நிக்ஹோலோன்யக் (Nick Holonyak) வாழ்க்கை வரலாறு

இன்று நகரங்களில் அங்கங்கே சிக்னல்கள் அமைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறோம் பச்சை, சிவப்பு, மஞ்சள், என்ற ஒளி (light) நிறங்களை காண்கிறோம். குறிப்பாய் பேருந்து, இரயில்வேக்களில் சிவப்பு நிற ஒளியானது மிகவும் முக்கியமானது. சிவப்பு நிற ஒளியை வெளிப்படுத்தும் பொருளை டையோடின் (diode) என்பார்கள். இந்த 'டையோடின்' (diode) இல்லை எனில் சிவப்பு நிற ஒளி (light) நிச்சயம் இல்லை என்றே கூறலாம். இந்த சிவப்பு நிறத்தை வெளிப்படுத்தும் சாதனத்திற்கு 'எல்.இ.டி' (LED) என்று பெயர். அதாவது ஆங்கிலத்தில் லைட் எமிட்டிங் டையோடு ( Light Emitting Diode ) என்பது முழுப் பெயர். எல்.இ.டி (LED) என்ற மின்னும் பொருள் இல்லாத எலக்ட்ரானிக் கருவிகள் இல்லை எனலாம்.

லைட் எமிட்டிங் டையோடு ( Light Emitting Diode ) என்கிற LED Light டை கண்டுபிடித்த மாமேதை விஞ்ஞானி நிக்ஹோலோன்யக் ( Nick Holonyak ) வாழ்க்கை வரலாறு(1926)

குறிப்பாய் இன்று 'லைட்' இல்லாத செல்போனே கிடையாது எனலாம். கேமரா செல்போனில் 'பிளாஷ்' மின்னுகிறதே ... அதனை மின்னவைப்பது எல்.இ.டி. (LED) தான், சிவப்பு விளக்குகளின் ஒளிகள் எங்கெங்கு ஒளிர்கிறதோ அந்த ஒளியை உலகுக்கு தந்தவர் நிக்ஹோலோன்யக். ( Nick Holonyak ) ஒளியின் நாயகனான அவர் 1928 - ஆம் ஆண்டு. நவம்பர் 3 - ம் தேதி அமெரிக்காவில் உள்ள ஜீக்லர், இல்லினாய்ஸ், என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதில் விளக்குகளை கூர்ந்து பார்ப்பார், அதன் வெளிச்சத்தில் நனைவது அவருக்கு பிடித்தமான விஷயம். 

மின்சாரம் சம்பந்தப்பட்ட படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இஞ்ஜினியரிங் பாடம் எடுத்து படித்தார். 1951 - ஆம் ஆண்டு அப்படிப்பை சிறந்த முறையில் முடித்தார். BS 1950, MS 1951 முனைவர் ( பி.எச்டி ) பட்டம் விரும்பி 1954 - ல் அதையும் முடித்தார்.

முனைவர் பட்டத்தின் போது மாறுபட்ட நிறங்களில் ஒளியின் தாக்கம் எப்படி என்பதை ஆராய்ந்தார். முனைவர் படிப்பு முடிந்தது. புகழ்பெற்ற ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கும் விதவிதமான 'ஒளிச்சிதறல்'களை பற்றியே ஆய்வு மேற்கொண்டார்.

லைட் எமிட்டிங் டையோடு ( Light Emitting Diode )

லைட் எமிட்டிங் டையோடு ( Light Emitting Diode ) என்கிற LED Light டை கண்டுபிடித்த மாமேதை விஞ்ஞானி நிக்ஹோலோன்யக் ( Nick Holonyak ) வாழ்க்கை வரலாறு(1926)

அந்த நிறுவன கண்டுபிடிப்பாளர்கள் மின் ஒளிர் தன்மை கொண்ட 'கல்லியம் ஆர்சினைடு' என்ற பொருள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இது மின்சாரத்தின் மூலம் ஒளிரும் தன்மை கொண்டது. இந்தக் கருத்தை முன்வைத்து 1962 - ஆம் ஆண்டு சில விஞ்ஞானிகள் புதிய விளக்கத்தை 'கல்லியம் ஆர்சினைடு' பற்றி வெளியிட்டார்கள்.

அதாவது கல்லியமான மின்சாரத்தை அகச்சிவப்பு ஒளியாக மாற்றிவிடும் குணத்தை பெற்றிருப்பதாக கண்டுபிடித்து கூற 'நிக்' கிற்கு தன் ஆய்வுக்கு இந்த ஒளி (light) மாற்றம் பேருதவி புரியும் என நினைத்து மகிழ்ந்தார்.

அப்போது அவர் 'டையோடை'  (diode) என்னும் புதிய பொருளை உருவாக்கும் பணியில் தீவிரமாய் இருந்தார். டையோடானது கல்லியம் ஆர்சினைடோடு இணைந்து சிவப்பு நிறத்தில் அழகான ஒளியை உமிழ்வதை கண்டறிந்தார். மேலும் அவர் டையோடு (diode)  வழியே லேசரை உருவாக்கி சாதனை படைத்தார்.

இவர் ஆர்சினைடில் பாஸ்பரஸைக் கலந்து ஆய்வு மேற்கொண்டபோது அது சிவப்பு நிறத்தில் ஒளியை கொடுத்தது. இது 1962 - ல் நிகழ்ந்தது. எல்.இ.டி. (LED) என்ற சாதனமானது இன்று உலகெங்கும் சிவப்பு நிறத்தில் ஒளிர்கிறது. மேலும் எல்.இ.டி. மூலம் விளக்குகளை எரியவைத்து அதில் வெற்றி கண்டார்.

இந்த எல்.இ.டி. (LED) பல்புகள் குறைந்த மின்சாரத்தையே கடத்துகிறது. இப்பல்புகள் பல மணி நேரங்கள் எரியும் தன்மையையும் கொண்டவை. சிவப்பு நிற ஒளி (light) உமிழ்வதற்கு காரணமான எல்.இ.டி. இன்று உலகில் எங்கும் பயன்படுத்தப்படுகிறது. உங்களிடம் கேமரா செல்போன் இருக்கிறது இதை பயன்படுத்தி ஒரு பொருளை படம் எடுக்கிறீர்கள்.

அப்போது நீங்கள் பிளாஷை உபயோகப்படுத்துகிறீர்கள். 'பளிச்'  சென்று மின்னுகிற பிளாஷ் என்ற ஒளி (light). அந்த சிறிய மின்னொளிக்கு ஆதிமூலம் எல்.இ.டி. (LED) தான். இந்த எல்.இ.டி(LED)யை கண்டுபிடித்த 'நிக்' மிகவும் போற்றத்தக்கவர் என்பது நியாயமே.

Previous Post Next Post