எலக்ட்ரானின் அறிமுகம்:

 'அணு' என்றதும் 'இன்றைக்கு' பெரும்பாலோருக்கு நினைவுக்கு வருவது அணுகுண்டு தான்  அணுகுண்டு  என்றதும் ஐன்ஸ்டீன்தான் நினைவில் எழுவார். இவருக்கு முன்பே 'அணு'வைப் பற்றியும் , அதனுள் வியாபித்திருக்கும் அணுத்துகள்கள் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் ஆராய்ந்து உலகிற்கு வெளிப்படுத்தியவர் ஜே.ஜே.தாம்சன் என்ற இயற்பியல் விஞ்ஞானிதான். இவர் இங்கிலாத்திலுள்ள மான்செஸ்டர் நகரில் உள்ள சீத்தம்ஹில் என்ற இடத்தில் 1856 - ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் பதினெட்டாம் நாள் பிறந்தார். அவரின் தந்தை நகரில் புத்தகக் கடை வைத்திருந்தார். இந்தத் தொழிலை அவர்கள் தலைமுறை தலைமுறையாய் நடத்தி வந்தனர்.

இளமைப் பருவம்:

Sir Joseph John Thomson OM PRS was a British physicist and Nobel Laureate in Physics, credited with the discovery of the electron, the first subatomic particle to be discovered.

சிறுவயதிலேயே தாம்சனுக்கு புத்தகங்கள் மேல் விருப்பம் ஏற்பட்டிருந்ததால்... அவர் சிறுகதைகள்... அறிவியல் நூல்களை விரும்பிப் படித்தார். பள்ளியில் சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார். அவர் 14 - ம் வயதில் மான்செஸ்டர் கல்லூரியில் சேர்ந்தார். 16 - ம் வயதில் அவரின் தந்தை திடீரென மரணமடைய, தன் படிப்பு தொடராதோ என்று பயந்தார். ஆனால் நண்பர்களின் உதவியோடு, கல்வி உதவிப் பணமும் அவரை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் 'இயற்பியல்' பாடத்தை எடுத்து படிக்க வைத்தது. கணிதத்திலும், இயற்பியலிலும் மிகச் சிறந்த திறமையான மாணவராய்த் திகழ்ந்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக சேர்ந்தார். இதோடு கூட அய்வுக்கூடத்தின் தலைமையாளராகவும் அமர்த்தப்பட்டார்.

எலெக்ட்ரான் கண்டுபிடிப்பு:

1884 ஆண்டு  அங்கு அவர் அணுவைப் பற்றிய ஆய்வில் தீவிரம் காண்பித்தார். அவருக்கு முன்னரே அணுவுக்குள் புரோட்டான். எலெக்ட்ரான், நியூட்ரான் போன்ற அணுத்துகள்கள் இருப்பதாய் ஆய்வு செய்து கூறினாலும், தாம்சன் அவர்கள்தான் அணுவுக்குள் மிகமிக முக்கியமான அணுத்துகளாக திகழும் 'எலெக்ட்ரானின்' செயல்முறையை விளக்கி, இதுவே அணுசக்திக்கான மிகவும் வேண்டிய-தேவையான ஒன்று என ஆய்வில் நிரூபித்தார். 

1897 - ஆம் ஆண்டு , ஏப்ரல் 30 - ம் தேதி எலெக்ட்ரானின் முக்கியத்துவத்தை உலகிற்கு அறிவித்தார். மேலும் எலெக்ட்ரானின் வேகம் நொடிக்கு 1,60,000 மைல் என்று கணித்துக் கூறினார். எலெக்ட்ரானின் பயன்களை பலவிதங்களில் அவர் கூறினார். தொலைக்காட்சிப் பெட்டியில் 'இதன்' பணி முக்கியமானதாக திகழ்கின்றது... இதனை எடைபோட்டும் காண்பித்தார். மேலும் ஹைட்ரஜன் அணுவில் நாலாயிரத்தில் ஒரு அளவே கொண்டதாக எலெக்ட்ரான் இருப்பதாக கண்டறிந்தார். அணுவை பிரிக்கின்றபோது பல்வேறு கிளை ஆய்வுகளையும் மேற்கொண்டார். 

அதில் ஒன்று கேத்தோட் கதிர் ஆய்வு. மினசாரம் ஊட்டப்பட்ட மிக நுண்ணிய அணுக்களே 'இக்கதிர்' என்று மெய்ப்பித்தார். மேலும் வாயுக்களும் மின்சாரத்தைக் கடத்தும் என்று புதிய விளக்கத்தை உலகிற்கு அறிவித்தார். இந்த உண்மையை பலர் ஏற்றுக் கொண்டாலும் சில விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

சாதனை விருது:

வாயுக்களானது மின்சாரத்தை எளிதில் கடத்தும் என்பதை மெய்ப்பித்ததற்காக அவருக்கு 1906 - ஆம் அண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முதல் உலகப்போரின்போது போர் தளவாடங்களுக்கு தேவையானவைகளை உருவாக்க தாம்சனின் உதவி தேவைப்பட்டது. தாம்சன் அணு ஆய்வு மேதையாக மட்டுமின்றி ஆய்வு மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். இவரிடம் ஆய்வக மாணவராக இருந்த சிலர் நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர் என்பதே அவரின் சிறப்பு.  இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரூதர் ஃபோர்டு. 

மறைவு :

84 வயது வரை டிரினிட்டி கல்லூரியில் ஓய்வின்றி பணியாற்றிய அவர் அதே வயதில் 1940 - ஆம் அண்டு மறைந்தார். ஆக்கமும், அமைதியும் ஒருங்கே கொண்ட தாம்சனின் எலெக்ட்ரான் கண்டுபிடிப்புகள் ராடார், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்ற முக்கிய கருவிகளில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு தேவையான அளவில் பாட புத்தகங்களையும், ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

இவரின் மகனும் மிகச்சிறந்த விஞ்ஞானியே. பெயர் ஜியார்ஜ் பாகெட் தாம்சன். படிகக்கல்லின் வழியே எலெக்ட்ரான்கள் செல்லும்போது என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கின்றன என்பதை ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார் அவர் . 'அணுகுண்டுக்கு' உதவாமல் அணுவினுள் உள்ள துகள்களை உலகிற்கு பயன்படுத்திய தாம்சனை என்றும் மறவோமாக!

Previous Post Next Post