பென்ஸ் கார் (Benz Car) உருவான வரலாறு!

இன்று இந்தியாவில் 'கார்களின்' பெருக்கம் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. ஓரளவுக்கு நல்ல வருவாய் உள்ளவர்களிலிருந்து பெரும் பணக்காரர்கள்வரை கார் வாங்குவது சர்வ சாதாரணமாகி விட்டது. ரூ .1 கொடுத்து 'காரை' வாங்கிச் செல்லுங்கள் என விளம்பரங்கள் பேசுகின்றன.

ஒரு காலத்தில் 'சைக்கிள்' வைத்திருப்பவர் 'பணக்காரர்' இப்போது 'கார்' வைத்திருப்பவரை கூட பணக்காரர் என்று சொல்வதில்லை, காரணம் கார் சாதாரண இல்லத்திற்கு தேவையான ஒன்றாகி விட்டது. இந்தியா என்றாலே அம்பாசிடர், (இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள் இது வருத்தமான விஷயம்) பியட், பிறகு மாருதி சுசுகி, இம்பாலா என கூறுவார்கள். உலக அளவில் போர்டு, பென்ஸ், பிஎம்டபிள்யூ... ஆர்டிக் என வரிசையாய் பல விலை உயர்ந்த கார்கள் வலம் வந்தன.

இதில் 'பென்ஸ்' காருக்கு தனித் தன்மை உண்டு ... மிகவும் விலை உயர்ந்த வாகனம் அது. அக்காரை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களாக - கோடீஸ்வரர்களாக மட்டுமே இருக்க முடியும். இன்று 'கோடிகளில்' விளையாடும் கார் இது. ஆமாடி இவர் பெரிய்ய.... பென்ஸ் கார் வைச்சிருக்கிற மாதிரி பேசுறார்... என்பார்கள் பேச்சுவாக்கில். பென்ஸ் காரின் இருப்பானது மிக உயர்ந்த ஸ்தானத்தின் அடையாளம் எனலாம்.

கார்ல் பென்ஸ் இளமைப்பருவம் மற்றும் சாதனைகள்!

Carl Friedrich Benz, sometimes also Karl Friedrich Benz, was a German engine designer and automotive engineer. His Benz Patent Motorcar from 1885 is considered the first practical automobile and first car put into series production. He received a patent for the motorcar in 1886

மதிப்பு வாய்ந்த சொகுசு 'பென்ஸ்' காரின் பிதாமகன் கார்ல் பென்ஸ். இவர் ஜோஹனன் ஜார்ஜ் பென்ஸ் என்பவருக்கும் ஜோசபைன் வாலேவயலண்ட் அம்மையாருக்கும் 1844 - ஆம் ஆண்டு, நவம்பர் 25 - ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

இவரின் முழுப் பெயர் கார்ல் பிரடரிக் மைக்கேல் பென்ஸ். லோகோமோடிவ் டிரைவரான இவரின் தந்தை இரண்டரை வயது மகனையும், இளம் மனைவியையும் விட்டுவிட்டு ஒரு விபத்தால் மறைந்தார்.

வறுமைப் பிடியில் குடும்பம் தள்ளாடினாலும் கார்லின் தாய் மகனை படிக்க வைப்பதில் பின்தங்கவில்லை. கார்லும் தாயின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து நன்கு படித்தார். அவருக்கு சிறு வயதிலேயே இயந்திரங்களை இயக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் 15 வது வயதில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படிக்க தொடங்கினார்.

சுமார் நான்காண்டுகள் படிப்பிற்குப்பின் கல்லூரியை விட்டு திறன் வாய்ந்த இஞ்ஜினியராக வெளியே வந்தார். அவருக்கு மாட்டு வண்டிகள் ... குதிரை வண்டிகள் ... இரு சக்கர சைக்கிள் போவதுபோல நான்கு சக்கர வாகனத்தையும் இயக்க வேண்டும் என்று எண்ணி கற்பனையில் பல வரைபடங்களை வரைந்து தள்ளினார்.

