அழகான பற்களை பெற விரும்புவர்களுக்கு:

நம் முன்னோர் காலத்தில் பற்களை கை விரலால் அல்லது வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றால் துலக்குவது வழக்கம். ஆனால் அந்தக் காலம் தற்போது மலையேறி போய் விட்டது. இந்த காலத்தில் ஒரு வயது சிறுவர்கள் முதல் 80 வயது பெரியவர்கள் வரை பல் தேய்ப்பதற்கு "பிரஷ்களையே உபயோகிக்கிறார்கள். என்ன தான் புதுப் புது வகையான பிரஷ்கள் வந்தாலும் இயற்கை அளிக்கும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி டோன்றவற்றிக்கு அவை ஈடாகாது. ஆனால் பெரும்பாலும் இவற்றால் பல் துலக்குவதற்கு யாரும் முன் வருவதில்லை.

நம் முன்னோர் காலத்தில் பற்களை கை விரலால் அல்லது வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றால் துலக்குவது வழக்கம். ஆனால் அந்தக் காலம் தற்போது மலையேறி போய் விட்டது. இந்த காலத்தில் ஒரு வயது சிறுவர்கள் முதல் 80 வயது பெரியவர்கள் வரை பல் தேய்ப்பதற்கு "பிரஷ்களையே உபயோகிக்கிறார்கள். என்ன தான் புதுப் புது வகையான பிரஷ்கள் வந்தாலும் இயற்கை அளிக்கும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி டோன்றவற்றிக்கு அவை ஈடாகாது. ஆனால் பெரும்பாலும் இவற்றால் பல் துலக்குவதற்கு யாரும் முன் வருவதில்லை.

நூற்றுக்கு தொன்னூறு சதவீதம் பேர் பற்பொடி, பற்பசை இவற்றைக் கொண்டே பற்களை சுத்தம் செய்கின்றனர். சிலர் பற்களை சுத்தம் செய்வதற்கு சாம்பல், செங்கல் தூள் போன்றவற்றை பயன் படுத்து- கின்றனர். இவ்வாறு செய்வது பற்களுக்கு கெடுதலை உண்டு பண்ணும். அதனால் பல்வலி, ஈறுவீக்கம், சீல்வடிதல் போன்றவை ஏற்பட்டு வாய் துர்நாற்றம் வீசக் கூடும்.

இவ்வாறு இல்லாமல் பற்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும், பளிச்சென இருக்கும் படியும் செய்- வதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. பல் தேய்க்கும் போது ஈறுகளை முதல் விரலை கொண்டு (ஆள்காட்டி விரல்) மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து வந்தால் ஈறுகளில் இரத்தம் கசிவது நிற்கும்.

பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்து தின்றால் பற்களிலுள்ள கறை நீங்கும். கரும்பைச் சாப்பிட்டால் பற்கள் சுத்தமாகி பலம் பெறும். ஆரஞ்சுப் பழத் தோல்களை உலர்த்தி பொடி செய்து அதனைக் கொண்டு பல் தேய்த்து வர பற்களின் கறை நீங்கும். எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர பற்கள் பளிச்சென மாறும். பல் தேய்க்கும் பிரஷ்ஷில் உப்பைத் தொட்டு எலுமிச்சைச் சாறு சில சொட்டுகளையும் சேர்த்து பல் தேய்த்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும்.

முல்தாணி மட்டியை பற்களின் மேல் தேய்த்து வந்தாலும் மஞ்சள் கறை நீங்கும். புதினா இலையை காய வைத்து பொடி செய்து அதைக் கொண்டு பல் துலக்கி வந்தாலும் பற்கள் பளிச்சென மாறும். எலுமிச்சை பழத்தோல்களை காய வைத்து பொடி யாக்கி உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து பற்களை துலக்க பற்கள் பளபளவென மாறும். கேரட்டை பச்சையாக கடித்து உண்பது பற்களுக்கு நலன் தரும். கிராம்பை வாயில் மென்று வர வாய் நாற்றம் அகலும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பற்களைத் தேய்ப்பதோடு, நாக்கையும் பிரஷ்ஷால் லேசாகத் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். நாக்கைத் தேய்ப்பது மூலம் நாக்கு சுத்தப்படுத்தப் படுவதோடு வாய் நாற்றமும் நீங்கும். சாப்பிட்ட பின்பு நன்கு வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் உப்பு கலந்த நீரினால் கொப்பளிப்பது எந்த விதமான, பல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.

பல் துலக்கும் முறை

பலருக்குப் பல் தேய்க்கும் முறை தெரிவதில்லை. பிரஷ்ஷை நட்டமாக பிடித்து குறுக்காக பற்களை சுத்தம் செய்வார்கள். அவ்வாறு தேய்க்கக் கூடாது. மேல் தாடைப் பற்களை தேய்க்கும் போது மேலிருந்து கீழாகவும், கீழ் தாடைப் பற்களை கீழிலிருந்து மேல் நோக்கியும் பிரஷ் செய்ய வேண்டும். பற்களுக்கு இடைப் பகுதியையும், பின் பகுதியையும் சுத்தம் செய்ய மறந்து விடக் கூடாது.

பற்களுக்கான பராமரிப்பு முறைகள்

தினமும் இரண்டு முறை பல் தேய்க்க வேண்டும். காலையில் பற்களின் அழகிற்காகவும், இரவில் பல்லின் ஆரோக்கியத்திற்காகவும் துலக்க பட வேண்டும். மூன்று நிமிடத்திற்கு மேல் பற்களை துலக்கக் கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்வதால் பற்களின் "எனாமல்' பாதிக்கப்பட்டு விரைவில் பல் கூச்சம் ஏற்படும்.

பிரஷ்ஷை உபயோகப்படுத்துபவர்கள் பிரஷில் உள்ள 'நார் கடினமானதாக இல்லாமல் வாங்க வேண்டும். சாப்ட், மீடியம், ஹார்டு என்ற மூன்று வகைகளில் பிரஷ்கள் தரம் பிரிக்கப் படுகின்றன. கடினமான பிரஷ்கள், ஈறுகளில் காயத்தை ஏற்படுத்தி விடும். மிகவும் பெரிதாக இல்லாத முனை அமைப்பைக் கொண்ட பிரஷ் வகைகளையே வாங்க வேண்டும். அவற்றால் பற்களின் பின்புறத்தைச் சுத்தம் செய்யவும் வாய்ப்பு இருக்கும்.

பெரும்பாலும் சாப்ட் வகை பிரஷ்களை உபயோகப் படுத்துவதே சிறந்தது. பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால், டாக்டர் சிபாரிசு செய்யும் பிரஷ்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றிக் கொண்டு 5 நிமிடம் கொப்பளித்துக் கொண்டேயிருந்து பின்பு கீழே துப்பி விட வேண்டும். 

இவ்வாறு செய்வது பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க உதவும். மேலும் தொண்டை சம்பந்தமான நோய்களும் வராது. உமிக்கரி, உப்பு, இடித்த மிளகு போன்றவற்றை பயன் படுத்தி பல் துலக்கினால் அதிக வெண்மை கிடைக்கும்.

Previous Post Next Post