டீசல் இஞ்ஜின் அறிமுகம்:

இன்று 'டீசல்' இஞ்ஜின் இல்லாத நிறுவனங்களையோ கார்களையோ, மோட்டார் பைக்குகளையோ நினைத்துப் பார்க்க இயலாத நிலை. எல்லாமே 'பெட்ரோல்' என்ற மாறாத விதியாய்... சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு  தொழில்களுக்கும் , இஞ்ஜின்களுக்கும் இருந்தது. 'விலை' அதிகமாய் இருந்த பெட்ரோலால், இதற்கு மாற்று ஏதாவது கிடைக்காதா என்று தொழிலதிபர்கள் ஏங்கிக் கொண்டிருந்த காலம். 'பெட்ரோலை' கொண்டு தொழிற்சாலையை 'ஓட்டினால்' பொருட்களின் விலைகளும் அதிகமாய் இருந்தன.

இன்று வாகனங்களில் பெரும்பாலும் 'டீசல்' இஞ்ஜினையே பயன்படுத்தி ஓட்டுகின்றனர்... அரசானது... மக்களுக்கு குறைந்த அளவு 'டிக்கட் ' விலையைக் கொண்டு. 'பயணிக்க' செய்கிறது என்றால் அதற்கு மூலம் இருப்பது டீசல் இஞ்ஜின்தான் அரசாங்கத்துக்கு... பொதுமக்களுக்கு... நடுத்தர தொழில்களுக்கு, பெரும் தொழில்களுக்கு பயன்படும்படியான 'டீசல்' இஞ்ஜினை உருவாக்கிய மேதை ருடால்ஃப் டீசல்.. ஆவார்.

இளமைப் பருவம்:

Biography of Rudolf Christian Karl Diesel - டீசல் இஞ்ஜினின் பிதாமகன் ருடால்ஃப் டீசல் வாழ்க்கை வரலாறு (1858-1913)

அழகின் சிகரமான பிரான்ஸ் நாட்டில் எலிஸ் டீசலுக்கும், தியோடர் டீசலுக்கும் மகனாய் 1858 - ஆம் ஆண்டு, மார்ச் 18 - ம் தேதி பிறந்தார். தந்தை புத்தக பைண்டராக தொழில் செய்தார். இளம் வயதில் பள்ளிப் படிப்பை பிரான்ஸில் முடித்த அவர் உயர்நிலைப் படிப்புக்காக ஜெர்மனி சென்றார். தான் இஞ்ஜினியரிங் படிக்கப் போவதாக 14 - வயதில் பெற்றோருக்கு கடிதம் எழுதினார். தன் விருப்பப்படி ராயல் பவேரியன் பாலிடெக்னிக் (முனிச் நகரம்) கில் சேர்ந்து 'இயந்திரவியல்' படித்தார். பட்டம் பெற்ற அவர் பிரான்ஸ் திரும்பினார். 

அங்கு புகழ்பெற்ற 'ஐஸ்' நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இயந்திரத்தை இயக்கும் 'இயக்குனராக அந்த நிறுவனத்தில் பதவி ஏற்றார். 1883 - ஆம் ஆண்டு மார்த்தா பிளாஸ்ஜி என்பவரை மணந்தார். தான் ஏதாவது புதுமையாய் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தொழில் நகரமான ஜெர்மனிக்கு 1890 - ஆம் ஆண்டு சென்றார்.

டீசல் இஞ்ஜின் கண்டுபிடிப்பு:

அங்கு ஒரு கனரக இயந்திர தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு உள்ள ஆய்வுக்கூடத்தில் நீராவி பற்றியும், வெப்பம் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரும்பாலான தொழிற்சாலைகளில் 'நீராவி' இஞ்ஜின்களையே பயன்படுத்தி வந்தனர். செலவும் அதிகம். நீராவி சரியாய் வரவில்லை எனில் இஞ்ஜின்களும் 'வேலை' செய்யாது பெட்ரோல் இஞ்ஜின்களும் அடிக்கடி ஸ்டிரைக் செய்தன. விலையும் அதிகம். ரயில்கள் மற்றும் கனரக வகனங்கள் 'நீராவியிலேயே' இயங்கின. இதனால் எரிக்கும் சக்தியில் சுமார் 80 முதல் 90 சதவீதம் வீணாவதை உணர்ந்தார். காரணம் நீராவிக்கான எரிசக்தி நிலக்கரி மூலம் கிடைக்கிறது என்பதால்தான். 

நிலக்கரியை எவ்வளவு கொட்டினாலும் கிடைப்பது குறைந்த எரிசக்தியே. இதனால் உடலுழைப்பும், நேரமும், செலவும் வீணாவதையும் உணர்ந்தார் டீசல். இதற்கு மாற்றுவழியை கண்டுபிடிக்க முடிவு செய்தார். தனது அயராத உழைப்பால் புதிய இஞ்ஜினை கண்டுபிடித்தார். பெட்ரோல் இஞ்ஜினை விடவும் திறன் வாய்ந்ததாகவும் அது அமைந்தது. விலை மலிந்த திரவம் ஒன்றின் மூலம் எரிபொருள் சிக்கனமான திரவத்தின் மூலம்... அந்த இஞ்ஜின் மிக அற்புதமாக இயங்கியது. அவர் கண்டுபிடித்த டீசல்... ஆம் திரவம் அந்த திரவத்திற்கு அவர் பெயரையே சூட்டினார். ஆம் அவர் கண்டுபிடித்த இஞ்ஜினே டீசல் இஞ்ஜினாகும்.

இன்று பெரும்பாலான வாகனங்கள், தொழில்களில் டீசல் இஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவரின் கண்டுப்பிடிப்பை அறிந்த தொழில் உலகம் அவரை மிகவும் பாராட்டியது. பெட்ரோல்... நீராவிகளை விலக்கி விட்டு 'டீசல்' இஞ்ஜினையே பயன்படுத்த முனைந்தன. அவரின் 'புகழ்' உலகெங்கும் பரவ, அவரை லண்டனில் உள்ள பெரும் தொழில் நிறுவனம் அவரோடு ஒப்பந்தம் செய்து கொள்ள அழைப்பு விடுத்தது.

மறைவு :

அவரும் 1913 , செப்டம்பர் 13 - ம் தேதி 'கப்பலில்' கிளம்பினார். அன்றிரவு அவர் இரவு உணவு உண்டுவிட்டு, தன்னை அதிகாலை எழுப்புங்கள் என்று சொல்லி படுக்கப் போனார். மறுநாள் அவர் படுக்கையில் இல்லை.. 10 நாட்கள் கழித்து அவரின் உடல் 'கடலில்' மிதந்தது. உலகிற்கு உன்னதமான இஞ்ஜினை கண்டுபிடித்த மேதையின் மரணத்தை கண்டு உலகமே அதிர்ந்தது. அவர் மறையும்போது வயது அதிகமில்லை. 55 மட்டுமே. இன்று 'டீசல்' வாசனை உங்கள் மூக்கை துளைத்தால் அங்கே 'ருடால்ஃப் டீசல்' நினைவில் எழுவார் என்பது நிஜம். இன்றைய மனிதகுல முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாய்த் திகழ்ந்த அவரை என்றும் மறவோமாக!

Previous Post Next Post