ஜெராக்ஸ் (Xerox):

அமெரிக்காவைச் சார்ந்த செஸ்டர் கார்ல்ஸன் என்ற விஞ்ஞானி அசல் பிரதியை அப்படியே மீண்டும் மறுபதிவு செய்யும் கருத்தைச் சொன்னார். 1938-இல் இவர் சொல்லியபடி 'ஜெராக்ஸ் முறை' முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ஆம் ஆண்டில் முதல் ஜெராக்ஸ் இயந்திரம் இவர் ஆலோசனைப்படி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

ஃபேக்ஸ் Fax:

உலகில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செய்திகளை எழுத்து மூலம் பரிமாறிக் கொள்வதற்கு கடிதங்களைப் பயன்படுத்துகிறோம். அதுவே நொடிப்பொழுதில் தெரிவிக்க வேண்டுமெனில் தொலைபேசியை உபயோகிக்கிறோம். அது போல், காகிதத்திலுள்ள செய்திகள். படங்கள் இவற்றை உள்ளது உள்ளபடியே நொடிப்பொழுதில் அனுப்ப ஃபேக்ஸைப் பயன் படுத்துகிறோம்.

ஃபேக்ஸ் என்பது என்ன?
இதைக் கண்டுபிடித்தவர் யார்?
எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

வரைபடம். புகைப்படம் இவற்றை மின் அல்லது ரேடியோ குறிப்பலைகளின் மூலம் அனுப்பி அதை மீண்டும் மற்றொரு பேப்பரில் பெற பயன்படும் கருவியே 'பேக்சிமிலி, இதை சுருக்கமாக 'ஃபேக்ஸ்' என்கிறோம். ஆர்தர் கான் என்ற ஜெர்மானியர் தான் நடைமுறைக்குப் பயன்படக்கூடிய ஃபேக்ஸை 1902- ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்.

உலகில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செய்திகளை எழுத்து மூலம் பரிமாறிக் கொள்வதற்கு கடிதங்களைப் பயன்படுத்துகிறோம். அதுவே நொடிப்பொழுதில் தெரிவிக்க வேண்டுமெனில் தொலைபேசியை உபயோகிக்கிறோம். அது போல், காகிதத்திலுள்ள செய்திகள். படங்கள் இவற்றை உள்ளது உள்ளபடியே நொடிப்பொழுதில் அனுப்ப ஃபேக்ஸைப் பயன் படுத்துகிறோம்.

1920-ஆம் ஆண்டு முதல் செய்தித் தாள்களுக்கு செய்திகளை அனுப்புவதற்கு ஃபேக்ஸ் பயன்படத் தொடங்கியது. 1962-ஆம் ஆண்டு இந்தக் கருவி பிரபலமடைந்தது. ஃபேக்ஸ் கருவி செய்தித்தாள். வியாபாரம் தொடர்பான தகவல்களை அனுப்ப மட்டுமின்றி காவல் துறையில் கைரேகைகள், புகைப்படங்கள் இவற்றை அனுப்பவும் பயன்படுத்தப்படுகிறது.

முதன்முதலாகப் பயன்பாட்டிற்கு வந்த ஃபேக்ஸ் கருவிகள் A4 அளவு தாளிலுள்ள செய்திகள் அல்லது படங்கள் இவற்றை 6 நிமிடங்களில் அனுப்பின. அதன்பின்னர் வந்தவை 30 நொடிகளில் அனுப்பின. ஆனால் இப்போது வந்துள்ள பேக்ஸ் A4 அளவுத் தாளில் உள்ளவற்றை 4 நொடிகளில் அனுப்புகிறது.

பத்திரிகைத் துறைக்கு ஃபேக்ஸ் என்பது மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. செய்தித்தாள்களுக்கு செய்திகள் மற்றும் படங்களை விரைவாகத் தருவதற்கு ஃபேக்ஸின் பங்கு மிகமிக அவசியமாகிறது.

டைப்ரைட்டர் Typewriter (தட்டச்சு):

தட்டச்சு இயந்திரத்தை முதன்முதலாக உருவாக்கியவர் கிறிஸ்டோஃபர் ஹோல்ஸ் என்னும் அமெரிக்கர் இவர் 1868-ஆம் ஆண்டு, தம் இரு நண்பர்களான சாமுவேல் ஷலே சார்லஸ் கிளின்டன் என்பவர்களுடன் இந்தத் தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

இன்று அனைத்து மொழிகளிலும் தட்டச்சு இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பிறகு தட்டச்சு இயந்திரத்தில் மாறுதல் செய்து வளர்ச்சியடைந்தது. மின்சாரத்தாலும் கம்ப்யூட்டராலும் இயங்கும் தட்டச்சு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று ஒலிம்பியா என்னும் தட்டச்சு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம், கையில் எளிதாக எடுத்துக் செல்லக்கூடிய அளவுக்கு ஒரு சிறிய தட்டச்சு இயந்திரத்தை தற்போது தயாரித்துள்ளது.

இதில் உள்ள கம்ப்யூட்டர் 7000 குறியீடுகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இந்த 7000 குறியீடுகளும் A4 அளவில் 7 பக்கங்களில் எழுதப்பட்ட செய்திகளுக்கு சமமானது. இந்தத் தட்டச்சு இயந்திரத்தில் இன்னொரு வசதியும் உள்ளது. தட்டச்சு செய்தவற்றைத் தொலைபேசி மூலமாகவும் அனுப்பும் அமைப்பு இந்தத் தட்டச்சு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post