இளமைப் பருவம்:

Biography of Sir James Young Simpson - மயக்க மருந்தின் இன்னொரு முகம் குளோரோபாரம் மருந்தை கண்டுபிடித்த மேதை சர். ஜேம்ஸ் சிம்சன் வாழ்க்கை வரலாறு!! (1811-1871)

அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சையை பாதுகாப்பாய் செய்ய கண்டுபிடித்த வில்லியம் மார்ட்டனை போலவே அவருடைய காலத்திலேயே இன்னொரு மருத்துவரான ஜேம்ஸ் சிம்சன் என்பவரும் அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு வலி இல்லாமலிருக்க ஒரு மருந்தை கண்டுபிடித்தார். அவர் பெயர் சர் ஜேம்ஸ் சிம்சன். இவர் 1811- ஆம் ஆண்டு, ஜூன் 7 - ம் தேதி எடின்பரோவிற்கு பக்கத்திலுள்ள லின்லித் கோசுயரில் பாத்கோட் என்ற இடத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பம். தந்தை ரொட்டி சுட்டு விற்பனை செய்பவர். சிம்சன் அவருக்கு எட்டாவது பிள்ளை. சுயதொழில் செய்து கொண்டிருந்த அவர் பொருளாதாரத்தில் முன்னேற கடுமையாய் உழைத்துக் கொண்டிருந்தார்.

உள்ளூரில் படித்தார். நன்றாக படித்ததால் 14 - ம் வயதில் எடின்பரோ பள்ளியில் பல பரிசுகள் பெற்றார். வைத்திய படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 1830 - ஆம் ஆண்டு, 19 - ம் வயதில் மருத்துவராக வெளியே வந்தார். சில மருத்துவமனைகளில் வேலை பார்த்தார்  1836 - ஆம் ஆண்டு புகழ்பெற்ற மருத்துவமனையில் வேலை கிடைத்தது. 3 ஆண்டுகள் கழித்து 1839 - ல் எடின்பரோ பல்கலைக்கழக பேராசிரியரானார். நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்கையில் படும் அவஸ்தைகளை கண்டு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என சிந்தித்தார்.

$ads={1}

குளோரோபாரம் கண்டுபிடிப்பு:

அதைப் பற்றி தீவிரமாய் ஆய்வு செய்தார். 1847 - ஆம் ஆண்டு, நவம்பர் 4 - ம் தேதி தான் கண்டுபிடித்த மருந்தை ஒரு நோயாளிக்கு கொடுக்க அவர் மயக்கமானார். சிம்சன் மகிழ்ந்தார். அம்மருந்தின் பெயர் குளோரோஃபார்ம். வழக்கம்போல முதலில் மருத்துவ உலகம் இதைக் கண்டு கொள்ளவில்லை  விக்டோரியா மகாராணிக்கு கொடுத்து பரிசோதித்த பின் ஏற்றுக் கொண்டது. அறுவை சிகிச்சையின்போது இம்மருந்தை பயன்படுத்தி நோயாளி வலி உணராமல் சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். இம்மருந்தை கண்டுபிடித்ததற்காக அவருக்கு நைட் விருது வழங்கப்பட்டது. ராணியின் மருத்துவராகவும் நியமிக்கப்பட்டார். 

மறைவு :

குளோரோஃபார்மை கண்டுபிடித்த அம்மேதை 1871 - ஆம் ஆண்டு, மே மாதம் 6 - ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். எனினும் அவரை மக்கள் மறக்கவே மாட்டார்கள். இது உண்மை.

Previous Post Next Post