மைக்ரோ ஓவன் (Microwave Ovens) வரலாறு அறிமுகம்

ஆதிகால மனிதர்கள் ‘சிக்கி - முக்கி' கல்லை தேய்த்து நெருப்பை உண்டாக்கி சமைத்தார்கள் காலமாற்றத்தில் மண் அடுப்பில் சமைத்தார்கள். பின்னர் மண்ணெண்ணெய் ஸ்டவ் வந்தது. அதனை தொடர்ந்து 'பம்ப்' ஸ்டவ் வந்தது இதற்கு அடுத்து இன்று பெரும்பாலோர் வீட்டில் இருக்கும் 'கேஸ் Gas' ஸ்டவ் வந்தது. ஓரளவு வசதியானவர்கள் வீடுகளில் இன்று இருப்பது மைக்ரோ ஓவன் (Microwave Ovens) பயன்படுத்தி வருகிறார்கள் அலுவலகங்களுக்கு செல்லும் தம்பதிகளுக்கு மிகவும் குறுகிய காலத்தில் சமைக்க ஓவன் உதவுகிறது. இந்த மைக்ரோஓவனை கண்டுபிடித்த விஞ்ஞானி பெர்ஸி ஸ்பென்சர். இந்த உபகரணத்தை இவர் எதிர்பாராத தருணத்தில் கண்டுபிடித்தார் என்பதே அதிசயம்.

பெர்சி ஸ்பென்சர் இளமைப் பருவம்:

Biography of Percy Spencer - மைக்ரோஓவன் கண்டுபிடித்த மாமேதை பெர்சி ஸ்பென்சர் வாழ்க்கை வரலாறு

இவர் 1894 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் சிறந்த பள்ளி ஒன்றில் கல்வியைத் தொடர்ந்தார். திடீரென்று தந்தை மறைய, படிப்புக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. மாமா, அத்தை வீட்டில் வளர்ந்தார் தனக்கென எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணிய பெர்ஸி தனது 12 - ம் வயதில் காகிதத் தொழிற்சாலையில் ஒரு எலக்ட்ரீஷியனுக்கு உதவியாளராக சேர்ந்தார். ஆர்வத்தோடு அவ்வேலையைக் கற்றுக் கொண்டார். மின்சாரத்தினை பற்றி நிறைய படித்தார் அவரின் 'கற்பூர' அறிவைக் கண்டு நிறுவன முதல் நிலை ( சீஃப் ) எலக்ட்ரீஷியன் தனக்கு உதவியாளனாக சேர்த்துக் கொண்டார். கொடுக்கும் எந்த பணியையும் சோம்பலின்றி மளமள வென்று செய்யும் அவரின் வேகப்பணியால் அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. 

அவருக்கு திடீரென தந்தி முறையை கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பி அதையும் கற்று தெளிந்தார். இதன் விளைவாக முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும்போது தகவல்களை தந்தி மூலம் (உடனுக்குடன் அறிந்து கொள்ளும்படியாக செய்திகளை அனுப்பும் பிரிவில்) அனுப்பும் சாதனத்தை தயாரிக்கும் பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது. அப்பணியை மிகவும் துரிதமாக செய்ததால் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிலையில் அவருக்கு 'ரேடார்' நிறவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. 1920 ஆண்டு. சுமார் 20 ஆண்டுகள் அங்கு பணி புரிந்ததால் அவருக்கு 'மேக்னெட்ரான்' என்ற ரேடாரின் முக்கிய கருவியை தயாரிக்கும் பொறுப்பை நிறுவனம் வழங்கியது.

இந்தக் கருவியின் முக்கிய பணியானது மைக்ரோவேவ் ரேடியோ (Microwave Radio) குறியீடுகளை சிக்னல்களை வெளிப்படுத்தும் குணத்தைக் கொண்டது. இந்த ரேடியோ சிக்னல் மூலமாகத்தான் ரேடார். பணியாற்றும். பெர்ஸி மேக்னெட்ரான் கருவியை துரிதமாக தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தார். ஒருநாளில் அந்த நிறுவனம் 10 மேக்னெட்ரான் கருவிகளை தயாரித்தது என்றால் இவர் பதவி ஏற்றதும் ஒரு நாளில் 2000 த்திற்கும் மேற்பட்ட கருவிகளை உருவாக்கியது. இதற்கு காரணம் பெர்ஸியின் கடினமான உழைப்புதான் குடும்பம் ஒன்று இருப்பதையே மறந்து இரவும் பகலும் உழைத்தார். அவரின் உழைப்பைக் கண்ட நிறுவனம் அவருக்கு பெரும் பதவி வழங்கியது.

இவர் நேரத்திற்கு அதாவது வேளாவேளைக்கு சாப்பிடுவது கிடையாது. தன் பேண்ட் பாக்கெட்டில் சாக்லெட்டுகளை வைத்துக் கொண்டு அவ்வப்போது சாப்பிடுவார். அதுதான் உணவு ஒருநாள் (1945 - ல்) அவர் மேக்னெட்ரான் குழாயை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது பேண்ட் பாக்கெட்டிலிருந்த சாக்லெட் உருகி வழிவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அவர் இந்த மேக்னெட்ரானுக்கு எதையும் உருக்கும் தன்மை அதாவது ஒரு பொருளை நெகிழ வைக்கும் தன்மை இருப்பதை உணர்ந்த அவர் உணவு சம்பந்தப்பட்ட பொருட்களை இதன் முன் வைத்தால் சமைத்து விடும் என்று எண்ணினார்.

மறுநாள் ஒரு சிறு தட்டில் சில சோளத்தை மேக்னெட்ரான் முன் வைத்தவருக்கு பெரும் ஆச்சர்யம் வைத்த அத்தனை சோளங்களும் பொறிந்தன. அதனைப் பார்த்ததும் வியந்து போனார். அடுப்பின்றி மேக்னெட்ரானிலிருந்து உருவாகும் ரேடியோ அலைகள் மூலம் உணவுப் பொருட்கள் சமைக்கப்படும் என்று அறிந்தார். இதனைக்கொண்டு வேகமாக சமைத்து விடலாம் என்பதை தெரிந்து கொண்டார் உணவுப் பொருட்களை சமைக்கும்படியான அடுப்பை உருவாக்க முனைந்தார். சற்றே பெரியதான கூண்டுடன் அடுப்பை கண்டுபிடித்தார். காலப்போக்கில் இன்றைய அழகான அளவில் மைக்ரோஓவன்(Microwave Ovens) உருவானது. எனினும் இன்றைய மைக்ரோஓவனுக்கு ஆதிமூலகர்த்தா பெர்ஸி ஸ்பென்சர்தான் என்பதில் மிகையில்லை.

வறுமையின் பிடியில் 12 வயதில் (குழந்தைத் தொழிலாளியாய்) வேலைக்கு சேர்ந்து தனது அறிவியல் அறிவால் ... இன்று கோடிக்கணக்கான மக்கள் விரைவில் சமைக்கும் படியான அற்புதமான உபகரணத்தை கண்டுபிடித்திருக்கிறார் பெர்ஸி. இன்று மைக்ரோஓவன் (Microwave Ovens) மூலம் அதிவிரைவான சமையலால் பெண்கள் சற்றே ஓய்வெடுக்கவும் அந்த ஓய்வின் மூலம் குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடவும் அவர்களால் முடிகிறது. பெரும்பயனுள்ள ஓவனை உருவாக்கிய மாமேதை 1970 - ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரின் கண்டுபிடிப்பால் காலம் காலமாய் வாழ்வார் என்பது நிஜம்தானே.

Previous Post Next Post