ஆல்பர்ட் புரூஸ் சாபின் வாழ்க்கை வரலாறு

இன்று நமது நாட்டில் போலியோ (Polio) என்ற இளம்பிள்ளைவாத நோயை அடியோடு ஒழித்துக்கட்டி விட்டார்கள் என்று பெருமைப்படுவதற்கு மூலகாரணமான இரு மருத்துவ மேதைகளை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் ஜோனஸ் எட்வர்ட் சால்க். இவர் தடுப்பூசி மூலம் Polio வை தடுக்க உதவினார். மற்றொருவர் (Albert Bruce Sabin) ஆல்பர்ட் புரூஸ் சாபின். இவர் Polioவை ஒழிக்க 'சொட்டு மருந்தை' கண்டுபிடித்து பிறக்கும் குழந்தைகள் நோயின்றி வாழ வழி வகுத்தார். அம்மேதை ரஷ்யாவின் ஆட்சிக்குட்பட்ட போலந்தில் 1906 - ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26 - ம் தேதி பிறந்தார். பெற்றோர் ஜோசப் - ஜில்லி க்ருக்மேன் சபர்ஸ்டெய்ன். 

போலியோ சொட்டு மருந்தை கண்டறிந்த மாமேதை ஆல்பெர்ட் புரூஸ் சாபின் (Albert Bruce Sabin) வாழ்க்கை வரலாறு(1906-1993)

சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கினார். போலந்தில் பிரச்சினை ஏற்பட்டதால் 1922 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியது குடும்பம். மருத்துவப் படிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தை அறிந்த அவரின் பெற்றோர் அவரை அக்கல்வியை கற்க நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விட்டனர். 1931 - ல் மருத்துவ கல்வியை முடித்தார். பின்பு ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார். சால்க் போலவே குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கால்கள் சூம்புவதை கண்டு வேதனைப்பட்ட அவர் அதற்கான மருந்தை உருவாக்க தீவிரமானார். 1934 - ல் அவர் தி லிஸ்டர் ஆப் இன்ஸ்டிட்டியூட் ஆப் பிரிவெண்டிவ் மெடிசன் நிறுவனத்தில் இணைந்தார்.

போலியோ சொட்டு மருந்து(Polio Vaccine)

இங்கிலாந்திலிருந்த அந்த நிறுவனத்தில் ' Polio' வுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க முனைந்தார். பின்னர் அமெரிக்காவின் இன்ஸ்டிட்டியூட்டிலும் தன் ஆய்வை தொடர்ந்தார். ராக்பெல்லர் நோய்கள் பற்றியும், மருந்துகளின் செயல்பாடுகள் பற்றியும் தன் ஆய்வில் முக்கியமாகக் கருதினார். 1957 - ஆம் ஆண்டில் அவர் Polio எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். சுமார் 1 கோடி மக்களுக்கு அம்மருந்தை சொட்டுக்களாக கொடுத்து பரிசோதனை செய்தார் ... ஆம் மனிதர்களுக்கு முதன் முதலில் வாய்வழியே சொட்டு மருந்தை வழங்கினார். பரிசோதனை 1961 - ஆம் ஆண்டுவரை நீடித்தது. அப்பரிசோதனையில் Polio சொட்டு மருந்து 'போலியோ' வைரஸை தாக்கி, அதை தலைதூக்காமல் செய்து நோயில்லாமல் செய்தது.

போலியோ சொட்டு மருந்தை கண்டறிந்த மாமேதை ஆல்பெர்ட் புரூஸ் சாபின் (Albert Bruce Sabin) வாழ்க்கை வரலாறு(1906-1993)

1962 - ஆம் ஆண்டு மருத்துவ உலகம் Polio நோய் எதிர்ப்பு சொட்டு மருந்தை அங்கீகரித்தது. இச்சொட்டு மருந்தை தினமும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு, அவர்கள் Polio என்ற இளம்பிள்ளைவாத நோயிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். Polioவின் கொடுமையால் ஊனமாகி இருண்ட வாழ்வுக்கு தள்ளப்பட்ட குழந்தைகள் Sabin அவர்களின் அரிய கண்டுபிடிப்பான Polio சொட்டு மருந்தால் ... வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்வு வாழ்ந்து மகிழ்கிறார்கள். Polio இளம்பிள்ளைவாத சொட்டு மருந்தை உலகிற்கு வழங்கிய அம்மாமேதை 1993 - ம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதியன்று வாஷிங்டன் டிசியில் இதய செயல் இழப்பால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

சாவின் பிடியிலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய (Albert Bruce Sabin) ஆல்பர்ட் புரூஸ் சாபின் தெய்வப் பிறவி என்றே கூறலாம். Polio சொட்டு மருந்தை அருந்தும் குழந்தைகளின் தாய்மார்கள் Sabin அவர்களை நினைத்துப் போற்றுவது நமது கடமையாகும்.

Previous Post Next Post