பளு தூக்கும் இயந்திரம் (Crane) உருவான வரலாறு.

இன்று சரக்குகளை ஏற்ற, இறக்க அதிக எடையுள்ள பொருட்களை தூக்க 'கிரேன்' (Crane) களை பயன்படுத்துகிறார்கள். கட்டுமான துறை, கப்பல்துறைமுகம்... பெரிய பெரிய கனரக நிறவனங்களில் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள பொருட்களை தூக்குவது சுலபமான விஷயம். இந்த அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் கருவியை கண்டுபிடித்து, இன்றைய பலவகை பளுதூக்கும் (Crane) கருவிகளுக்கு முன்னோடியாக இருந்தவர் ஜோசப் ஹென்றி.

காலிங்பெல் (Door Calling Bell) உருவான வரலாறு.

அக்காலத்தில் வீடுகளில் 'காலிங்பெல்' (Door Calling Bell) என்ற ஒன்று இருந்ததில்லை. வெளியிலிருந்து வருபவர்கள். ஒன்று கையில் தட்டுவார்கள் (இன்றும் தொடர்கிறது) அல்லது வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் தடியால் தட்டுவார்கள்.... இல்லையெனில் கதவு பிடியோடு தொங்கும் சங்கிலியால் தட்டுவார்கள்.

ஜோசப் ஹென்றியின் இளமைப் பருவம் மற்றும் அவரின் கண்டுபிடிப்புகள்.

Biography of Joseph Henry - 'காலிங்பெல்' மற்றும் பளு தூக்கும் இயந்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானி ஜோசப் ஹென்றி யின் வாழ்க்கை வரலாறு (1797-1878)

இன்று 'காலிங்பெல்' (Door Calling Bell) என்ற எலக்ட்ரிக் டோர் பெல்லையும் கண்டுபிடித்தவரும் இவரே. அமெரிக்காவில் நியூயார்க் (New York) பகுதியில் 'ஆப்னி' (Albany) என்ற இடத்தில் 1797 - ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 17 - ம் தேதி வில்லியம் ஹென்றிக்கும், ஆன் அலெக்சாண்ட் ஹென்றிக்கும் மகனாய் பிறந்தார். எளிய குடும்பம் ஏழ்மை குடி கொண்டிருந்தது. படிக்க ஆசைப்பட்டாலும் பெற்றோரால் படிக்க வைக்க முடியாத வறுமை நிலை. 

என்றாலும் படிப்பின் மேலுள்ள ஆர்வத்தால் ஒரு பண்ணையில் வேலை செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு, தனது பள்ளிக் கல்வியை சிறந்த முறையில் படித்து முடித்தார். பள்ளியில் சிறந்த மாணவராக திகழ்ந்ததால் அதே பள்ளியில் அவர் ஆசிரியரானார். ஆசிரியர் ஆன பின்பும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரின் 'கணித' அறிவை அறிந்த உள்ளூர் கல்லூரி அவரை கணித பேராசிரியராக உயர்த்தியது. மாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் சொல்லிக் கொடுக்க... மாணவர்கள் 'தேனில்' விழுந்த ஈக்களாய் மாறினார்கள்.

அவர்களுக்கு கணிதத்திலிருந்து ஏதாவது கண்டுபிடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக மின்காந்தத்தின் மீது அவருக்கு அளப்பரிய ஆர்வம் உண்டானது. மேலும் மின்காந்தம் பற்றிய நூல்களை படித்தார். புகழ்பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானியான 'வில்லியம் ஸ்டாஜியன்' (William Sturgeon) என்பவர் மின்காந்தத்தின் மூலம் பளுவான பொருட்களை தூக்க உதவும் கருவிகளை கண்டுபிடிக்கலாம் என்றார்.

அதை வேதவாக்காகக் கொண்டு 2300 கிலோ எடையுள்ள இரும்பை தூக்கும் கருவியை கண்டுபிடித்தார் ஜோசப் ஹென்றி(Joseph Henry). இதோடு மட்டுமின்றி மேலும் சில கருவிகளையும் கண்டுபிடித்தார். ஒருநாள் தன் நண்பர் நீண்ட நேரமாக தன்னை அழைத்ததாகவும், பின்னர் வெளியே வராததால் தான் வீடு திரும்பி விட்டதாகவும் கூற பூட்டப்பட்ட கதவுக்கு வெளியிலிருந்து உள்ளிருப்பவர்கள் அறிய ஒரு கருவியை கண்டறிய வேண்டும் என்று அவர் சிந்தித்ததன் விளைவாக ஏற்பட்டது தான் கீர் ... கீர் ... என்று சப்தமிடும் காலிங்பெல். (Door Calling Bell) இன்று ஆயிரக்கணக்கான வடிவங்களில் பல்வேறு வகைப்பட்ட சப்தங்களில் காலிங்பெல்  உருவாக்கப்படுகிறது என்றாலும் அதன் மூலத்திற்கு உரியது ஜோசப் ஹென்றியின் கண்டுபிடிப்புதான்.

இன்று தந்தி ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதற்கும் மூலமாக இருந்தவரும் இவர். தந்தியை கண்டுபிடித்தவர் சார்லஸ் மோர்ஸ் (Charles W. Morse) என்றாலும் அதனை கண்டுபிடிக்க வழி வகுத்தவர் ஹென்றியே. இவரின் மின்காந்தத்தை வைத்தே மோர்ஸ் தந்தியை கண்டுபிடித்தார். வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது அயராத உழைப்பின் மூலம் பல அரிய மக்களுக்கு பயன்படும் பல கருவிகளை கண்டுபிடித்த ஹென்றி அவர்கள் 13 May 1878 - ஆம் ஆண்டு தனது 81 - ம் வயதில் வாஷிங்டன் டிசி (Washington, D.C ) யில் இவ்வுகை விட்டு மறைந்தார் என்றாலும் அவரின் கருவிகள் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

Previous Post Next Post