நைலான் அறிமுகம்:

இன்று நைலான் என்ற செயற்கை பட்டு நூல் பயன்படுத்தாத நாடும் இல்லை, மக்களும் இல்லை... - நைலான் சட்டை புடவை என உடைகள்... நைலான் கயிறு... நைலானால் தயாரிக்கப்பட்ட பாராசூட்... நைலானால் உருவாக்கப்படும் படகுகள்... என நைலானால் நூற்றுக் கணக்கான மக்களுக்கு... தொழிற்சாலைகளுக்கு பயன்பாடுகள் ஏராளம். நைலான் இல்லாத உலகத்தை இன்று நினைத்துப் பார்ப்பது இயலாத ஒன்று. நமது பெரும்பாலான வீடுகளில் துணி காயப்போடுவது நைலான் கயிற்றில்தானே! பருத்தியால் பருத்தி ஆடை, பட்டுப் பூச்சியால் பட்டுத்துணி என்று இருந்தபோது செயற்கையான நூலைக் கொண்டு அருமையான ஆடையை உருவாக்க முடியாதா? என்று ஒருவர் சிந்தித்தார். அவர் தயாரித்த செயற்கை இழை நூல்தான் நைலான்.

இளமைப் பருவம்:

Biography of Wallace Hume Carothers | நைலான் கண்டுபிடித்த விஞ்ஞான மேதை வாலஸ் ஹியூம் கரோதர்ஸ் வாழ்க்கை வரலாறு!!

உலக மக்களின் மேனியில் மினுமினுக்கும் நைலானைக் கண்டுபிடித்தவர் வாலெஸ் கரோதரீஸ். இவர் அமெரிக்காவில் உள்ள பர்லிங்டனில் 1896 - ஆம் ஆண்டு, ஏப்ரல் 27 - ம் தேதி ஐரா ஹ்யூமி கரோதரீஸ் மேரிமெக் முய்லின் கரோதரீஸ் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தார். ஐரா கமர்சியல் பாடம் நடத்தும் ஆசிரியர். சிறுவயதில் அறிவியல் ஆர்வம் கொண்டு படித்தார். மிசௌரியில் உள்ள தொக்கியோ கல்லூரியில் கெமிஸ்டிரி பாடம் எடுத்து படித்தார். தன் 24 வயதில் பேச்சிலர் ஆப் சயன்ஸை முடித்த அவர் யூனிவர்சிடி ஆப் இல்லினியாஸில் முதுகலை ரசயான பட்டத்தையும் முடித்தார். அதே கல்லூரியில் முனைவர் (பி.எச்டி) பட்டத்தையும் பெற்றார். 

பின்னர் ஆர்கானிக் கெமிஸ்டிரி பாடம் எடுத்து நடத்தும் ஆசிரியரானார். இரண்டாண்டுகளுக்கு பிறகு டூபாண்ட் என்ற ரசாயான தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்குதான் செயற்கையான அதே நேரத்தில் இழையாலான நூலைக் கண்டுபிடிக்க தீவிரமாய் உறுதியான ஈடுபட்டார். முதலில் 'ரப்பரி'லிருந்து இழைகளை பிரித்தெடுத்தார்; அது சிலந்திவலை போல பிய்ந்து போனது. அப்போது 'ரேயான்' என்ற பட்டு இழை புழக்கத்தில் இருந்தது. அது விலை அதிகம். விலை அதிகமில்லாத ஆடை தயாரிக்கக் கூடிய இழையை உருவாக்க முனைந்தார் வாலெஸ்.

$ads={1}

நைலான் கண்டுபிடிப்பு:

1930 - ல் சிந்தெடிக் ரப்பராலான 'நியோபிரின்' என்ற இழையை உருவாக்கினார். இது 'திக்'காகவும், வளையும் தன்மை இல்லாததுமாக இருந்தது. மேலும் தீவிரமாய்.. ஊன் உணவு உறக்கமின்றி கடுமையாய் உழைத்த வாலெஸ் 1934 - ஆம் ஆண்டில் பாலியமிட் 6-6 என்ற புதுமையான பொருளை உருவாக்கினார். இந்த பாலியமிட்டில் உள்ள அணுக்களை ஒன்றாக்கினார்; இவைகள் ஒன்றாக இணைந்தபோது பளபளக்கும்- வளையும் தன்மை கொண்ட பட்டு இழை போன்ற இழை உருவானது. இதற்கு நைலான் என்று அழகான பெயரை வைத்தார். அவரின் 'நைலான்' இழை தயாரிப்பைக் கண்ட உலகம் மிகவும் வியந்து பாராட்டி வரவேற்றது.

ஆடையில் புதியன விரும்பும் மக்கள் கூட்டம் நைலானை ஆச்சர்யமாய் பார்த்தது. தான் கண்டுபிடித்த அற்புதமான கண்டுபிடிப்பிற்கு வரவேற்பு கொடுத்த உலகம்... அதனை பெருக்க தேவையான செல்வத்தை தரவில்லை என்று மனம் நைந்தார் வாலெஸ். கடும் உழைப்பு... பணப் பிரச்னை. இவைகளால் மனச்சுமை அதிகமாகி மனநோயாளி ஆனார். சில மாதங்கள் மனநோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சாதனை விருது:

அவரின் சிறந்த கண்டுபிடிப்பை பாராட்டி 1936 - ஆம் ஆண்டு (நேஷனல் அகாடமி ஆஃப் சயன்ஸ்) மிகச் சிறந்த விருதை வழங்கி கௌரவித்தது. நைலானைக் கொண்டு என்ன செய்யலாம் என சிந்தித்தபோது அவ்விழையைக் கொண்டு அது பல் துலக்கும் பிரஷ்ஷில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் 'நைலானால்' தயாரிக்கப்பட்டது. இன்று நைலான் இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது.

மறைவு :

அத்தகைய அருமையான கண்டுபிடிப்பைத் தந்த வாலெஸ் மனப்பிரச்சினையால் 1937 - ஆம் ஆண்டு, ஏப்ரல் 29 - ம் நாள், தன் 41 - ம் வயதில் தற்கொலை செய்து கொண்டது பெரும் கொடுமை. எனினும் அவர் நைலானால் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உறுதி.

Previous Post Next Post