ஸ்டென்ட் (Stent) என்கிற ஆஞ்சியோபிளாஸ்டி உருவான வரலாறு.
'இதயத்தாக்குதல்' ஏன் ஏற்படுகிறது? இன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ரத்தக் குழாயில் அதிக அளவில் கொழுப்பு படிந்து படிந்து ரத்தம் இதயத்திற்கு போகாமையால் ... இதயம் 'பம்ப்'பின் வேலையை சரிவர செய்ய முடியாமல் ஒரு கட்டத்தில் 'தன் பணியை' நிறுத்தி விடுவதால் ... மனிதன் மரணமடைகிறான். இதயதாக்குதல் ஏற்பட்ட ஒருவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும், மருத்துவர் உடனே அவரை பரிசோதித்து பாதிக்கப்பட்டவரின் கொழுப்பு படிந்த குழாயை(தமனி) நீக்கி அங்கே சிறியதாக ஒரு குழாயை செருகி உயிரை காப்பாற்றுவார். அந்த குழாயின் பெயர் 'ஸ்டண்ட்' (Stent) என்பதாகும். இதனை 'குழாய் (தமனி) அடைப்பு நீக்கி' என்று தமிழில் கூறலாம். இந்த உயிர்காக்கும் 'ஸ்டண்ட்' என்ற கொழுப்பை படிய விடாத ரத்தக்குழாயை சுருங்க விடாத குழாயை கண்டுபிடித்து பல்லாயிரம் இதய நோயாளர்களை இதன் மூலம் காப்பாற்றி - இன்று இதய நோயாளியின் காக்கும் தெய்வமாய் போற்றப்படுபவர் ஜூலியோ பால்மாஸ். (Julio Palmaz) இவர்தான் 'ஸ்டண்ட்' (Stent) என்ற குழாயை உருவாக்கினார்.
டாக்டர் ஜூலியோ பால்மாஸ் (Julio Palmaz) இளமைப் பருவம் மற்றும் அவரின் கண்டுபிடிப்புகள்.
அப்போது அவரின் வயது 32 (1977) அங்கு புகழ்பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவமனையில் கதிரியக்க மருத்துவத் துறையில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் கற்றார் பயிற்சியும் பெற்றார் அம்மருத்துவமனையில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தார் பின்னர் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சான் ஆண்டானியோ என்ற இடத்தில் அமைந்திருந்த அறிவியல் பிரிவின் 'ஆஞ்சியோகிராபி' (Angiography) மற்றும் மருத்துவத்துறையின் தலைவராக அவர் சேர்க்கப்பட்டார். கதிரியக்க அங்கு அவர் இருதய நோயாளிகளின் அவதிகளுக்கு மாற்றாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆலோசனை செய்தார்.
ஸ்டென்ட் (Stent) என்கிற ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) யை கண்டறிந்தார்.
இதயத்திற்கு செல்லும் தமனி (Artery) - குழாயில் சில நோய்களின் காரணமாய் கொழுப்பு படிந்து இரத்தம் செல்வது சிரமமாய் இருப்பதையும், இதனால் நோயாளிகள் அடிக்கடி இறப்பதையும் கண்டு இறப்பை தடுக்க என்ன செய்யலாம் என்று பல்லாண்டுகள் யோசித்தார். அதற்கான காரியத்தில் தீவிரமாய் இறங்கினார்.
அவரின் தீவிர ஆய்வின் கண்டுபிடிப்பே 'ஸ்டண்ட்' (Stent) அதாவது கொழுப்பு படிவதால் 'ரத்தக்குழாய்' (Blood vessel) சுருங்கிவிடுகிறது. இதனால் இரத்தம் 'பம்ப்' ஆவதில் சிரமம் தடை ஏற்படுவதால் 'ஆர்ட்' அட்டாக் (heart attack) என்ற இதய தாக்குதலால் மரணம் உண்டாகிறது. இரத்த குழாயில் எந்த இடத்தில் சுருங்குகிறதோ அந்த இடத்தில் ஸ்டண்ட்டை பொருத்தினால் இரத்தம் சீராக செல்லும். இதனால் இதய நோய்களை தவிர்க்கலாம் என்றார் பால்மாஸ் (Julio Palmaz).
வழக்கம்போல இதற்கும் எதிர்ப்பு கடுமையாகவே இருந்தது. பால்மாஸே (Julio Palmaz) பல இதய நோயாளிகளுக்கு ஸ்டண்ட் (Stent) வைத்து அவர்களை காப்பாற்றினார். இதை நேரடியாக கண்ட இதயநோய் நிபுணர்கள் ஸ்டண்ட்டை பயன்படுத்துவது நல்லது என்பதை உணர்ந்தனர். இதய அறுவை சிகிச்சை செய்யும்படியான நோயாளிகளுக்கும் ஸ்டண்ட்டை பொருத்தி அவர்களை அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றினார். இன்று அவர் ஸ்டண்ட்டை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்டெண்டையும் தயாரித்து பயன்படுத்தி வருகிறார். 'ஸ்டண்ட்'டினால் இன்று லட்சக்கணக்கான மனித உயிர்கள் பிழைத்து வாழ்கின்றன. மனித உயிரைக் காக்கும் ஸ்டண்ட்டானது உலகத்தையே மாற்றிய ஒரு உபகரணமாக மருத்தவ உலகத்தாரால் போற்றப்பட்டது. ஆயுளை குறைத்த இதய நோயாளிகளின் ஆயுளை நீடிக்க வைக்கும் 'ஸ்டண்டை' (Stent) கண்டுபிடித்த ஜூலியோ பால்மாஸ் (Julio Palmaz) மனித தெய்வங்களில் ஒருவராவார் என்பதில் ஐயமில்லை. இவரின் மனைவி அமாலியா பால்மாஸ் (Amalia Palmaz) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
இன்று உலகின் தலைசிறந்த இதய நோய் நிபுணராக வலம் வருகிறார். பல பல்கலைக்கழகங்கள் அவரின் சொற்பொழிவுக்காக காத்திருக்கின்றன பல விருதுகளை பெற்ற அவர் இதய நோயாளிகளுக்காக தன் புதிய கண்டுபிடிப்புகளை எளிமையாக்கி கொடுக்க தீவிரமாய் செயல்பட்டு வரும் அவரை என்றென்றும் இதய நோயாளிகள் நினைத்துக் கொண்டே வாழ்வர்.