அறுவை சிகிச்சை (Surgery) உருவான வரலாறு

ஒரு காலத்தில் அறுவை சிகிச்சை (Surgery) என்றாலே மனிதன் அலறினான் அதைவிட சாவதே மேல் என்று பயத்தில் தற்கொலை கூட செய்து கொண்டான். அக்காலத்தில் மருத்துவ முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை என்பது கொடூரமான வலியுடன் இருந்தது. இதைவிட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (transferring organs) என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது. இன்று சுலபமானதாக மாறிவிட்டது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. (transferring organs) பல மருத்துவ விஞ்ஞானிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பற்றி சிந்தித்திருப்பார்கள். ஆனால் செயல்படுத்த முடியாமல் போயிருக்கும்.

இன்று 'சர்க்கரை' நோயினால் (Diabetes disease) பாதிக்கப்பட்டவர்களின் முதல் சேதம் 'சிறுநீரக நோய்' (Kidney disease) தான் சர்க்கரை நோயை சரியான முறையில் கட்டுப்படுத்தவில்லை எனில் சிறுநீரக நோய் உண்டாகிறது. மேலும் உப்பை அளவுக்கு மீறி உண்பவர்களை சீறுநீரக நோய் தாக்குகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அதை மாற்றினால்தான் மனிதன் உயிர் வாழ முடியும்.

ஜோசப் எட்வர்ட் முர்ரே இளமைப் பருவம் மற்றும் அவரின் சாதனைகள்

Biography of Joseph Edward Murray - சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை கண்டறிந்த மாமேதை ஜோசப் எட்வர்ட் முர்ரே அவரின் வாழ்க்கை வரலாறு (1919-2012)

உயிர்காக்கும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில் செய்து இன்று பலகோடி மக்களை வாழ வைத்த தெய்வம் டாக்டர் ஜோசப் எட்வர்ட் முர்ரே என்பவர் ஆவார். இவர் அமெரிக்காவில் மில்ஃபோர்ட் என்ற இடத்தில் 1919 - ஆம் ஆண்டு ஏப்ரல் 1 - ம் தேதி வில்லியம் முர்ரே - மேரி தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் மில்ஃபோர்ட் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். சிறுவயதிலேயே மருத்துவத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்று வெளியே வந்தார் அவர் பொது மருத்துவத்தை விட அறுவை சிகிச்சை மருத்துவத்தில் விருப்பம் கொண்டிருந்தார். குறிப்பாக அப்போது வளர்ந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை (Plastic Surgery) சிகிச்சையில் தன் கவனத்தை செலுத்தினார். தீப்புண், உடைந்த உறுப்புகள் போன்ற 'காயங்களை' உடலின் வேறு பகுதியிலிருந்து திசுக்களை எடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஒட்டி சிகிச்சை செய்து குணமாக்கி வந்தார்.

மேலும் அவர் உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை பற்றி ஆய்வு நடத்தி வந்தார். இருதய மாற்று அறுவை சிகிச்சை பற்றியும், கல்லீரல் மற்றும் கணையம் மாற்று சிசிச்சை பற்றியும் ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டு வந்தன இரண்டாம் உலகப் போரின்போது சுமார் 1000 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு 'பிளாஸ்டிக் சர்ஜரி' (Plastic Surgery) மூலம் அவர்களின் காயங்களை சீர்படுத்தினார். அறுவை சிசிச்சையை மிகவும் அருமையாக செய்து வந்ததால் அவர் புகழ் வெளி உலகில் பரவியது. அவர் பிரிக்ஹோம் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வை நடத்தினார்.

ஒரு குழந்தையின் உடலிலிருக்கும் தோலை எடுத்து பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையின் உடலில் பொருத்தினால் நன்றாக பொருந்திக் கொள்கிறது என்பதை அறிந்தார். அதாவது ஒன்றை மற்றொன்று ஏற்றுக் கொள்கிறது என்பதை கண்டறிந்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் உன்னதத்தை பற்றி உலகறியச் செய்ய அவருக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. 1954 - ஆம் ஆண்டு, டிசம்பர் 23 - ம் நாள். இரட்டையர்களான ரொனால்டு ஹெர்ரிக், ரிச்சர்ட் ஹெர்ரிக் என்பவர்கள் இவரை நாடி வந்தனர்.

ரிச்சர்ட் ஹெர்ரிக் சிறுநீரகங்கள் செயல் இழந்து விட்டதாக கூறினார். அவரின் இணையான ரொனால்டுவை பரிசோதித்தார். அவரின் இரு சிறுநீரகங்களும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்தன. முர்ரே... ரொனால்டோவின் அனுமதியுடன், அவரின் ஒரு சிறுநீரகத்தை எடுத்து, ரிச்சர்ட் ஹெர்ரிக்கு பொருத்தினார். இந்த அறுவை சிகிச்சை ஐந்து மணிநேரம் நிகழ்ந்தது. ஆம் உலகில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுதான். இந்த அறுவை சிகிச்சை மருத்துவ உலகின் மாபெரும் சாதனை. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விடியல். உலக மருத்துவர்கள் முர்ரேவின் சாதனையை பாராட்டினர்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தோஷ மூச்சு விட்டனர். இரட்டையர் அல்லாமல் ... உறவே இல்லாதவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. உறவுகளே (சொந்தங்கள்) இல்லாத பட்சத்தில் சில பரிசோதனைகளுக்கு பின்னர் சிகிச்சை செய்ய முடியும் என்று கண்டார். 1959 - ஆம் அண்டு இரட்டையர் அல்லாத ஒருவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தார். இவரின் இந்த செய்கை மருத்துவ உலகில் புதுவிதமான புத்துணர்ச்சியை கொடுத்தது. முர்ரேயை உலகமே பாராட்டியது . சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் பிதாமகன் என்று கௌரவித்தது.

1962 - ஆம் ஆண்டு மிக உன்னதமான சாதனையையும் படைத்தார். எவரும் எதிர்பாராத சாதனை இறந்தவரின் உயிரற்றவரின் உடலிலிருந்து எடுத்த சிறுநீரகத்தை உயிருடன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தி இமாலய சாதனையை படைத்தார். சிறுநீரக நோய் வராமலிருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அவரின் கட்டுரைகள் இன்று மருத்துவ பொக்கிஷம். அதன் பின் சிறுநீரக அறுவை சிகிச்சையை எளிதாக்க பாடுபட்டார்.

Biography of Joseph Edward Murray - சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை கண்டறிந்த மாமேதை ஜோசப் எட்வர்ட் முர்ரே அவரின் வாழ்க்கை வரலாறு (1919-2012)

மனித வரலாற்று மருத்துவ சாதனை படைத்த அவருக்கு 1992 - ஆம் ஆண்டு உலக சாதனை விருதான நோபல் பரிசு கிடைத்தது. ஆம் தனது 70 - ம் வயதில் இப்பரிசை பெற்றார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உழைத்த அப்பெருமகன் 2012 - ஆம் ஆண்டு, நவம்பர் 26 - ம் நாள் மண்ணுலகை விட்டு மறைந்தார் என்றாலும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒவ்வொருவரும் முர்ரேயை தொழவே செய்வர். இது உறுதி.

Previous Post Next Post