1863 - ல் கல்லூரியை விட்டு வெளியே வந்த அவர் பல 'இஞ்ஜினியரிங்' நிறுவனங்களில் பணியாற்றினார். ஆக்சைடு இரிட்டர் என்ற நண்பர் ஒருவரோடு சேர்ந்து இயந்திரவியல் பட்டறையை துவக்கினார். இயந்திரங்களின் சுழற்சிகளை அறிந்தார் தானே ஒரு நான்கு சக்கர வண்டியை தயார் செய்தார் அது மெல்ல நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். அதை தனது கை சுழற்சியால் சிறிது தூரம் தானாகவே ஓடும்படி செய்தார்.

அவரின் எண்ணம் பெட்ரோலால் தானாக இயங்கும் இஞ்ஜினை உருவாக்க வேண்டும் என்பதே . 1872 - ல் பெர்தா ரிங்கர் என்பவரை மணந்தார். மனைவிக்கும் இயந்திரவியலில் ஆர்வம் இருப்பதைக் கண்டார். இருவரும் இணைந்து செயலாற்றும் ஒரு சிறு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தார். இருவரும் இரவும் பகலுமாக உழைத்து பல இஞ்ஜின் வடிவங்களை உருவாக்கினர் என்றாலும் 1879 - ஆம் ஆண்டு மிகவும் அருமையான இரு ஸ்ட்ரோக் இஞ்ஜினை வடிமைத்தனர். இதற்கு காப்புரிமை பெற்றனர். மேலும் இவர்கள் வாகனங்களுக்கு தேவையான வாட்டர் ரேடியேட்டர், மின்கலம் மூலம் தீப்பொறி உண்டாக்கும் கருவி ஸ்பார்க்பிளக், கிளட்ச், கியர் ஷிஃப்ட் போன்ற முக்கிய கருவிகளை கண்டுபிடித்தனர். தங்களது கண்டுபிடிப்புகள் மூலம் நான்கு சக்கர வாகனம் சாலையில் பெட்ரோலின் சக்தி மூலம் இயங்க முடியும் என்பதை அறிந்து மகிழ்ந்தனர்.

1883 - ஆம் ஆண்டு மார்க்ஸ் ரோஸ் மற்றும் பிரிட்டிக் எஸ்லிங்கர் உடன் பென்ஸ் அண்டு கம்பெனி. ரெயினிசி காஸ்மோட் ரைன் பேட்ரி, என்னும் பென்ஸ் & சி என்ற கம்பெனியை நிறுவினர். அந்த நிறுவனத்தின் மூலம் 1886 - ஆம் ஆண்டு உலகில் முதல் பெட்ரோலால் இயங்கும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு சாலையில் ஓட ... அறிஞர்கள் முதல் சாதாரண மக்கள்வரை அந்தக் காரை (வாகனம்) ஆச்சர்யத்தோடு பார்த்து மகிழ்ந்தனர். அக்காரின் உபயோகத்தைக் கண்டு உலகமே வியந்தது. கார்ல் பென்ஸின் வாகனத்தை பாராட்டிய உலகம் அது தங்கள் பயன்பாட்டிற்கு மிகவும் உதவும் என்றும் போற்றவும் செய்தது. மக்கள் சிரமமின்றி காரைக் கண்ட கார்ல் 1895 - ஆம் ஆண்டு உலகின் முதல் டிரக்கை கண்டுபிடித்தார். ஆம் உலகின் முதல் லாரியையும் அவரே கண்டுபிடித்தார்.

1906 - ஆம் ஆண்டு பென்சிசோனே என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினார். புதிய புதிய வடிவங்களில் கார்களை உருவாக்கினார். கசொலின் என்ற பெட்ரோல் மூலம் முதல் காரை உருவாக்கிய அவர் சொகுசான சாலையில் செல்வதே தெரியாத அளவிலான காரை உருவாக்கி பேரும் 'புகழும்' செல்வமும் குவித்தார். ஓய்வே அறியாமல் உழைத்து உலகிற்கு கார்களையும் லாரிகளையும் உருவாக்கிய அவர் தனது சொத்துக்களை மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு 1929 - ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 - ம் தேதி உடல் நலிவின் காரணமாய் இவ்வுலகை விட்டு மறைந்தார் என்றாலும் பென்ஸ் காரும், லாரியும் இவ்வுலகில் இயங்கும்வரையில் இவரின் பெயரும் உலகில் வாழும் என்பது உண்மைதானே!

Previous Post Next Post