நீரிழிவு நோயின் தாக்கம்:

இன்று ' நீரிழிவு நோய் ' தினம் தினம் பலரை தொற்றிக் கொண்டு வருகிறது. நமது இந்திய நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் இந்த 'பணக்கார நோய்' ஏழை மக்களையும் பாதித்து வருகிறது. இன்னும் சில வருடங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு இந்த நோய் தாக்கினாலும் தாக்கலாம். உழைப்பின்மை, உணவு முறையில் மாற்றம் (அதிகமாய் மாவுச்சத்து உண்பது), அதிக மனக்கவலை, டென்ஷன், உடற்பயிற்சி இல்லாதது, பாரம்பரியம் என்று பலவிதங்களில் மக்களை தாக்குகிறது இந்த நோய். 

இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், உடல் பருமன் நோய், கண் பார்வையிழப்பு, பக்கவாதம், கால்களை இழுத்தல் போன்ற கொடூரங்களும் ஏற்படும்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இந்த நோய் ஏற்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துபோய் விடுவார்கள். காரணம் சரியான மருத்துவ சிகிச்சை இன்மையால் தான். நீரிழிவு நோய் எப்படி ஏற்படுகிறது? நாம் உண்ணும் உணவில் சர்க்கரை சத்து இருக்கிறது. அச்சத்தானது கணையத்தில் சேமிக்கப்படுகிறது. 

அங்கு சேமிக்கப்படும் அச்சத்தை தேவையானபோது இரத்தத்தில் கலக்கும் கணையம் சரியாக வேலை செய்யாதபோது, சர்க்கரை சத்தானது சிறுநீரில் கலந்து நேரடியாக வெளியேறும். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு 'நீரிழிவு' நோய் ஏற்படும். பாதிக்கப்பட்ட கணயத்தில் 'இன்சுலின்' என்ற என்சைம் சுரப்பு இல்லாததாலும் இந்த நோய் ஏற்படும் என்றும் கூறலாம்.

$ads={1}

 'இன்சுலின்' தூண்டினால் நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும். நீரிழிவு நோயாளிகளை காப்பாற்றிக் கொண்டுவரும் நீரிழிவு நோயாளிகளின் தெய்வம்  'இன்சுலின்' என்ற அற்புதமான மருந்தை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞான மேதை ஃபிரடரிக் கிராண்ட் பாண்டிங் என்பவர் ஆவார்.

இளமைப் பருவம்:

Biography of Sir Frederick Grant Banting - இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞான மேதை ஃபிரடெரிக் கிராண்ட் பாண்டிங்  வாழ்க்கை வரலாறு!!! (1891-1941)

இன்று இவரின் 'இன்சுலின்' கண்டுபிடிப்பால் கோடான கோடி மக்கள் உயிர்ப்போடு வாழ்கின்றனர். பாண்டிங் 1891 - ஆம் ஆண்டு கனடா நாட்டில் அன்டோரியா என்ற மாநிலத்தைச் சேர்ந்த 'ஆலிஸ்டன்' என்ற ஊரில் பிறந்தார். இவரின் பெற்றோர் வில்லியம் தாம்சன் பெண்டிங் மார்கரேட் கிராண்ட். பள்ளிப் படிப்பை உள்ளூரில் முடித்தார். தங்கள் மகனை பாதிரியாராக்க முடிவு செய்தனர், ஆனால் இவருக்கோ தான் சிறந்த மருத்துவராக விருப்பம். அதன்படி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்புக்கு சேர்ந்தார். அங்கு அவர் சாதாரண மாணவராகவே திகழ்ந்தார்.

1916 - ல் எம்.பி.பி.எஸ். டிகிரியை முடித்தார். ஜெனரல் பிராக்டிஸ்க்காக அவர் லண்டன் ஆண்டாரியோவில் பணியாற்றினார். இரண்டாண்டுகள் பணியாற்றி விட்டு மீண்டும் கனடா திரும்பினார். 1919 - ல் உலகப்போரில் காயம் அடைந்த வீரர்களுக்காக தினம் 16 மணி நேரங்கள் பணியாற்றினார். பல வீரர்கள் இவரின் மருத்துவ உதவியால் உயிர் பிழைத்தனர். இவரின் மருத்துவ சேவையைப் பாராட்டி மிலிட்டரி அவார்டு வழங்கி சிறப்பித்தனர். 1919-1920 - ல் ஆர்தோபெடிக் மெடிசன் படித்தார். 

