதிமாவv என்ற மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சூரணம் பசி உணர்வைத் தூண்டும், குடல் வலியில் அவதிப்படுகிறவர்களுக்கு குணமளிக்கும். நாட்பட்ட வயிற்றுக்கடுப்பைத் தீர்க்க தாதிமாவலே உதவும்.

பயன்களும் மருத்துவ குணங்களும் :- 

உணவு மருத்துவத்தில் மாதுளை முக்கியப் பங்குவகிப்பது. மரம், வேர், கிளை, இலை, பூ, புறணி, விதை என்று அனைத்துப் பகுதிகளும் மருத்துவத்தில் பயன்படும்.

சுரத்திலும், நோயிலும் அவதிப்படுகிறவர்களுக்கு மாதுளம் பழச்சாறு சிறந்த முறையில் தாகம் தணிவிக்கும். அது இருதயம், ஈரல், சிறுநீரகத்தின் பேரில் வேலை செய்யும். அவற்றின் இயக்கத்தை ஊக்குவிக்கும்.

சளி மற்றும் குடல் உபாதை உள்ளவர்களின் உபாதை உள்ளவர்களின் உபாதை நீக்கும். அதிக அளவில் பேதியாகி பலவீனமுற்ற நோயாளிக்கு திரும்பத்திரும்ப 50 மி.லி. மாதுளம் பழச்சாறு கொடுத்து பருகச் செய்ய வேண்டும்.

சுரத்தில் இருப்பவரின் தாகத்தைத் தணிக்க மாதுளம் பழச்சாறுடன் சிறிதளவு குங்குமப்பூ கலந்து கொடுக்க வேண்டும். உடலில் சிவந்த புள்ளிகள் தோன்றும் நச்சுக் காய்ச்சல் இரைப்பை மற்றும் ஆஸ்துமா தொடர்பான சுரங்களுக்கு மாதுளை சர்பத் கொடுக்கலாம். வேரின் புறப்பகுதி சுரத்தைத் தடுக்க உதவும்.

கொள்ளு கசாயத்தில், ஒரு கரண்டி மாதுளை விதை அரைத்துப் பசையாக்கினதைக் கலந்து கொடுக்கலாம். சிறுநீரக சிறுநீர்ப்பைக் கற்கள் கரைந்துவிடும்.

இதனைத் தொடர்ந்து உபயோகித்து வர ஈறுகள் வலுப்படும். இரத்தக் கசிவு நிற்கும். பயோரியாவை தடுக்கும். பற்களைப் பளிச்சிட வைக்கும். நீண்ட காலம் பாதுகாக்கும்.

Previous Post Next Post