பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்

ஒரு பக்கெட்டில் மிதமான சுடுநீரை எடுத்து அதில் 10மி.லி. டெட்டாலும், 20 மி.லி. ஷாம்புவும் கலந்து நன்றாக கலக்குங்கள். பின்பு அதில் 10 நிமிடம் பாதங்களை அமுக்கி வையுங்கள். இவ்வாறு செய்வதால் கால் பாதங்களிலுள்ள அழுக்குகளும், கிருமிகளும் நீக்கப்படுவதோடு, பாதங்களின் அழகும் கூடுகிறது.

ஒரு பக்கெட்டில் மிதமான சுடுநீரை எடுத்து அதில் 10மி.லி. டெட்டாலும், 20 மி.லி. ஷாம்புவும் கலந்து நன்றாக கலக்குங்கள். பின்பு அதில் 10 நிமிடம் பாதங்களை அமுக்கி வையுங்கள். இவ்வாறு செய்வதால் கால் பாதங்களிலுள்ள அழுக்குகளும், கிருமிகளும் நீக்கப்படுவதோடு, பாதங்களின் அழகும் கூடுகிறது.

மசாஜ் கிரீம் அல்லது மாயிஸ்சரைசிங் லோஷன் கொண்டு பாதத்திலிருந்து கணுக்கால் வரை மசாஜ் செய்து வருவது பாதங்களுக்கு அழகு சேர்க்கும். பஞ்சு, நெயில் பாலிஷ் ரிமூவர் இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டு, ரிமூவரில் பஞ்சை முக்கி, கால் நகங்களில் தடவி நகப்பாலிஷைப் போக்குங்கள். நக வெட்டியால் நகத்தை சீராக வெட்டுங்கள். நகத்தை தசைப்பாகம் வரை வெட்டக்கூடாது. வெட்டினால், நகத்தின் அழகு மறைந்து குழி நகம் உருவாகி விடும். நகங்களை வெட்டியதும் மெதுவாகத் தேய்த்து சரி செய்ய வேண்டும்.

நகப் பாலிஷ் போடுவதற்கு முன்னால் ஒவ்வொரு விரலுக்கும் இடையில் பஞ்சு வைத்துக் கொள்- ளுங்கள். நகத்தில் கோட்டிங் அடித்து விட்டு தேவை- யான கலரில் நகப்பாலிஷ் போடுங்கள். இரண்டு (அ) மூன்று தடவை நகத்திற்கு பாலிஷ் பூசலாம். முடிந்ததும் அதற்கு மேல் ஒரு தடவை கோட்டிங் செய்யுங்கள். பாலிஷ் "பளிச்" என்றுத் தோன்றும்.

அழகான ஆரோக்கியமான பாதங்களைப் பெறுவதற்கு சில பயிற்சிகள்:

தினமும் காலையில் செருப்பு அணியாமல் புற்களின் மேல் நடப்பது பாதங்களுக்கு நல்ல பயிற்சியாகும். சில நிமிடங்கள் விரல்களை ஊன்றியும் பிறகு சில நிமிடங்கள் குதிகாலை ஊன்றியும் நடப்பது பாதங்- களுக்கு நல்லது.

பொதுவாக கை கீல்ஸ் செப்பல்களை அணியாமல் இருப்பது கால்வலி, குதிகால் வலி வராமல் தடுப்பதற்கு சிறந்த முறையாகும். மேலும் இறுக்கமான ஷூக்களை அணியாமல் இருப்பதும் நல்லது.

தினமும் அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங், ஜாக்கிங் செல்வது போன்றவை கால் மற்றும் பாதங்களுக்கு சிறந்த பயிற்சியாகும். ஸ்கிப்பிங் போடுவதும் கால்களுக்கான நல்ல பயிற்சி ஆகும்.

செருப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:

செருப்புகளை தேர்ந்தெடுக்கும் பொழுது அழகு மற்றும் அளவு ஆகியவற்றை பொருத்தமாக இருக்கும் படி கவனித்து வாங்க வேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு நான்கைந்து அடி நடந்து பார்த்து சரியானதாகவும் நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது.

விலை குறைந்த செருப்புகளை விட விலை கூடுதல் என்றாலும் தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்பு- களையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைந்தால் செருப்பின் ஆயுளும் குறையும், பாதங்களுக்கும் பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும்.

தரையில் வழுக்காமல் கிரிப் உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும் அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருது- வாகவும் செருப்பு இருக்க வேண்டும். மழைக் காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால் அது நடக்கும் போது வழுக்கி விடுவதுடன் துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும். வயதான பெண்களும், வாதநோய் ஏற்பட்டவர்களும் குளிரான இடங்களிலும், ஈரத்தன்மையுள்ள இடங்களிலும் செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.

பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மை- யானவை. ஆதலால் ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது அப்படி அணிந்தால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

பிளாஸ்டிக் செருப்புகளை விட தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ள- வர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும் அதிக வியர்வையும் தோன்றும். எனவே பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நலம்.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும் செருப்புகளையும், ஷூக்களையும் துடைத்து உள்ளே ஏதாவது இருக்கிறதா? என பார்த்து அணிய வேண்டும். செருப்பு, ஷூக்களுக்கு அடிக்கடி "பாலிஷ்" செய்ய வேண்டும். இதனால் செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி விடும்.

உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக அளவை கொடுத்து இன்னொருவரை அனுப்பாதீர்கள். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால் தோல் நோய்கள் ஏற்படும். ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள் அவற்றைத் தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.

Previous Post Next Post