1920-21 - ல் ஜெனரல் பிராக்டிஸ் (பொது மருத்துவம்) பார்த்தார். இந்த நேரத்தில் மோசஸ்பேரான் என்பவர் 'பேங்கரியாஸ்' என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை ஊன்றிப் படித்த பாண்டிங் கணையத்தின் வேலைப்பாடுகள், அதன் பாதிப்புகளால் ஏற்படும் நோய்கள், குறிப்பாய் நீரிழிவு பற்றி அக்கட்டுரை மூலம் அறிந்து அதைப் பற்றி சிந்தித்தார். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இன்சுலின் கண்டுபிடிப்பு:

இந்த நோயால் பல்லாயிரம் உயிர்கள் போவதை கண்டும் மனம் நொந்தார். இந்த நோய்க்கான மருந்தை எப்படி கண்டுபிடிப்பது? என்று சிந்தித்தபோது, அந்த நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் செயல்பாட்டில் இருந்த பேராசிரியர் 'மெக்லிட்' என்பவரை சந்தித்தார் . அவர் இதில் ஆர்வம் காட்டவில்லை. பாண்டிங் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் ஆனார். ஆனால் அவரின் கவனம் எல்லாம் நீரிழிவு நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதிலேயே இருந்தது. மீண்டும் 'மெக்லிட்'டை அணுகினார். 

பாண்டிங்கின் ஆர்வுத்தைக் கண்ட அவர் மருந்து அண்டுபிடிக்கும் வழிகளை கற்பித்தார். அவருக்கு உதவியாக சார்லஸ் பெஸ்ட் என்ற ஆய்வு மாணவரையும் அனுப்பி வைத்தார். மருந்தை கண்டுபிடிக்க இரண்டு மாதங்களே அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இருவரும் இரவும், பகலுமாக உழைத்தும் மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மருந்துக்காக முதலில் நாய்களின் கணையத்திலிருந்து சில என்சைம்களை எடுத்தனர், அவைகள் சுருண்டு விழுந்தன. மீண்டும் என்சைம்களை புகுத்த சற்றே விழித்தன. பின்னர் கன்றுகளின் கணையத்திலிருந்து என்சைம்களை எடுத்து நாய்க்கு கொடுத்துப் பார்த்தனர். 

$ads={2}

சரியாக வரவில்லை, இறந்த கன்றுகளின் கணையங்களை வாங்கி அதிலிருந்து என்சைமை பிரித்தெடுத்து, கணையம் அகற்றப்பட்டு, சர்க்கரை சத்து அதிகமான நாய்க்கு கொடுக்க, சர்க்கரை அளவு குறைவதைக்கண்டு வியந்தனர். மேலும் தீவிரமாக செயல்பட்டு 'ஐஸ்லெட்' என்ற மருந்தை கண்டுபிடித்தனர்.

மெக்லிட் அதற்கு அழகாக 'இன்சுலின்' என்ற பெயரை சூட்டினார். இன்சுலின் கண்டுபிடித்தபொழுது 1922 வாக்கில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ' கில்கிரைஸ்ட் 'என்பவர்' பாண்டிங்'கை சந்தித்து தன் நீரிழிவு பிரச்சினைகளை கூறினார். உலகின் முதல் நீரிழிவு சிகிச்சை நோயாளருக்கு 'இன்சுலின்' கொடுக்கப்பட்டது. அவர் நோயிலிருந்து மீண்டார்... பாண்டிங் குழுவிற்கு மாபெரும் வெற்றி. 'இன்சுலின்' பற்றி அறிந்த மருத்துவ உலகம் பெரும் மகிழ்ச்சியோடு இருகை கூப்பி வரவேற்றது.

சாதனை விருது:

இதற்கென்று தனி மருத்துவமனை துவக்க, கூட்டம் குவிந்தது. இன்சுலின் மருந்தை அவர்களே தயாரித்தனர். மக்கள் 'இன்சுலினை' பெற்று குணமாகினர். 'நற்குணம்' கொண்ட பாண்டிங் மக்களுக்கு மிகமிக குறைந்த விலைக்கே கொடுத்தார். நீரிழிவிலிருந்து மனித குலத்தைக் காத்த இன்சுலினை கண்டுபிடித்த பாண்டிங் மெக்லிட் இருவருக்கும் 1934 - ஆம் ஆண்டு.நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பாண்டிங் தனக்கு உதவியாக இருந்த பெஸ்டிக்கும் தனக்கு கிடைத்த பரிசு தொகையை பங்கிட்டுக் கொடுத்தார். என்னே பெருந்தன்மை பாருங்கள்! கணையத்திலிருந்து 'இன்சுலின்' சுரக்காததால் 'நீரிழிவு நோய்' வருகிறது. இன்சுலினை கொடுத்தால் கணையம் வேலை செய்து ரத்த, சிறுநீரில் அதிகப்படும் சர்க்கரையை குறைக்கிறது.

மறைவு :

இதற்கு மருந்து கண்டதும் மருத்துவ உலகம் பாண்டிங்கை தெய்வமாய் பார்த்தது. இன்று உலகம் முழுக்க பலகோடி மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் 5 கோடி மக்கள் பாதிப்புள்ளாகி இருக்கின்றனர். இவர்களை பாதுகாப்பது இன்சுலின் . இத்தகைய அற்புத காயகல்பத்தைக் கண்ட பாண்டிங் 1941 - ஆம் ஆண்டு, பிப்ரவரி 21 - ம் தேதி தன் 50 - ம் வயதில் மறைந்தது மிகப்பெரும் வேதனை. இன்சுலின் என்ற உயிர் காக்கும் மருந்தைக் கண்ட 'பாண்டிங்' பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும். அஃது உண்மை.

Previous Post Next Post